ஈரோடு.சி.சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல்
சீனத் தேசிய அதி உயர் அறிவியல் தொழில் நுட்ப விருது வழங்கும் விழாவில் சீன தலைமையமைச்சர் வென்சியாபாவின் உரையின் சாராம்சத்தை செய்தி விளக்கத்தில் கேட்டேன். புதிய அறிவியல் தொழில்நுட்பகளை உருவாக்குவதில், உலகளவில் புரட்சிகர முன்னேற்றங்களில் முன்னனிப்பாதையில் சீனா இறங்கவும், மேலதிக சமூகத் திட்டப் பணிகளில் அறிவியல் தொழில்நுட்ப ஆதரவு முக்கியப் பகுதியாக இருப்பதை வலுப்படுத்துவதையும், சர்வதேச நிதிநெருக்கடியை சமாளிப்பது சீனாவின் முக்கிய அனுபவமாக இருக்கவும், வருகின்ற அறைகூவல்களை வாய்ப்பாக மாற்றி செய்படவும் அவர் கெட்டுக் கொண்டார். அறிவியல் துறையில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சீனா திகழ வேண்டுமென விருது வழங்கும் விழாவில் வென்சியாபாவ் ஊக்கமூட்டினார். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு சீனா அளிக்கும் முக்கியத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது.
திருச்சி அண்ணாநகர் வீ.டிஇரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவில் தொடர் வண்டிகள் பயணித்த மொத்த தூரம், 86 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியுள்ளமை அத்துறையில் சீனா கண்டுள்ள வளாச்சியை விளக்கியது. இது, உலகில் இரண்டாவது இடம் வகிப்பது மகிழ்ச்சியான தகவல். திட்டமிட்ட கொள்கைகளின் செயல்பாடுகளால் 2008 ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு இத்துறை 80 விழுக்காடு வளாச்சி கண்டுள்ளது. இதனால் உள் நாட்டுத் தேவையை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியும் தூண்டப்பட்டிருப்பது ஒரு துறையில் ஏற்படும் வளர்ச்சி இன்னொரு துறையில் செல்வாக்கு ஏற்படுத்தி வளர்ச்சிக்கு உதவுவதை காட்டுகிறது.
வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில், பெய்ஜிங் மாநகரம் தொடர்பாக நான் எழுப்பிய வினாக்களுக்கு சுவையான முறையில் விடையளித்தமைக்கு எனது நன்றிகள். குறிப்பாக, ஒரு சீனப் பாடல் பின்னணியில் மெதுவாக ஒலிக்க, கலையரசி அவர்கள் பெய்ஜிங்கின் வரலாறு பற்றி விவரித்தபோது, என்னுள் இனம்புரியாத இன்ப உணர்வு ஏற்பட்டது. பெய்ஜிங் மாநகரின் பல்வேறு பகுதிகள், பெய்ஜிங் மாநகரம் உருவான வரலாறு, அதன் பல்வேறு பெயர்கள், அதன் மத வரலாறு என பல்வேறு தகவல்களை சுவைபடத் தொகுத்து வழங்கியதற்கு எனது பாராட்டுக்கள். மேலும், மீனாவின் புத்தாண்டுரையை கேட்டபோது, கடந்த ஆண்டு, சீனாவில் பயணம் மேற்கொண்டபோது நெகிழ வைத்த செயல் நினைவுக்கு வந்தது. எனது பயணத்தின் முதல் நாளில் சீன வானொலிக் கட்டிடத்தில் நுழைந்தபோது, மீனாவும் வான்மதியும் நான் எழுதி அனுப்பிய வான் அஞ்சல் கடிதங்களை தங்கள் கைகளில் ஏந்தி என்னிடம் காட்டி வரவேற்றார்கள். அது எனது வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வாகும்.
சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
ஒரு நாட்டை பற்றி பிற நாட்டினர் முழுவதும் புரிந்துகொள்ள உதவுவது சுற்றுலா. சென்ற ஆண்டில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சுமார் 55 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா மேற்கொண்டதன் மூலம் திபெத் தன்னாட்சி பிரதேசம் உலக சுற்றுலாவில் தனக்கான முக்கிய இடத்தை பெற்றுவிட்டது. இந்த இலக்கை எட்ட சீன சுற்றுலா துறை மேற்கொண்ட அரிய முயற்சிகள் சீனாவையும், திபெத் தன்னாட்சி பிரதேசத்தையும் உலக மக்கள் முழுமையாக அறிந்து கொள்ள வழிவகுக்கும்.
தென்பொன்முடி,தெ.நா.மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனா-இந்தியா பாதுகாப்பு பற்றி பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டம் பற்றியும், அதில் விவாதிக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடை பாதுகாப்பு செயல்பாடுகள் பற்றியும் கேட்டேன். இந்தியா-சீனா இடையே தூதான்மை உறவு துவங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவற்றின் உறவில் மறுமலர்ச்சி ஏற்பட ஆசைபடுகிறேன்.
சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை சீனவானொலி அறிவிப்பளர்கள் வழங்கிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. நேயர்களின் கவருகின்ற வகையில் கலையரசி அவர்கள் ஜனவரி மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். புத்தாண்டில் சீன வானொலி அறிவிப்பாளர்கள் வாழ்த்தியது எங்களுக்கு இவ்வாண்டு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தியது.
நாகர்கோயில் ஸ்டாலின் அனுப்பிய மின்னஞ்சல்
திபெத்தில் கட்டாய கல்வி சலுகை பற்றிய தகவல்களை சீன வானொலி ஒலிபரப்பில் கேட்டேன். சீன அரசு துவக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் கல்விக்கு அதிகமான சலுகைகளை வழங்கிவருகிறது. இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்துக்கு அதிகமான விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டாய கல்விபெறுவதில் சலுகைகள் வழங்கி, அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி வருவது எதிர்கால தலைமுறையின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் தலைசிறந்த சேவையாகும்.
ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
ஹை நானை சர்வதேச சுற்றுலா தீவாக உருவாக்க திட்டமிட்டுள்ளதை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மூலம் கேட்டேன். 2020ஆம் ஆண்டுக்குள் சீனாவின் இரண்டாவது பெரிய தீவான ஹை நானை உலக சுற்றுலா வரையறைக்கு ஏற்ற முதல் தர தீவாக உருவாக்க பரிந்துரைத்திருப்பது, சீனா தெளிவாக திட்டமிட்டு சுற்றுலாத் துறையை வளர்ப்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஊத்துக்குளி, க ராகம் பழனியப்பன் அனுப்பிய மின்னஞ்சல்
சோமாலிய கடற்பரப்பில் கடல் கொள்ளையருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு அவையின் பயனுள்ள பணிகளை செய்தி விளக்கத்தில் கேட்டு அறிந்தேன். நேபாள தலைமையமைச்சர் சீனப் பயணம் மேற்கொண்டு, நீர், சுற்றுலா, பண்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புறவு குறித்து விவாதித்தை செய்திகளில் கேட்டேன். மேலும் சீனாவில் கடும் பனிபொழிவு காரணமாக மின்சார உற்பத்தி மற்றும் தொடர்வண்டி சேவை பாதிக்கப்பட்டதையும் அறிய வந்தேன்.