• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இன்றைய வானஞ்சல் பகுதியில் மொத்தம் 7 நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள்
  2010-02-25 15:26:24  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை: நிகழ்ச்சியின் முதல் கடிதம் செந்தலை எம். செல்வகுமரன் எழுதியது. செய்திகளில் சீன ரஷிய உத்திநோக்கு ஒத்துழைப்புறவு பற்றி கேட்டேன். சர்வதேச நிதி நெருக்கடி சீனாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தினாலும், பொருளாதார வர்த்தக உறவை சீனா நன்றாகவே கையாள்கிறது. பொருளாதாரத் துறை தவிர மற்ற துறைகளில் சீனாவும் ரஷ்யாவும் சிறப்பாக ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளன. ரஷ்யாவில் சீன ஆண்டு போன்ற நடவடிக்கைகள் இருதரப்பு உறவை வளர்க்க உதவும் என்பது உண்மை.

க்ளீட்டஸ்: அடுத்து கார்கூடல்பட்டி, மெட்டாலா பாஸ்கர் எழுதிய கடிதம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் தமிழ்ப்பிரிவின் தலைவர் தி. கலையரசி அவர்களும், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் எஸ். செல்வம் அவர்களும் இணைந்து தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிக் கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தம் பற்றி வழங்கிய நிகழ்ச்சி கேட்டேன். இணையதளத்திலும் சிறப்பாக புதிய பகுதிகள் இடம்பெறுவதை அறிந்தேன். மகிழ்ச்சிம், பாராட்டுக்கள்.

கலை: ஊத்துக்குளி பி. டி. சுரேஷ்குமார் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியில் ஒரே அலையில் சாதனை முயற்சியாக 120 பேர் பலகை வைத்து பயணித்த தகவலை கேட்டு வியப்படைந்தேன். பலகை மீதேறி அலையாடும் இந்த விளையாட்டில் ஒரே நேரத்தில் ஒரே அலையில் 120 பேர் பயணித்து உலக சாதனை படைத்துள்ளமை பாராட்டுக்குரியது.

க்ளீட்டஸ்: இந்த நீலகிரி குந்தா மஞ்சூர் ஆர். சிவக்குமார் எழுதிய கடிதம். நவசீனாவின் 60வது ஆண்டு கொண்டாட்டம் பற்றி நிகழ்ச்சியின் மூலம் பல தகவல்களை தெரிந்துகொண்டேன். 60 ஆயிரம் மக்கள் பங்கேற்க, 1940 இளைஞர்கள் வண்ணமிகு நட்சத்திர அணிவகுப்பு செய்ய, 60 வாகனங்களும் அணிவகுப்பில் இணைய, சீனாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளபாடங்கள் அணிவகுத்துச் செல்ல, நவசீனாவின் வைரவிழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தது என்று அறிய முடிந்தது.

கலை: சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி ஊட்டி எஸ். கே. சுரேந்திரன் எழுதிய கடிதம். புகழ்பெற்ற பாடகி சங் ஃபென்யான் பற்றிய சீன மகளிர் நிகழ்ச்சியை வான்மதி வழங்கக் கேட்டேன். குழந்தைப்பருவம் முதலே இசை மீது ஆர்வம் கொண்டு, சீன மத்திய இசைக்கல்லூரியில் சேர்ந்து, வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி இந்த பாடகி புகழ் ஈட்டியதை கேட்டு மகிழ்ந்தேன். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு ஆதாரமாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது எனலாம்.

க்ளீட்டஸ்: சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி குறித்து ஆந்திர மாநிலம் மும்பை சுகுமார் எழுதிய கடிதம். உய்கூர் இன மக்களின் ஆட்டிறைச்சி சோறு தயாரிப்பு பற்றிய நிகழ்ச்சி பயன்மிக்கது. காட்டுத்தீயில் வெந்த இறைச்சியை உண்டு வளர்ந்து பரிணமித்தே மனிதன் ஆறறிவுள்ளவனாக மாறியுள்ளான எனலாம். இறைச்சி வலிமை தரக்கூடியது, உணவில் சேர்ப்பது நல்லது.

கலை: கோவை மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தின் 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது கூட்டம் பிப்ரவரி 21ம் நாள் ஞாயிறு அன்று நடை பெற்றது, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு S செல்வம். பாண்டிச்சேரி N பாலக்குமார்,G ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர் சீன வானொலி பற்றியும், தமிழ்ப்பிரிவின் இணையதளம் பற்றியும் நேயர் மன்றங்களின் செயல்பாடுகள் பற்றியும் விரிவான முறையில் கலந்தாலோசிக்கப்பட்டது.

க்ளீட்டஸ்: கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (1) செஞ்சீன நாட்டு அன்பர்களுக்கு வசந்த விழா வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. (2) 11 ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். (3) கோவையில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சீன வானொலிப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள சீன அரசு அனுமதி வழக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. (4) சீன வானொலி இணையம் மூலம் நடத்தும் சிச்சுவான் எதிர்பார்ப்புக்குரிய இடம் என்னும் பொது அறிவுப் போட்டியில் கோவைமாவட்டம் சார்பாக அதிக நேயர்கள் பங்கேற்பதாக தீர்மானிக்கப்பட்டது. (5) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மூத்த நேயர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கோவைமாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040