• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் மூலம் பத்து இணையதளப்பயன்பாட்டாளர்கள் தெரிவித்த கருத்துக்கள்
  2010-02-25 15:26:58  cri எழுத்தின் அளவு:  A A A   








திருச்சி துப்பாக்கித்தொழிற்சாலை எம். செந்தில் குமார்

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, சீனத் தரப்பின் கடுமையான எதிர்ப்பு மற்றும் கண்டனத்தைப் பொருட்படுத்தாமல், பிப்ரவரி 18ம் நாள் வாஷிங்டனில் தலாய் லாமாவைச் சந்தித்துரையாடியிருப்பது சீன அமெரிக்க 3 கூட்டறிக்கைகளை மதிக்காத நிலைப்பாடு ஆகும். அமெரிக்காவின் இதுபோன்ற சட்டாம்பிள்ளைத்தனமான செயல்கள் தொடரத்தான் செய்யும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்

பிப்ரவரித் திங்கள் 19 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இன்றைய •விளையாட்டுச் செய்திகள்• நிகழ்ச்சியில் இடம்பெற்ற •பெய்ஜிங் பனி விளையாட்டு விழா• என்ற கட்டுரையின் மூலம், பனிக்கால வாய்ப்பினைப் பயன்படுத்தி, பொதுமக்களும் குழந்தைகளும் பனி விளையாட்டுக்களை விளையாடி வருவதை அறிந்து மகிழ்ந்தேன். குறிப்பாக, குழந்தைப் பருவத்தினருக்கு, பனி விளையாட்டு மிகவும் பிடித்தமானது. தமிழகத்தில் இதற்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும், சீனக் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதை எண்ணி மகிழ்கின்றேன். பனிச்சறுக்கு விளையாட்டிலும், பறவைக் கூடு அரங்கு பயன்படுத்தப்படுவதன் மூலம், பறவைக் கூடு எந்த நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். சிறப்பான கட்டுரை ஒன்றை வழங்கிய மோகன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பகளாயூர் நாச்சிமுத்து.

சீனா வானொலி மூலம் தலைமை அமைச்சர் வென்சியாபா வசந்த விழா வாழ்த்துக்கள் கூறியபோது , மக்களுக்கு வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கவும் .கிராமப்புறங்களுக்கு வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்று கூறினார். சீனா நாட்டில் அரசு மக்கள் மீது காட்டும் அக்கறை மற்றும் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

திருச்சி அண்ணாநகர், வீட்டீ.இரவிச்சந்திரன்

ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் ஆயத்தப் பணிகள் நிறைவு பெற்றுக்கொண்டு வருவது குறித்து செய்திவிளக்கத்தில் கேட்டும், இணையதளத்தில் பார்த்தும் மகிழ்ந்தேன். வண்ணவிளக்குகள் கண்ணை கவரும் வகையில் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. இது குறித்து நமது செய்திகளில் அவ்வப்போது சிறப்பாக தகவல்கள் வழங்கிவருவது சிறப்பன ஏற்பாடு. ஷங்காய் உலகப்பொருட்காட்சி உலகப் புகழ் பெறுவது திண்ணம்.

திமிரி. புலவர் ராமதாஸ்

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பழம்பெரும் நூல்களின் கணக்கெடுப்பு பணி இவ்வாண்டு அதிகாரப்பூர்வமாக துவங்குவதை அறிந்தேன். பழம்பெரும் நூல்களின் பாதுகாப்புக் கடமை கடினமானது என்றாலும், இந்த கணக்கெடுப்புப் பணியைத் துவங்கி இருப்பது பாராட்டுக்குரியது. பழம்பெரும் நூல்கள் எதிர்கால சந்ததிகளுக்கும் பயன்பட இது வழி செய்யும்.

