• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர்கள் அனுப்பிய கடிதங்கள்
  2010-02-22 10:54:50  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை: இன்றைய முதல் கடிதம் ராமபாளையம் எம். கேசவன் எழுதியது. மக்கள் சீனம் நிகழ்ச்சியில் சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள எல்லை நுழைவாயில் பற்றிய தகவல் சிறப்பாக இருந்தது. இந்த நுழைவாயில்தன் சீனாவின் மேற்குப்பகுதியிலுள்ள மிகப்பெரிய நுழைவாயில் என்பதை அறிந்துகொண்டேன். நல்ல கட்டுரை, நன்றி.

க்ளீட்டஸ்: அடுத்து விழுப்புரம் எஸ். பாண்டியராஜன் எழுதியது. சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியில், முதுமைக்கால பிரச்சனை பற்றி தேன்மொழி அவர்கள் வழங்கிய கட்டுரை அருமை. இன்றைக்கு முதுமைக்காலப் பிரச்சனை, வீடு, நாடு ஏன் உலகப் பிரச்சனையாகவே இருக்கிறது. அணுவை பிளந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இன்றைக்கு மனிதகுலத்துக்கு இருக்கிறதா?? முந்தைய திட்டங்கள் சிலவேளை இன்றைய பிரச்சனைகளுக்கு வித்தாகின்றன. எதுவாயினும், முதுமை தொடர்பான பிரச்சனையை வீடும், நாடும், உலகமும் சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

கலை: தொடர்ந்து இலங்கை வாழைச்சேனை என். சதாம் எழுதிய மடல். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்பதில் பெறும் மகிழ்ச்சியை என் நண்பர்களோடு நான் பகிர்ந்துகொள்வதுண்டு. இப்போது அவர்களுக்கும் சீன மொழியை கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்காக நாங்கள் முயற்சியுடன் கற்றுக்கொள்ள தொடங்கியுள்ளோம். பயனுள்ள தகவல்களை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு பாராட்டுக்கள்.

க்ளீட்டஸ்: அடுத்து தலைநாயார் பி. எஸ். சேகர் எழுதிய கடிதம். சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியில், வடகொரியாவை ஒட்டியமைந்துள்ள சீனாவின் தான்துங் நகரத்தை பற்றிய தகவலை கேட்டேன். கொரிய இன மக்களும், பிற இன மக்களும் அங்கே சுமூகமாக வாழ்ந்து வருவதையும், பள்ளிக்களில் சீன மற்றும் கொரிய மொழிகளில் பாடம் நடத்தப்படுவதையும், எல்லைப் பகுதியில் வடகொரியர்களின் வணிக வழிமுறைகளையும் மிக அழகாக அறியத்தந்தார் வான்மதி. நிகழ்ச்சி நன்றாக இருந்தது.

கலை: அடுத்து நேருக்கு நேர் நிகழ்ச்சி குறித்து சாத்தூர் சி. மனோகரன் எழுதிய கடிதம். சென்னை மறைமலை நகர் நேயர் சி. மல்லிகாதேவி அவர்களது பேட்டியை நிகழ்ச்சியில் கேட்டேன். உரையாடல் சுவையானதாக இருந்தது. நமது சீன வானொலிக்கு பெண் நேயர்களும் இப்படி சிறப்பாக பங்களிப்பதை அறிய மிகவும் பெருமையாக உள்ளது. அவரது சேவை வளரட்டும், நாமும் அந்த அன்புச் சகோதரியை ஊக்குவிப்போம்.

க்ளீட்டஸ்: ‌அடுத்து வெண்ணந்தூர் ஜா. முஜிப்பூர் ரஹுமான் எழுதிய கடிதம். சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில் சீனாவை பற்றி அறிந்திராத பல தகவல்களை தருவதற்கு நன்றிகள். யீ இன மக்கள் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் இவ்வினத்தோர் சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.

கலை: தொடர்ந்து, சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி குறித்து தார்வழி பி. முத்து எழுதிய கடிதம். இறால் இடம்பெறும் இனிப்பும், புளிப்பும் கலந்த ஓர் உணவு வகையின் தயாரிப்பு பற்றி வாணி அவர்கள் வழங்கக் கேட்டேன். எனக்கு இறால் மிகவும் பிடிக்கும். செய்முறையை அழகாக விளக்கிக்கூறியதை கேட்கும்போதே சுவைக்க நா ஏங்கியது.

க்ளீட்டஸ்: அடுத்து திருச்சி எம். தேவராஜா எழுதிய கடிதம். சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சியில் சின்ச்சியாங்கின் புகழ்பெற்ற காட்சித்தளமான கானாஸ் பற்றி கூறக் கேட்டேன். சிறந்த கோடைக்கால சுற்றுலாத்தலமாக விளங்கும் கானாஸை குளிர்காலத்திலும் உயிர்த்துடிப்புடன் இருக்கச் செய்ய சுற்றுலாத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பெரும்பயன் தந்துள்ளமை பாராட்டுக்குரியது.

கலை: அடுத்து ஈரோடு எம். சி. பூபதி எழுதிய கடிதம். இந்திய குடியரசு நாளை முன்னிட்டு இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் பற்றி அறிந்தோம். சீன இந்திய நட்புறவுக்கு சீன வானொலி தமிழ்ப்பிரிவு சிறப்பான ஒரு நட்புப்பாலமாக, கடந்த 47 ஆண்டுகளாக இருந்து அருகிறது. நானும் சீன வானொலியின் ஒரு நேயர் என்பதில் எனக்கு பெருமை.

க்ளீட்டஸ்: தொடர்ந்து மேல்குந்தா ஆர். சந்திரன் எழுதிய கடிதம். கேள்வி பதில் நிகழ்ச்சியில் சீனப் பொருளாதாரம், நாட்டின் நிலைமை, சீன அரசின் நடவடிக்கைகள், பதினோறாவது ஐந்தாண்டு திட்டம் என பல கேள்விகளுக்கு கலையரசி அவர்கள் மிகவும் அழகாக விளக்கம் அளித்தார். பாராட்டுக்கள்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040