• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடிதங்களும் மின்னஞ்சல்களும்
  2010-03-11 10:52:05  cri எழுத்தின் அளவு:  A A A   








கடிதப் பகுதியில் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களில் கவனம் செலுத்துங்கள்.

கலை: ஆந்திர மாநிலம் மும்பை சுகுமார் எழுதிய கடிதம். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் மறைமலை நகர் மல்லிகாதேவி அவர்களின் நேர்காணல் நன்று. இன்றைக்கு தொலைக்காட்சித் தொடர்களில் ஊறிப்போயிருக்கும் பெரும்பாலான பெண்மணிகளுக்கு இடையில் வானொலி மீது ஆர்வம் கொண்டு கேட்டு கடிதங்களை எழுதி வரும் அவர் பாராட்டுக்குரியவர். அவரது கணவருக்கும் பாராட்டுக்கள்.

க்ளீட்டஸ்: இசை நிகழ்ச்சி குறித்து கவித்துளி சக்தீஸ்வரன் எழுதிய கடிதம். 23 வயது இளம் பாடகி Ji Zhe பற்றிய தகவலும், அவர் பாடிய பாடல்களும் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி அருமை. யாவ் இன இசைக்கு அவர் பாடிய பாடல், பீச் மலர்கள் பற்றிய பாடல், நீளமான காடு என்ற பாடல் என எங்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் பாடல்களை பாடகி Ji Zhe பாடினார். நிகழ்ச்சியை தொகுத்த திலகவதி அவர்களுக்கு என் நன்றி.

கலை: அடுத்து ஈரோடு எம். சி. பூபதி எழுதிய கடிதம். இவ்வாண்டு சீனாவில் புலி ஆண்டாக அமைவதை நமது நிகழ்ச்சியின் மூல அறிந்தேன். சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 1962ம் ஆண்டு அக்டோபர் 26ம் நாள் பிறந்த நான் எந்த சீன ஆண்டில் பிறந்தேன் என்பதை அறிய ஆவல்.

நண்பர் பூபதி அவர்களே நீங்கள் 1962ம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாளுக்கும், 1963ம் ஆண்டு ஜனவரி 24ம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் என்பதால், நீங்கள் பிறந்தது புலி ஆண்டில்தான்.

க்ளீட்டஸ்: சென்னை எஸ். ரேணுகாதேவி அவர்கள் எழுதிய கடிதம். பண்பாட்டுத் தகவல்களின் தொகுப்பு சிறப்பாக இருந்தது. சீன மக்களின் பண்பாட்டை அறிந்துகொள்ள இத்தொகுப்பு உறுதுணையாக இருந்தது. மேலும் நாள்தோறும் தமிழகத்திலிருந்து திரு. கடிகாசலம் அவர்கள் வழங்கும் பஞ்ச் செய்திகள் சிறப்பு. தமிழகச் செய்திகளையும் அறிந்துகொள்ள ஏதுவாக்கும் இந்த ஏற்பாடு, சிறப்பானது, பாராட்டுக்குரியது.

கலை: அடுத்து சீனாவில் ஏற்பட்ட பனிப்பொழிவு குறித்து பகளாயூர் பி. ஏ. நாச்சிமுத்து எழுதிய கடிதம். வட சீனாவில் பல்வேறு இடங்களில் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்ப்பிரிவின் செய்திகள் மூலம் அறிந்துகொண்டேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறேன். இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் இத்தகைய இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடுகளும், புவி வெப்பமேறலும் உலகின் காலநிலையை மாற்றியிருக்கின்றன.

சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்கள் பற்றி பல நேயர்கள் செலுத்திய ஆர்வமும் கவனமும்

கலை: வணக்கம் நேயர்களே. நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறோம். நான் கலையரசி.