உத்திரக்குடி, சு. கலைவாணன் ராதிகா

பிப்ரவரி 15ம் நாள் ஒலிபரப்பான நட்புப்பாலம் நிகழ்ச்சியில் சீன-இந்திய கல்விப் பரிமாற்றம் குறித்து வேலுர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு.விஸ்வநாதன் அவர்களின் நேர்காணலை செவிமடுத்தோம். பல்கலைக்கழகத்தில் 14000 மாணவ, மாணவிகள் படித்து வருவதாகவும், குறிப்பாக சீன நாட்டில் இருந்து 420 மாணவர்கள் படிக்கின்றனர் என்று குறிப்பிட்டார். அதிலும் 100க்கு மேற்பட்ட சீன மாணவிகள் படிப்பதை நிறைய கலையரசிகள் படித்து வருகின்றார்கள் என்று அவர் கூறியவுடன் சிரிப்பு வந்துவிட்டது. ஆசிய வளர்ச்சி மீது ஆர்வம் கொண்ட வேந்தர் அவர்கள் உலக ஒற்றுமையை கல்வியின் மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும் என்று கூறியது மனமகிழ்ச்சியை தந்தது.

தென்பொன்முடி, தெ.நா.மணிகண்டன்.

சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில் மலை மேல் உள்ள சீன தேசிய இனப் பள்ளி பற்றி வழங்கக் கேட்டேன். சீன நாட்டின் பல்வேறு தேசிய இன மக்களின் குழந்தைகளுக்கு முறையான கல்விச் செல்வத்துடன் பாரம்பரிய பண்பாடுகளையும் புகட்டும் வகையில் மலை கிராமங்களின் பள்ளிகளில் துவங்கியுள்ள பாடமுறைகள், மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகள், மாணவர்களின் மனதில் நிலவும் மகிழ்ச்சி என்று பல தகவல்கள் மூலம் சீனாவின் தேசிய இன கல்வி முறை பற்றி தெறிந்து கொண்டேன். தமிழகத்திலும் அரசு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக ஆரம்ப பாடசாலை முதலே தரமான உயர்தர கல்வியை வழங்கி வருகின்றது.

என்.ராமசாமி, மதுரை-20.

சீனாவில் வசந்த விழா கொண்டாட்டம் நிறப்பாக நடைபெற்றது. இவ்வேளையில் சீனமக்கள் கரிகுறைந்த வாழ்க்கை முறையை ஆக்கப்பூர்வமாக ஆதரிக்கின்றனர் என்ற தகவல் வரவேற்கத்தக்கது. சீனாவின் வசந்தவிழா பாரம்பரியத்தை பேணிக்காக்கின்ற அடிப்படையில் சுற்றுச்சூழலலையும் பாதுகாக்க வேண்டும் என்ற கருந்து உட்புகுத்தப்படுவது பாராட்டுக்குரியது.

ஈரோடு, சி. சுந்தர் ராஜா

பிப்ரவரி 12ம் நாளன்று ஒலிபரப்பான செய்திகளை கேட்டேன்.

அதில் சின் ஹுவா செய்தி நிறுவனம் தலாய் லாமா குழு அண்மையில் வெளியிட்ட ஒரு கட்டுரை பற்றி கேட்டேன். தலாய் லாமா குழு தனது கட்டுரையில் பழைய திபெத்தின் சமூக நிலைமையை பூசி மெழுகும் செயல், கறுப்பை வெள்ளையாக்கி, உண்மைகளை அத்துமீறியது என்று கூறியதைக் கேட்டேன்.

பழைய திபெத்தில் அரசியலை மதத்துடன் ஒன்றிணைக்கும் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறை நடைமுறைப்படுத்தியமை உண்மையானது. இது சர்வதேசச் சமூகத்தின் பொது கருத்தும் ஆகும். "முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க‌ முடியாது" என்பார்கள் ,அது போலத்தான் அ தலாய் லாமா குழுவின் கட்டுரையும்.

பழனி பகத்சிங்

இசை நிகழ்ச்சி கேட்டேன். நிகழ்ச்சி மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. தமிழ் இசையை மட்டும் கேட்டுவரும் எங்களுக்கு இது போன்ற மாறுபட்ட இசையைக் கேட்கும்போது உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இசைக்கு மொழி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சியாக இது இருந்தது. நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கிய சீன வானொலிக்கு நன்றிகள் பல.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040