• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச நண்பர்களின் தேர்வு மீளாய்வு தொகுப்பு
  2010-02-02 10:12:41  cri எழுத்தின் அளவு:  A A A   








வணக்கம் நேயர்களே. இப்போது நட்புப் பாலம் நிகழ்ச்சி நேரம். நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. கடந்த நிகழ்ச்சிகளில் சீன வானொலி நிலையம் வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம், சீன தேசிய நிபுணர் நிர்வாக ஆணையம் ஆகியவை இணைந்து சர்வதேச நண்பர்கள் என்ற தலைப்பில் இணையம் மூலம் நடத்திய வாக்கெடுப்பின் முடிவு படி சீனாவின் சிறந்த நண்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பேரில் 9 நண்பர்களின் கதைகள் தனித்தனியாக விவரிக்கப்பட்டன. அவர்களின் கதைகளின் விளக்கம் மூலம் அவர்களுக்கும் சீன மக்களுக்குமிடையில் உருவாக்கப்பட்ட நட்புத் தொடர்பை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என்பது திண்ணம். அல்லவா. இன்றைய நிகழ்ச்சி தொகுப்புத் தன்மை வாய்ந்த நிகழ்ச்சியாகும். இந்த இணைய வழி தேர்வு நடவடிக்கை ஊடகத்தை பொறுத்தவரை புதிய முயற்சியாகும். பன்னாடுகளுக்கும் உலகின் மக்களுக்குமிடையிலான நட்பை ஆழமாக்குவது, மக்கள் அனைவருக்கும் நன்மை தந்தவர்களுக்கும் மதிப்பளித்து அவர்களை என்றுமே உள்ளத்தில் பதியச் செய்வது ஆகியவை இணையம் மூலம் வாக்கெடுப்பு நடத்தியதன் முக்கிய நோக்கமாகும். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நண்பர்களின் வாழ்க்கை மற்றும் பணி அனுபவங்களை பார்த்தால் சீனாவின் 100 ஆண்டு வரலாற்றின் வளர்ச்சி, சீன மக்களின் வாழ்க்கை, குறிப்பிட்ட காலப் பின்னணி ஆகியவற்றுடன் அவர்களுக்கு நெருங்கிய தொடர்புண்டு.

ஏற்கனவே அறிமுகப்படுத்திய சர்வதேச நண்பர்களின் முக்கிய பங்கினை மீண்டும் மீளாய்வு செய்கின்றோம்.

70 ஆண்டுகளுக்கு முன் தென் சீனாவிலுள்ள சியாங்சூ மாநிலத்தின் நான்சிங் நகரில் சீனாவை ஆக்கிரமித்த ஜப்பான் படையினரின் படுகொலையிலிருந்து ஜெர்மானியர் ஜான் ராபே 2 லட்சத்து 50 ஆயிரம் பொது மக்களின் உயிரை காப்பாற்றினார். அவரது துணிவாலும் அவரது அப்போதைய நாட்குறிப்பாலும் சீன மக்களின் உயர் மதிப்பை ஜான் ராபே பெற்றார்.

ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த போது சீன மக்களுக்கு உதவும் வகையில் இளம் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் பிறந்த நாடான இந்தியாவை விட்டு சீனாவுக்கு வந்து சிறந்த மருத்துவ சிகிச்சை நுட்பத்தின் மூலம் சீன மக்களுக்கு உதவி வழங்கினார். மிகப் பல சீனர்கள் அவரை நன்றாக அறிந்து கொண்டுள்ளனர். அவருடைய அணுகுமுறை,பண்பு நலன்,சிகிச்சையளிப்புத் திறன் ஆகியவை சீன மக்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டன.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் Normman Bethune 1938ம் ஆண்டு மே திங்கள் கனேடிய மற்றும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் இவ்விரு நாட்டு மருத்துவர்கள் இடம்பெற்ற மருத்துவக் குழுவுக்கு தலைமை தாங்கி சீனாவின் புரட்சி மையமான யேன் ஆன் வந்தார். சீனாவில் தங்கியிருந்த போது சீனப் படைப்பிரிவுகளின் மருத்துவத் திறனை உயர்த்துவதற்காக அவர் மிக முக்கிய பங்கு ஆற்றினார். போர் தளங்களில் காயமுற்ற படைவீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இரண்டு பகல் இரண்டு இரவுகள் அவர் ஓய்வு பெறாமல் 71 அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரலாற்றியல் அறிஞர்களின் மதிப்பீட்டின் படி

