• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடிதம் மூலம் 9 நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள்
  2010-01-28 14:19:47  cri எழுத்தின் அளவு:  A A A   







கலை அன்பான நேயர்களே! வணக்கம். இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களது கடிதங்களையும், மின்னஞ்சல்களையும் தொகுத்து வழங்க கலையரசியாகிய நானும், தமிழன்பனும் இங்கிருக்கின்றோம்.
தமிழன்பன் நேயர்களே உங்கள் கருத்துக்களை பதிவு செய்து அனுப்ப தொடங்கி விட்டீர்களா? உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர் அனைவரையும் கருத்து கடிதங்கள் எழுத தூண்ட வேண்டுமென்டு கேட்டுக் கொள்கின்றோம்.
கலை கருத்துக் கடிதங்கள் எழுதுகின்றபோது சீன வானொலி நிகழ்ச்சிகளை பற்றி பொதுப்படையாக எழுதாமல், குறிப்பிட்ட நிகழ்ச்சியை தெரிவித்து, அதை பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதியனுப்ப கேட்டுக் கொள்கின்றோம்.


தமிழன்பன் நல்ல தரமான கருத்துக் கடிதங்கள் இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாக இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.
கலை இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன் சீன இசை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். 56 தேசிய இனங்கள் சுமூகமாக பழகி வாழுவதை அடையாளமாக கொண்ட "பல்வேறு தேசிய இன மக்கள்" என்ற பாடலையும், நடனங்கள் மூலம் தாய் நாட்டுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்த "எனது சீனாவுக்கு அன்பு" என்ற பாடலையும், இனிமையாக கேட்டு இரசித்தேன். மனதில் இதமான உணர்வை இவை ஏற்படுத்தின.


தமிழன்பன் அடுத்தாக, குருணிகுளத்துப்பட்டி சி.முருகன் அன்றாட சீன மொழி நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். முந்திய வார பாடத்தை நினைவூட்டிய பின்னர் முடி வெட்டிக் கொள்வதற்கு பயன்படும் சொற்கள் இந்நிகழ்ச்சியில் வரிசையாக விளக்கப்பட்டன. முடி வெட்ட வேண்டிய பாணி, முடிக்கு அடிக்க வேண்டிய வண்ணம் போன்றவற்றை சீன மொழியில் தெரிவிப்பது எப்படியென கற்றுக்கொடுத்தனர். இது புதிய மொழியை கற்பதற்கு ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சி.
கலை தொடர்வது, திருச்சி எம்.தேவராஜா அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சிச்சியாச்சுவாங் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கேட்டேன். பெருமளவு மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய தொழில் துறை நகராக இருந்தபோதிலும் கடும் முயற்சியாலும், திடமான கொள்கைகளாலும் பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதை அறிந்தோம். மாசுபாடுகளை குறைத்தும், கழிவுகளை மறுசுழற்சி செய்தும், மரங்களை நட்டு மண்ணரிப்பை தடுத்தும், வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை குறைத்தும் இருப்பது பாராட்டுக்குரியது.


தமிழன்பன் இனி, இலங்கை காத்தான்குடியிலிருந்து எ.வி.எம்.சுஹெயில் செய்திகள் பற்றி எழுதிய கடிதம். சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் பெய்த அடைமழைக் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டதை செய்திகளில் கேட்டேன். இங்கு இயல்பு நிலையை மீட்டெடுக்க மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். மேலும் சீன வானொலி நிலையத்தால் நடத்தப்படும் பொது அறிவுப் போட்டிகள் சில இடங்களை அல்லது சாதனைகளை பற்றி மிக விரிவாக அறிந்து கொள்ள உதவுகிறது.
கலை அடுத்தாக, மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி சின்னவளையம் கு.மாரிமுத்து அனுப்பிய கடிதம். சீனாவில் 40 கோடி தொலைக்காட்சிப் பொட்டிகள் உள்ள விபரத்தை இது வழங்கியது. அரசின் உதவியுடன் செயல்படும் ஆயிரத்து இருநூற்று எண்பத்து மூன்று ஒலிபரப்பு சேவைகளையும் இந்நிகழ்ச்சி அறிய தந்தது. அரசு உதவியோடு நடத்தப்படுவதால் சில பண முதலைகளுக்கு சுயவிளம்பரங்களுக்காக தொலைக்காட்சி பயன்படுத்தப்படுவது குறையும் என்றே கருதுகின்றேன்.


தமிழன்பன் தொடர்வது, தர்வழி பி.முத்து நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். காதல் வந்தால், சிரித்து வாழ வேண்டும், கண்ணில் என்ன கார் காலம், அண்ணாத்த ஆடுறான் போன்ற பாடல்கள் எமக்கு சுவையூட்டின. அனைத்தும் தாளம் போட வைத்தன. சீன வானொலி தமிழ்ப்பிரிவு பணியாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கலை இனி, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி அனுப்பிய கடிதம். எமது ஊரில் இணையவசதி குறைவு என்பதால் அவ்வப்போது தான் இணையத்தில் உலாவர முடிகிறது. நமது தமிழ் இணைய பக்கத்தில் அண்மையில் உலா வந்தேன். அதில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்னை வியப்படைய செய்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நாம் கோல் பிடித்து நடக்க வேண்டுமென பெரியோர் கூறுவதுபோல காலத்திற்கேற்ற மாற்றங்களை செய்திருக்கிறீர்கள். சாதராண மக்களும் இணைய பயன்பாட்டை அதிகரிக்கும்போது நமது தமிழ்ப் பிரிவின் பக்கம் அனைவரின் பாராட்டையும் பெறும்.
தமிழன்பன் அடுத்தாக, மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி மதுரை அண்ணாநகர் என்.இராமசாமி எழுதிய கடிதம். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 60 ஆண்டுகளின் நிறைவில் வாகன தொழிற் துறையின் வளாச்சி பற்றி இந்நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. குறிப்பாக வெளிநாடுகளின் முன்னேறிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டு, தங்கள் தொழில் நுட்பத்தில் புத்தாக்கம் புகுத்தி சின தொழில்துறை வளர்ந்து வருவதை இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. சீன வாகனங்கள் உலக நாடுகள் முழுவதும் ஓடும் நிலை விரைவில் உருவாகும் என்றே எண்ணுகிறேன்.
கலை தொடர்வது, இலங்கை காத்தான்குடியிலிருந்து மீ.மு.ஸ்ரீபாஸ் ஒலிபரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி அனுப்பிய கடிதம். செய்தித் தொகுப்பை செய்தி விளக்கமாக்கி செய்திகளோடு சேர்த்து இருபது நிமிடங்கள் ஒலிபரப்புவது நன்றாக உள்ளது. இடையில் தமிழ்ப் பாடல், சீனப் பாடல் இடம்பெற செய்திருப்பதும் கேட்கின்ற நேயாகளின் உற்சாகத்தை அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040