• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பண்டைய சீனாவின் நான்கு கண்டுபிடிப்புகள்
  2010-02-18 16:57:19  cri எழுத்தின் அளவு:  A A A   

உத்திரக்குடி. சு.கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்


நட்புப்பாலம் நிகழ்ச்சியில் பண்டைய சீனாவின் நான்கு கண்டுபிடிப்புகளை அனைத்துலகத்திற்கு அறிவித்த பிரிட்டன் நாட்டு ஜோசப் நீதம் பற்றி கேட்டோம். அவரது உயர்ந்த எண்ணத்தையும் விடாமுயற்சியையும், தொழில்நுட்பங்கள் மீது காட்டிய ஆர்வத்தையும் பார்க்கும்போது பல நாட்டு அறிஞர்களும், அறிவியல் மேதைகளும் சீன நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளதை அறிய முடிகிறது.


நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்


ஹெய்டிக்கு சென்று திரும்பிய பாராட்டுக்குரிய சீன மீட்புதவிக்குழு பற்றிய செய்தி மிக அருமையாக இருந்தது. ஹெய்ட்டியில் நிலநடுக்கம் நிகழ்ந்தவுடன் 40 பேர் கொண்ட மருத்துவ மீட்புதவிக்குழுவை அனுப்பிய முதல் நாடு சீனாதான் என்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும். மேலும் இதன்மூலம் சீனாவின் மனித நேயம் உலகெங்கும் மிகத்தெளிவாக தெரிய வந்துள்ளது.


வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்


•சீன வரலாற்றுச் சுவடுகள்• நிகழ்ச்சியை கேட்டேன். 1959 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7 ஆம் நாள், சீன ரஷ்ய தலைவர்கள், உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டமை, 1937 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 21 ஆம் நாள், ஷி ஆன் நகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனக் கோமின்தாங் கட்சி ஆகியவற்றுக்கிடையே இருகட்சி ஒத்துழைப்பு பற்றி புரிந்துணர்வு உருவானது போன்ற தகவல்களை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில், சுவையான பல்வேறு குறிப்புகளை வழங்குவதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


தென்பொன்முடி,தெ.நா.மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்


கடந்த சில வாரங்களாக நட்புப்பாலம் நிகழ்ச்சியில் சீன நாட்டுக்கும், மக்களுக்கும் மிகவும் நெருக்கமான வெளிநாட்டவர்கள் சீனாவுக்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் பற்றி ஒலிபரப்பக் கேட்டேன். சீனா மீதும், சீன மக்கள் மீதும் கொண்ட அன்பின் காரணமாக, பல இன்னல்களுக்கு நடுவிலும் அவர்கள் செய்த அரும்பணிகள் நூறு ஆண்டுகள் கடந்த பின்னரும் சீன மக்களால் நினைவுக்கூரப்படுகின்றன. அவர்களின் பணிகள் காலத்தால் மறையாத பதிவுகள்.


செந்தலை, என்.எஸ். பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்


இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கடும்குளிர் காற்று வீசி 40க்கும் மேலானோர் உயிர் இழந்திருப்பது வேதனையிலும் வேதனை. தற்போது இந்தியாவிலும் கடும் பனிப்பொழிவு ஏற்படத் தொடங்கியுள்ளதை தெரியத் தந்த சீன வானொலிக்கு நன்றிகள். இயற்கைச் சீற்றத்தால் சாதாரண குடிமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.


ஈரோடு .சி.சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல்


நட்புப்பாலம் நிகழ்ச்சியில் சீனாவின் 100 ஆண்டுகால வரலாற்றில் சீன மக்களின் சிறந்த நண்பர்களாக இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சர்வதேச நண்பர்களின் கதைகளைப்பற்றிய தொகுப்பை கேட்டேன். 100 ஆண்டுகால வரலாற்றில் சிறந்த நண்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரை பற்றி கலையரசி அவர்கள் ஐந்தே நிமிடங்களில் தொகுத்து கூறியது, 100 ஆண்டுகாலம் சர்வதேச நண்பர்களுடன் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது. பாராட்டுக்கள்

.
திருச்சி அண்ணாநகர், V. T. இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்


மாசுபாடுகளின் தோற்றுவாய் பற்றிய முதலாவது கள ஆய்வு அறிக்கையை சீன அரசு 9ம் நாள் வெளியிட்டது குறித்த செய்திவிளக்கத்தை செவிமடுத்தேன். சீனா எதிர்க்கொள்ளும் பல புதிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இவ்வறிக்கை வெளிப்படையாக வெளியிட்டிருப்பதுடன், 12வது ஐந்தாண்டு திட்டத்தின் போது, முக்கிய மாசுபாட்டுப் பொருட்களின் மொத்த வெளியேற்ற அளவைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாடுபடும் என்பதையும் உறுதியாக கூறியிருப்பது நல்லதொரு துவக்கமாகும்.


மெட்டாலா, எஸ். பாஸ்கர் அனுப்பிய மின்னஞ்சல்


ஜனவரி 28 அன்று அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் 21-ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறு சீனா மருத்துவத்துறையில் புதிய சாதனைகளைப் படைத்து வளர்ந்துவருவது படைப்பாளிகளாகிய சீன சாதனையாளர்களுக்கு பெரிய விடயமே அல்ல. மறுவுருவாக்கம், புத்துயிர் பெரும் சிகிச்சை, உடல் உறுப்பை மாற்றி அமைக்கும் மருத்துவமுறை இவையனைத்தும் சீனர்களின் விடாமுயற்சியுடன் கூடிய செயல்பாடுகளையே காட்டுகிறது. உலக நாடுகளுக்கு சீன மருத்துவம் முன்மாதிரியாக திகழும் என்று நம்புகிறேன்.

.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை M.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்


நாடளுமன்ற தேர்தலுக்கு முந்திய ஈராக்கின் நிலமை குறித்த விளக்கம் கேட்டேன். ஈராக்கின் பாதுகாப்பு நிலைமை மீண்டும் சீர்கெடுவதை நன்கு உணரமுடிந்தது. இந்நிலை நீடித்தால் உள்நாட்டில் நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியாகிவிடும். இதனை உணர்ந்து அந்நாட்டு மக்கள் இணக்கச் செயல்பாடுகளை முன்னெடுப்பது நல்லது.


முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்


சீனாவில் நடைபெற்ற எட்டாவது புத்தமத கருத்தரங்கில் புதிய புத்தமத தலைவரை தேர்வு செய்ததை அறிந்தேன். உலகில் அன்பும் அமைதியும் வளர இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம் இன்று சீனாவில் ஆலமரமாய் வேர்விட்டு தழைத்துள்ளது. புதிதாக தலைமை ஏற்றுள்ள புத்தத்துறவி, புத்தரின் கருத்துக்களை உலகின் அமைதிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாக பயன்படுத்தி, மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு வித்திட செய்வதை வரவேற்கிறேன்.


ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்


பழமையான காஷ்கார் நகரின் சீரமைப்பு பற்றி சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் கேட்டேன். 2100 ஆண்டுகால வரலாறு, 400 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பழமையான கட்டிடங்கள், 17 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தோற்றங்கள் முதலிய வரலாற்று பதிவுகளைக் கொண்ட காஷ்கார் நகரம் தற்போது சீரமைக்கப் பட்டு வருகிறது. பண்பாட்டையும், வரலாற்றுச் சின்னங்களையும், மக்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்த சீன அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040