• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடித பகுதியில் 11 நண்பர்கள் நிகவ்ச்சிகள்
  2010-02-11 09:47:11  cri எழுத்தின் அளவு:  A A A   


"fullScreen" VALUE="0">







 

இந்த கடித பகுதியில் மொத்தம் 11 நண்பர்கள் நிகவ்ச்சிகளை கேட்டு தெரிவித்த கருத்துக்களை கேட்டு மகிழுங்கள். உங்கள் பங்கு எங்கள் ஆர்வம்.

கலை இலங்கை மட்டகளப்பிலிருந்து எம்.என்.எப்.நஷாமா சீனாவால் தாயரிக்கப்பட்ட அதிவேக தொடர்வண்டி பற்றி எழுதிய கடிதம். முழுவதும் சீன தொழில்நுட்பங்களால் உருவாக 350 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடிய தொடர்வண்டி, தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்வண்டி தொடர்பான தொழில்நுட்பங்களை சீனா முழுமையாக அறிந்து மேம்படுத்தி வருவதை இது வெளிப்படுத்துகின்றது. இது போக்குவரத்து வசதியில் மறுமலர்ச்சியை உருவாக்க போவது உறுதி.
தமிழன்பன் நாமக்கல் கவித்துளி சக்தீஸ்வரன் நட்புபாலம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். தாய்லாந்து நாட்டின் இளவரசி மகா சாகரி சினின்தோன் சீனாவின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பணிகள் பற்றி அறிந்து கொண்டேன். சீனாவுடன் நட்பு பாராட்டி இருநாட்டு மக்களிடமும் இவர் அன்பை பெற்றுள்ளர். சீன மொழியின் மீது கொண்டுள்ள பற்றால், பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கும் அவரது சேவை மனபான்மை பாராட்டப்பட வேண்டும். இருநாட்டு மக்களை நட்புறவால் ஒன்றிணைத்த அவரது பணியை பாராட்டி சீனாவின் அனைத்துலக நண்பர்கள் பத்து பேரில் ஒருவராக இவரை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கலை மைலாடுதுறை பி.எஸ்.சேகர் நேயர்நேரம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். கடிதங்கள் மின்னஞ்சல்கள் மூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்களை தொகுத்து வழங்கி நேயர்களின் கருத்துக்களை அனைவரும் அறிய செய்யும் இந்நிகழ்ச்சியை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கேட்பதற்கும் வசதி வழங்கியிருப்பது சிறப்பு



தமிழன்பன் திமிரி பி.இ.பத்மாவதி ஈரோட்டின் பெருந்துறையில் நடைபெற்ற நேயர் மன்ற கருத்தரங்கு பற்றி எழுதிய கடிதம். இந்த கருத்தரங்கில் நேயர்கள் பலரையும் சந்தித்ததோடு, சீன வானொலி அறிவிப்பாளர் கலைமணி மற்றும் அவரது துணைவியரை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்தது. அவரது துணைவியார் சீன மொழி காதல் பாடலைப் பாட, அப்பாடலின் பொருளை கலைமணி விளக்கியது மறக்க முடியாத அனுபவம்..
கலை சாத்தூர் சி.மனோகரன் உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். எங்களுக்கு எங்கே சுதந்திரம் என்ற நாடகத்தின் மூலம் இயற்கை செல்வங்களை மறந்த மனிதர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் கருத்தை நேயர்களிடம் விதைத்துள்ளனர். சிறந்த நாடகவடிவிலான நிகழ்ச்சியை வழங்கிய சீன வானொலிக்கு நன்றிகள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடரட்டும்.



தமிழன்பன் மெட்டாலா எஸ்.பாஸ்கர் சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் ஆசிரியாராக பணியாற்றிய மங்கோலிய இன அறிஞர் பாது, சீன மொழியை மங்கோலி இன மக்களுக்கு கற்பித்ததோடு, அதன் சிறப்பறிந்து தானும் அதனை ஆழமாக கற்று தேர்ந்தார். மங்கோலிய மற்றும் சீன மொழிகள் என இரு மொழிகளில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாடம் நடத்தபடுவதால் மங்கோலிய இனம் வளர்ச்சி கண்டு வருவதாக இந்நிகழ்ச்சி வழியாக அறிந்து கொண்டேன்.
கலை மதுரை அண்ணாநகர் ஆர்.அமுதாராணி சீனாவில் வேர் தேடிய பயணம் செய்தி பற்றி அனுப்பிய கடிதம். வெளிநாடுகளில் தத்துக்கொடுக்கப்பட்ட சீனக்குழந்தைகள், சீனாவுக்கு வந்து தங்கள் பெற்றோரை, உறவினரை தேடியதை சீன வானொலி நிலையம் ஒலிபரப்பியது. வெளிநாட்டினருக்கு குழந்தைகளை தத்துக்கொடுப்பது அன்பு நிறைந்த பணியாகும். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் சொந்த நாட்டை மறக்காததை இப்பயணம் விளக்கியது. இதற்கு வேர் தேடும் பயணம் என்ற பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்தது.



தமிழன்பன் கடையாலுருட்டி எம்.பிச்சைமணி கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். கோமிங்தான் கட்சியின் படையை விட குறைவான எண்ணிக்கையிலும், ஆற்றலிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சிப் படையினர் இருந்தது என்றும் சியாங்சி மாநிலத்தின் ஈது என்ற இடத்திலிருந்து படையெடுப்பு தொடங்கி இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றிபெற்றதையும் இந்நிகழ்ச்சி விளக்கியது.
கலை மும்பை சுகுமார் செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். கோபன்ஹகன் மாநாட்டில் குழந்தைகளின் பங்கு நெஞ்சை தொட்டது. உலகில் பெட்ரோல் சீருந்துகளை குறைத்து மின்னாற்றலால் இயங்குகின்ற சீருந்துகளை தயாரிக்க ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றம் பற்றிய மாநாட்டில் மூன்றாம் உலக நாடுகள், ஏழை நாடுகளின் உயர்வில் சீனப் பங்கு பற்றிய தகவல்களும் மிகவும் சிறப்பு. அமெரிக்காவின் சட்டாம்பிள்ளை தனத்திற்கு மாற்றாக கூட்டு முயற்சிகள் வளர வேண்டும்.



தமிழன்பன் மணச்சநல்லூர் ந.சண்முகம் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றி எழுதிய கடிதம். 2010 புத்தாண்டின் முதல் மூன்று நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்த்து செய்திகளை வழங்கினர். தங்களது விபரங்களையும், தாங்கள் தயாரித்து அறிவிக்கின்ற நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தியதோடு, புத்தாண்டில் எங்களை மனமாற வாழ்த்தியது மகிழ்சிசியளித்தது.
கலை இலங்கை கினிகத்தேனை எஸ்.வி.துரைராஜா கிறிஸ்மஸ் நாளின் நிகழ்ச்சிகள் பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடும் பல தகவல்களை இன்றைய நிகழ்ச்சிகள் வழங்கின. இலங்கையிலிருந்து சற்று மாறுபட்டதாகவே கொண்டாட்டங்கள் அமைந்தன. இவ்விழாவை ஒவ்வொரு நாடுகளுக்கு அதற்குரிய சிறப்பியல்புகளோடு கொண்டாடுவதாகவே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040