மார்க்கோ போலோவுக்கு பின் மேலை நாடுகள் சீனாவை அறிந்து கொள்வதில் பங்காற்றியதில் மிகவும் செல்வாக்கு கொண்ட மேலை நாட்டவராகவும் சீனத் தலைவர்களின் நம்பிக்கைக்குரிய ஒரேயொரு அமெரிக்கராகவும் எட்கர் ஸ்னோ திகழ்ந்தார். அமெரிக்கச் செய்தியாளரும் எழுத்தாளருமான அவர் 20ம் நூற்றாண்டின் முற்பாதியில் சீன மக்கள் துன்பப்படுவதையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான புரட்சியின் உண்மையையும் உலக மக்களின் பார்வைக்கு கொண்டுசென்றார். அவர் சீன புரட்சித் தலைவர்கள் மற்றும் சீன மக்களுடன் ஆழ்ந்த நட்புறவை உருவாக்கினார்."நான் சீனாவை விரும்புகின்றேன். மரணமடைந்த பின் எனது சாம்பலின் ஒரு பகுதியை சீனாவில் வைக்க வேண்டும்"என்று தன் மனைவிக்கு எழுதிய இறுதிக்குறிப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பண்டைய சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத்தையும் நாகரிகத்தின் வளர்ச்சியளவையும் உறுதிப்படுத்தும் முக்கிய சின்னங்களான வெடி மருந்து, திசைக்காட்டி, தாள் தயாரிப்பு நுட்பம், அச்சிடுதல் ஆகிய நான்கு கண்டுபிடிப்புகள் உலக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்துறையில் சீனா பெற்ற வெற்றிகள் தொடர்பான மேலை நாட்டவர்களின் கருத்துக்களை முழுமையாக மாற்றியவர் பிரிட்டன் நாட்டு Jopseph Needham தான். பண்டைய சீனாவின் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் நாகரிகம் குறித்த உலக அறிவியல் வட்டாரம் கொண்டிருந்த கருத்துக்கள் பெரிதும் மாற்றப்பட்டதற்கு காரணம் Jopseph Needham இன் ஆய்வு தான்.

80 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து இளைஞர் ஒருவர் ஆர்வத்துடன் சீனாவுக்கு வந்தார். அப்போது முதல் அவருடைய தலைவிதி சீன மக்களின் விடுதலையுடனும் கட்டுமான லட்சியத்துடனும் ஒன்றிணைந்தது. அந்த இளைஞர்தான் ரேவி ஆலே. அவர் சீனாவில் 60 ஆண்டு காலம் வாழ்ந்தார்.

Israel Epstein சீன மக்கள் மிகவும் அறிந்து கொண்ட புகழ் பெற்ற செய்தியாளராவார். சிறு வயது முதலே அவர் சீனாவில் வாழ்ந்தார். குடியுரிமை பெறாத அவர் சர்வதேசவாதியாக முதலில் இருந்தார். பின்னரே நாட்டுப்பற்றுணர்வை பெற்றார். அவர் சீன குடியுரிமையை பெற்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தன்னுடையை வாழ்நாள் முழுவதையும் சீனாவுக்கு அர்பணித்தார்.

இளவரசி மகா சாகரி சினின்தோன் தாய்லாந்தில் மிகவும் புகழ் பெற்றவராவார். இது மட்டுமல்ல சீன மக்கள் பலரும் அவரை பற்றி மிகவும் நன்றாக அறிந்து கொண்டுள்ளார். சீனாவுக்கும் தாய்லாந்துக்குமிடை பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கும் இரு நாட்டு மக்களிடை நட்புக்கும் அவர் மாபெரும் பங்கு ஆற்றியுள்ளார்.

