2007ம் ஆண்டில் பெறப்பட்ட கள ஆய்வு முடிவுகள் படி 66 ஆயிரத்து 600 வாடகை சீருந்துகள் பெய்ஜிங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பகலில் வாடகை சீருந்தில் பயணம் செய்யும் போது ஒரு கிலோமீட்டருக்கு கட்டணம் 2 யுவான். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரையான நேரத்தில் ஒரு கீலோமீட்டருக்கு 2.4 யுவான் கட்டனம் வசூலிக்கப்படும். 2009ம் ஆண்டு நவம்பர் 25ம் நாள் முதல் வாடகை சீருந்தின் எண்ணெய் செலவுக்கென கூடுதலாக ஒரு யுவான் செலுத்தப்பட வேண்டும். அதாவது பயணி ஒருவர் வாடகை சீருந்து மூலம் பயணம் செய்யும் போது 3 கிலோமீட்டர் தூரத்தை தாண்டினால் வாடகை செலவு தவிர, எண்ணெய் நுகர்வுக்காக ஒரு யுவான் கூடுதலாக செலுத்த வேண்டும். வாடகை சீருந்து பற்றிய தகவல்களை பற்றி இதுவரை விளக்கமளித்துள்ளோம்.
விமான போக்குவரத்து பற்றிய தகவல்கள்
சீனாவில் மிக பெரிய சர்வதேச விமான நிலையமும் ஆசியாவின் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமுமாக விளங்குவது பெய்ஜிங் தலைநகர் சர்வதேச விமான நிலையமாகும். சன் யீ மாவட்டத்தில் அமைந்துள்ள அது பெய்ஜிங் மாநகரின் மையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பெரும்பாலானவை பெய்ஜிங் தலைநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து செல்பவை. இது வரை 200 நெறிகளின் மூலம் உலகின் முக்கிய நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் நாட்டின் பெரும்பாலான நகரங்களுக்கும் மக்கள் செல்வது மிகவும் வசதியாகியுள்ளது. 2007ம் ஆண்டில் பதிவான தகவல்களின் படி அவ்வாண்டில் 5 கோடி மக்கள் விமான மூலம் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். சீன வானொலி நிலையக் கட்டிடத்திலிருந்து புறப்பட்டு விமான நிலையத்துக்கு செல்லும் நேரம் 50 நிமிடம் மட்டுமே.