• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கூட்டத் தொடரில் கவனம் செலுத்தப்படும் அம்சங்கள்
  2010-03-08 14:33:33  cri எழுத்தின் அளவு:  A A A   
வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். நிகழ்ச்சியில் முக்கியமாக சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரிலும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடரிலும் சீன மக்கள் கவனம் செலுத்தும் அம்சங்கள் பற்றி திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமி கேட்கிறார். இக்கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தொடர்புடைய தகவல்களை தேர்வு செய்து தொகுத்து இந்நிகழ்ச்சியை வழங்குகின்றோம். தொகுத்து வழங்குபவர் தி. கலையரசி

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடர் பற்றி சீனாவில் முக்கிய செய்தியேடான மக்கள் நாளேட்டின் இணையதளத்தில் ஜனவரி 22ம் நாள் முதல் மக்களிடையில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. முதுமைக்கால காப்பீடு வழங்குவது, ஊழல் ஒழிப்பது, சட்டப்படி இடத்தின் உரிமை பெறுவது, வீட்டு விலையை கட்டுப்படுத்துவது, வறுமைக்கும் செழுமைக்குமிடை இடைவெளியை நீக்குவது, வேலையின்மைப் பிரச்சினையை நீக்குவது, மருத்துவத் துறையிலான சீர்திருத்தம், சட்ட நியாயத்தன்மை, ஜனநாயகத்தைக் கண்காணிப்பது, கல்வி நியாயத்தன்மை ஆகியவை பொதுவாக மக்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டாளர்கள் மிகவும் கவனம் செலுத்திய பத்து பிரச்சினைகளாகும்.

அடுத்து கவனத்துக்குரிய பத்து பிரச்சினைகள் பற்றி இணையதளப் பயன்பாட்டாளர்களின் கருத்துக்களை விளக்கிக் கூறுகின்றோம்.








முதலில் வறுமைக்கும் செழுமைக்குமிடையிலான இடைவெளியை முதலில் நீக்க வேண்டுமானால் அதை ஏற்படுத்தும் காரணிகளை நீக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினை உருவாவதன் இரண்டு முக்கிய காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று சமூகக் காப்புறுதி அமைப்புமுறை மேம்படாமை, இரண்டு வரி வசூலிப்பை ஒருங்கிணைக்கும் அமைப்பு முறை இல்லாமை. ஆகவே இந்த இரண்டு காரணிகளை நீக்கி பன்னோக்க சமூக காப்புறுதி அமைப்பு முறைமையை அரசு நிறுவ வேண்டும். வறிய பிரதேசங்களுக்கான ஆதரவையும் உதவியையும் அதிகரிக்க வேண்டும். இந்த முயற்சிகளின் மூலம் வறுமைக்கும் செழுமைக்குமிடையிலான இடைவெளி குறைக்கப்படும்.








பத்து பிரச்சினைகளில் வேலையின்மை பிரச்சினை இணையதளப் பயன்பாட்டாளர்கள் மிகவும் கவனம் செலுத்திய பிரச்சினையாகும். இந்த பிரச்சினை நீங்கினால் சமூகத்தின் இணக்கத்துக்கு உத்தரவாதம் வழங்கப்படும். உயர் கல்வி பெற்ற பட்டதாரிகள் முதல் விவசாயத் தொழிலாளர்கள் வரையான மக்களின் வேலை வாய்ப்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான கொள்கைகள் மற்றும் விதிகளை அரசு உயர்ந்த கவனத்துடன் வகுக்க வேண்டும் என்று இக்கருத்துக் கணிப்பில் பலர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.








நீதி நியாயம் பற்றியும் மக்கள் தெளிவான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சட்டப்படி நாட்டை ஆட்சிபுரிவது நாட்டை வலிமைப்படுத்துவதன் அடிப்படை கோட்பாடாகும். நியாயமான சட்டத்தின் முன்னால் அதிகாரிகள் ஊழலின்றி மக்களுக்கு சேவை புரிய வேண்டும். இந்த சூழ்நிலையில் மக்கள் அமைதியாக வாழ முடியும். ஆகவே நியாயமான சட்டத் துறை சமூகத்தின் நிதானதிற்கான அடிப்படை தளமாகும். இதில் நன்றாக ஊன்றி நிற்க வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட நியாயத்தன்மை ஜனநாயக அமைப்பு முறையின் உத்தரவாதம். அதிகாரத்துக்கு பதிலாக செயல்படுவதை ஜனநாயகம் தவிர்க்க முடியும். சட்டக் கண்காணிப்பு அதிகாரத்தை கொண்டு பணமாக்குவதை தடுக்க முடியும். நீதிபதிகள் தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்துவது கண்காணிப்பில் வைக்கப்பபடும் என்று இன்னொரு பகுதி இணையதளப் பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.








