பெய்ஜிங் சீனாவின் முக்கிய நாணய நற்றும் எணிக மையங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வணிக மையங்களில் ஒன்றாகவும் பெய்ஜிங் விளங்குகின்றது. அரசு சார் நாணய ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு வாரியங்களான சீன மக்கள் வங்கி, சீன வங்கித் துறை கண்காணிப்பு நிர்வாக ஆணையம், சீன பங்குப் பத்திரக் கண்காணிப்பு ஆணையம், சீன காப்பீட்டுக் கண்காணிப்பு நிர்வாக ஆணையம் ஆகியவை பெய்ஜிங்கில் உள்ளன. வங்கித் துறையில் சீன தொழில் மற்றும் வணிக வங்கி, சீன கட்டுமான வங்கி, சீன வங்கி, சீன வேளாண் வங்கி ஆகிய முக்கிய வணிக வங்கிகள், அரசின் வளர்ச்சி வங்கி, சீன வேளாண் வளர்ச்சி வங்கி முதலிய கொள்கைத் தன்மை மிக்க வங்கிகள் ஆகியவை பெய்ஜிங்கில் இடம் பெறுகின்றன. சீன மக்கள் காப்பீட்டு நிறுவனம், சீன மக்களின் சொத்து காப்பீட்டு பங்கு முதலீட்டு நிறுவனம், தைகாங் மக்கள் காப்பீட்டு பங்கு முதலீட்டு நிறுவனம் முதலிய நாடு அளவிலான காப்பீட்டு நிறுவனங்கள் மொத்தமாக பெய்ஜிங்கில் அமைந்துள்ளன. தவிர பெரும்பாலான பெரிய ரக அரசு சார் தொழில் நிறுவனங்களின் தலைமையகங்கள் பெய்ஜிங்கில் குவிந்துள்ளன. சீன எண்ணெய் வேதியியல் குழுமம், சீன எண்ணெய் குழுமம், அரசு சார் மின்னாற்றல் குழுமம், சீன தொலைத் தொடர்பு நிறுவனம், சீன செல்லிடபேசி தொடர்பு நிறுவனம், சீன கூட்டு இணைய வலைப்பின்னல் குழுமம் உள்ளிட்ட பெரிய தொழில் நிறுவன தலைமையகங்கள் பெய்ஜிங்கில் அமைந்துள்ளன. நாடு கடந்த நிறுவனங்கள் பல பெய்ஜிங்கில் சீனாவுக்கான தன் கிளை நிர்வாக தலைமையகத்தை நிறுவியுள்ளன. எடுத்துக்காட்டாக Shell, Morgan, Microsoft,HP,Samsung, Motorola,Siemens முதலியவை.