மின்னஞ்சல் பகுதியில் 9 இணையதளப் பயன்பாட்டாளர்கள் செய்திகளை கேட்டு கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்தை கேட்டு உங்கள் சொந்த கருத்து தெரிவியுங்கள்.
திருச்சிஅண்ணாநகர் வீ.டி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் பெய்ச்சுவான் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் 3,000 ஆண்டுகால வரலாற்றுடைய ச்சியாங் இனம் மிகவும் பாதிக்கப்பட்டு கடும் உயிர் இழப்புகளை சந்தித்தது. 90 விழுக்காடு வீடுகள் இடிந்தன. மறுசீரமைப்புப் பணிகளில், இந்த மக்கள் புதிய வீடுகளை கட்டியமைத்து, உற்பத்தி நடவடிக்கைகளை மீட்க சீன அரசு உதவி வருவதை செய்திகளில் அறிய தந்தீர்கள். அதேவேளை, ச்சியாங் இனத்தின் பண்பாட்டு மரபு செல்வத்தை மீட்டு, இந்த பண்டைய நாகரிகத்தின் தொடர்ச்சி மற்றும் வளர்ச்சியை பேணிக்காக்கவும் சீன அரசு பாடுபடுவது தேசிய இனங்களின் மீதான சீன அரசு அக்கறையை காட்டுகிறது. இம்மாவட்டம் விரைவில் நிலநடுக்கத்துக்கு முந்தைய இயல்பான நிலையை மீட்டு வளர்ச்சியடைவது உறுதி.
மதுரைஅண்ணாநகர் என்.ராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்
2008 ஆம் அண்டு மே திங்கள் 12 ஆம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் கடுமையான நிலநடுக்கம் எற்பட்டது. அதன் பிறகு சீன நடுவன் அரசின் பல்வேறு உதவிகளை பெற்று வீடுகளை மறுசீரமைத்தும், புதிய வீடுகள் கட்டியும் மக்கள் குடியேறியுள்ளதை சீன வானொலி நிகழ்ச்சிகளில் கேட்டு மகிழ்ந்தேன். அவர்களது வருமானம் குறிப்பிடத்தக்க அளவு உயர நடவடிக்கை எடுத்து வருவதும் பாராட்டுக்குரியது.
சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளான சிச்சுவான் நிலநடுக்கத்தின் சோகச் சுவடுகள் இன்னும் எனது மனதைவிட்டு நீங்கவில்லை. எனினும் சிச்சுவான் மக்களுக்கு சீன அரசின் கடுமையான அயராத முயற்சியினால் மீண்டும் புத்தொளி கிடைத்திருப்பதை கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது சிச்சுவான் கிராம மக்களின் குடியிருப்பு, குடிநீர், மின்னாற்றால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முன்பை இருந்ததை விட அதிகமாகவே கிடைத்திருப்பதும், அவர்களின் ஆண்டு வருமானம் நிலநடுக்கத்திற்கு முன்பு இருந்தை விட சுமார் ஆயிரம் யுவான் அதிகரித்திருப்பதும் குறுகிய காலத்தில் அரிய செயல்பாடுகளே. ஆனால் சீன அரசு இதனை சாதித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
தலாய்லாமாவின் அமெரிக்கப் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததை சீனா வானொலி ஒலிபரப்பிய செய்திகளில் கேட்டேன். சீன-அமெரிக்க உடன்பாடுகளை மீறி அமெரிக்க செயல்படுவது இருதரப்புறவில் அதிக பின்விளைவுகளையே ஏற்படுத்தும். தீவிரவாதத்தை ஒழிப்போம் எனக்கூறும் அமெரிக்கா பிரிவினைவாதத்தை தூண்டுவோரை வரவேற்பது விந்தையிலும் விந்தை.
செந்தலை என்.எஸ். பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்
அமெரிக்கா தைவானுக்கு ஆயுத விற்பனை செய்வதற்கு சீனா தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்காவின் இது போன்ற செயல்களால் இரு நாட்டு உறவில் விரிசல் எற்பட வாய்ப்பு உண்டு. பிற நாடுகளின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிடுகின்ற அமெரிக்காவின் இந்த செயலை அனைத்து நாடுகளும் எதிர்க்க வேண்டும்.
ஆரணி அபி அமிர்தவதி அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவில் வசந்த விழா ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருவதை அறிந்தேன். வசந்தவிழா காலத்தில் இருப்புபாதை மூலம் பயணம் செய்வோருக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகளால் பொதுமக்கள் மிகுந்த பயன் அடைவார். வசந்த விழாவை சீன மக்கள் மகிழ்வோடு கொண்டாட எனது வாழ்த்துக்கள்
எஸ்.செல்வம், வளவனுர் புதுப்பாளையம் அனுப்பிய மின்னஞ்சல்
சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், சீன நாட்காட்டி பற்றிய சுவையான தகவல்கள் இடம்பெற்றன. சீன நாட்காட்டி உருவாக்கப்பட்ட தகவல் விறுவிறுப்பானதாக அமைந்தது. கி.பி.25 முதல் கி.பி.220 ஆம் ஆண்டு வரையிலான ஹான் வம்ச ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சூசான் நாட்காட்டி பற்றிய தகவல் புதியதாக இருந்தது. ஓராண்டுக் கால நேரம் சரியானதா என்பதை அறிய அடுத்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறேன்.
ஈரோடு சி.சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல்
உலகப்பொருட்காட்சியின் இந்திய அரங்கை பிப்ரவரி திங்கள் 8 ஆம் நாள் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு இணையத்தின் சிறப்பு பக்கத்தில் கண்டு மகிழ்ந்தோம். 9 நாடுகளின் அரங்குகளின் நிழற்படங்களை சீன வானொலியின் இணையதளம் வெளியிட்டபோதே இந்திய அரங்கின் நிழற்படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த கனவை சீனவானொலி நனவாக்கியுள்ளது.
பாண்டிச்சேரி ஜி.ராஜகோபால் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் வேளாண்மையில் காணப்படும் பிரச்சினைகளை செய்தி விளக்கத்தின் மூலம் உள்ளதை உள்ளவாறு தெளிவு படுத்தியது பாராட்டுக்குரியது. நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களின் வளர்ச்சியை ஒருமுகப்படுத்தி, நகரமயமாக்க வளர்ச்சி அமைப்ப்பு முறையினை புதிதாக விரைவுபடுத்த இருப்பதும், சீன கிராமப் புறங்களைச்சேர்ந்த மக்கள், நடுத்தர மற்றும் சிறிய நகரங்களுக்கு குடியேற்றுவது முக்கிய குறிக்கோளாக, முக்கிய பணியாக இருப்பதும் இதில் விளக்கப்பட்டது. நகரமயமாக்கும் போக்கில் நடுத்தர மற்றும் சிறிய நகரங்களின் வளர்ச்சியை அலட்சியம் செய்யப்பட்டதையும், விவசாயிகளை நகரவாசிகளாக மாறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காத காரணங்களையும் சுட்டிக்காட்டியது அருமை.