ஜனநாயகக் கண்காணிப்பு பற்றி கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றனர். ஜனநாயகக் கண்காணிப்பு வெறும் வாய் பேச்சாக இருக்கக் கூடாது. நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஜனநாயகக் கண்காணிப்பு வலைப்பின்னல் மூலம் மக்களின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். கோடிக்கணக்கான இணையதளப் பயன்பாட்டாளர்களின் கண்காணிப்பில் இருந்தால் சமூகத்தில் சீரற்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தவிர்க்கப்படக் கூடும். நீண்டகாலமாக நிலவியுள்ள தொடர்பு மற்றும் நட்பின் காரணமான மனிதப் பரிமாற்ற வலைபின்னலின் செல்வாக்கை நீக்கலாம். அதிகாரம் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படச் செய்ய வேண்டும் என்று சில இணையதளப் பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.








கல்வி நியாயம் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கல்விச் சீர்திருத்ததை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். அரசு சாரா பள்ளிகளை பெரிதும் வளர்க்க வேண்டும். கல்வியில் நியாயத்தன்மை சமூகத்தின் நம்பிக்கையை உத்தரவாதம் செய்யும் அடிப்படையாகும். கல்வித் துறையில் நிலவிய சீர்கேட்டை முழுமையாக நீக்கிய பின்னர்தான் நாட்டில் நம்பிக்கை காணப்படும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். மேலும் கிராமப்புறங்களிலுள்ள பள்ளி வசதிகளை கட்டியமைக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும். இந்தச் சூழ்நிலையில் சிறந்த ஆசிரியர்கள் அமைதியுடன் கற்பிக்கும் பணிப் பதவியில் நிலைநிறுத்தப்படுவர். கல்வித் தரத்தை உயர்த்துவதன் மூலம் கல்வி நியாயம் படிப்படியாக நனவாக்கப்படும் என்று இணையதளப் பயன்பாட்டாளர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.








வலைப்பின்னல் மூலம் நாட்டின் அரசியல் விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவிப்பது சிறந்த வழி முறையாகும். ஆனால் தொடர்புடைய வாரியங்களின் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இணையதளம் கட்டுப்பாடற்ற முறையில் புகார் செய்யும் இடமாக மாற விடக் கூடாது. இல்லை யென்றால் தடைபடுத்தப்படாத வெள்ளப் பெருக்கு போன்று சமூகத்தின் நலமான வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே மத்திய கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு பகுதி, சட்டப் பகுதி மற்றும் கொள்கை வகுப்பு வாரியங்கள் மக்களிடமிருந்து வரும் கருத்துக்களை தொகுத்து சரிப்படுத்த சிறப்புப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.








கரி குறைந்த பொருளாதாரம் இக் கருத்துக் கணிப்பில் மக்கள் கவனம் செலுத்திய பிரச்சினைகளில் ஒன்றாகும். கடும் மாசுபாடுடைய அதிக செலவு தேவைப்படும் தொழில் நிறுவனங்களை மூடுமாறு மக்கள் கருத்துக் கணிப்பில் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிடையில் உள்ளூர் பாதுகாப்பு வாதம் தடுக்கப்பட வேண்டும். அறிவியல் வழிமுறைகளின் நடைமுறையாக்கத்தின் கீழ் அவை கண்காணிக்கப்பட வேண்டும். எரியாற்றல் செலவு குறைக்கப்பட வேண்டும். தொடரவல்ல வளர்ச்சி பரப்புரை செய்யப்பட வேண்டும் என்று பல மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழ்கின்ற விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேயர்கள் இதுவரை சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரிலும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடரிலும் சீன மக்கள் என்ன கவனம் செலுத்தும் அம்சங்கள் பற்றிய திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமியின் கேள்விக்கான பதிலை கேட்டீர்கள். இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040