விவசாயிகளுக்கு தேவையான நன்மைகளை சீனாவில் பரப்புரை செய்ய முயற்சி மேற்கொண்ட ஜப்பானை சேர்ந்த Hiramatsu Morihiko இந்த இணையம் மூலம் நடத்தப்பட்ட பத்து சர்வதேச நண்பர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பரப்புரை செய்த "ஒரு கிராமத்துக்கு ஓர் உற்பத்திப் பொருட்சின்னம்"என்ற நடவடிக்கை சீன விவசாயிகள் வறுமையிலிருந்து விடுபட்டு இன்பமான வசதி கொண்ட வாழ்க்கையை வாழ்வதற்கு துணை புரிந்தது.

இணையம் மூலம் சர்வதேச ரீதியில் கடந்த 100 ஆண்டுகளில் சீனாவுக்கு பங்கு ஆற்றிய அல்லது சீனாவுடன் தொடருணர்வு கொண்ட வெளிநாட்டவரை தேர்வு செய்தது நவ சீனா நிறுவப்பட்டது முதல் தற்போது வரை பெருமளவில் தேர்வு் செய்யப்பட்ட முயற்சியாகும். கடந்த ஆகஸ்ட் 31ம் நாள் இந்நடவடிக்கை துவங்கிய பின் மிக பல இணைய பயன்பாட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று அக்டோபர் 10ம் நாள் வரை 5 கோடியே 60 இலட்சம் வாக்குகளை அளித்தனர். குறிப்பில் சீனாவுக்கு உதவி வழங்கிய சர்வதேச நண்பர்களுக்கும் தாய்நாட்டுக்கும் உணர்வு மிக்க குறிப்புரைகளை எழுதினர். அக்டோபர் முதல் நாள் முற்பகல் பெயர் குறிப்பிடாத இணையப் பயன்பாட்டாளர் ஒருவர்"என்றுமே அவர்களுக்கு நன்றிகள். என்றுமே அவர்களை என் உள்ளத்தில் வைப்பேன். போர்க் காலமோ அமைதிக் காலமோ அமைதியையும் உயிரையும் விரும்பும் மக்கள் பலர் சீன மக்களுடன் இணைந்து நின்றுள்ளனர். இன்று தாய்நாடு நிறுவப்பட்ட நாளாகும். பானக் கோப்பை ஏந்தி தாய்நாட்டின் இன்பத்துக்காக வாழ்த்தி பாடுவோம்"என்று தனது குறிப்பில் பதிவு செய்திருந்தார். இன்னும் சில இளைஞர்கள் நன்றி வார்த்தைகளை எழுதி தமது உணர்வை தெரிவித்துள்ளனர். பல வெளிநாட்டு நண்பர்கள் நமக்காக தமது உயிரை அர்ப்பணித்தனர். நமது சீன தேசம் மகத்தான தேசம். நீங்கள் மகத்தான நண்பர். உங்களுக்காக வாக்களிக்க விரும்புகின்றேன். நாங்கள் அடுத்த சந்ததியினர். காலமானோர் சொர்க்கத்தில் இன்பமாக இருக்க துணைபுரிவது எங்கள் கடமை. உலகில் அமைதியை நேசிக்கும் அனைவரும் ஒன்றுபட்டு மகத்தான சர்வதேச நண்பராக செயல்படுவோம் என்று சிலர் குறிப்பில் எழுதியிருந்தனர்.

நண்பர்களே சர்வதேச நண்பர்கள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இணைய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கைப் பின்னணி பற்றிய கதைகளை கேட்டிருப்பீர்கள். மனமுருகச் செய்யும் இந்த கதைகள பற்றி உங்கள் எண்ணங்களை தாராளமாக எழுதி அனுப்புங்கள். நிகழ்ச்சிகளை மொத்தமாக கேட்டு குறிப்பு எழுதிய உங்களுக்கு மிக்க நன்றி. அடுத்த முறை பேட்டிகளை ஒலிபரப்புவோம். கேட்க தவறாதீர்கள். இத்துடன் நட்புப் பாலம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040