க்ளீட்டஸ்: நான் க்ளீட்டஸ். வணக்கம் அன்பு நேயர்களே. நிகழ்ச்சிகளை தவறாது செவிமடுத்து, கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாக உங்கள் எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளும் உங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

கலை: சீனாவில் தற்போது சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்கள் பற்றி பல நேயர்கள் ஆர்வமும் கவனமும் செலுத்தி வருகின்றனர். அவர்களில் சிலர் கூட்டத்தொடர் பற்றிய கருத்துக்களை மின்னஞ்சல்கள் மூலம் உடனுக்குடன் எம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

க்ளீட்டஸ்: சரி, இன்றைய நிகழ்ச்சியை இவ்விரு கூட்டத்தொடர்கள் பற்றிய நமது நேயர்களின் கருத்துக்களோடு துவங்குவோம்.

மின்னஞ்சல் பகுதி

எஸ்.செல்வம், வளவனுர் புதுப்பாளையம்.

சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவு ஒலிபரப்பு மற்றும் தமிழ்ப்பிரிவு இணையம் மூலம், சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆம் நாள் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அவர்கள் வழங்கிய அரசுப் பணி அறிக்கையின் விவரங்களை தெளிவான முறையில் அறிந்து கொண்டேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வளர்ந்த நாடுகளே தத்தித் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், 2010 ஆம் ஆண்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் இலக்கு எட்டு விழுக்காடு என உறுதிப்படுத்தியமை, சீனாவின் தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. உறைவிடப் பிரச்னை, ஊழல் எதிர்ப்புப் பணி, விலைவாசி, மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி என பல்வேறு முக்கிய பிரச்னைகளில் இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கை தீவிர கவனம் செலுத்துகிறது. மேம்போக்காக இல்லாமல், சீனாவின் உண்மையான வளர்ச்சியை நிலைநிறுத்தும் இத்தகைய சிறந்த அரசுப் பணியறிக்கையை வழங்கிய சீனத் தலைமை அமைச்சருக்கு என் அன்பான பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விழுப்புரம்.எஸ்.பாண்டியராஜன்,

கடந்த சில நாட்களாக, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இரு முக்கியக் கூட்டத் தொடர்கள் மீது நான் பெரும் கவனம் செலுத்தி வருகின்றேன். கடந்த ஒரு வார காலமாகவே, என் மனைவின் மருத்துவச் சிகிச்சைக்காக நான் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. அந்த நிலையிலும், கடும் இடையூறுகளுக்கு நடுவே நேரத்தை ஒதுக்கி, சீனாவின் கூட்டத் தொடர்கள் பற்றி சீன வானொலி மூலமாக அறிந்து கொள்வதில் நான் ஆர்வமாக இருந்தேன். சீனத் தலைமை அமைச்சரின் அரசுப் பணி அறிக்கையில், பொதுமக்களின் குறிப்பாக சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும் முக்கியப் பிரச்னைகளை அகற்ற நன்கு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. சீனா, சொல்லுவதையும் செய்யும். சொல்லாததையும் செய்யும். வாழ்த்துக்கள்.

தென்பொன்முடி நாகமணி

மார்ச் 5ம் நாள் காலை பெய்ஜிங்கில் துவங்கிய 11ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். சீன தலைமயமைச்சர் வென்சியாபாவ் அரசவை சார்பில் அரசுப்பணி அறிக்கையை வழங்கினார், அதில் அவர் 2010ல் சீன பொருளாதார வளர்ச்சி சுமார் 8 விழுக்காட்டை எட்டும் என்று கூறினார் . சீனா தனது இலக்கை எட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சீனாவின் அரசியல் நிகழ்வை வீட்டில் இருந்தவாரே அறிந்துகொள்ள செய்த சீன வானொலிக்கு நன்றி.

திருச்சி அண்ணாநகர், V. T. இரவிச்சந்திரன்

மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 3வது கூட்டத்தொடர் மக்கள் மா மண்டபத்தில் துவங்கியமை குறித்த விளக்கம் செவிமடுத்தேன். 10 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், இம்மாநாட்டின் உறுப்பினர்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கையையும், கருத்துரு பற்றிய பணியறிக்கையையும் கேட்டறிந்து பரிசீலித்து, சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் அவர்கள் கலந்து கொண்டு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி பற்றிய கொள்கைகளைப் பற்றியும் பொது மக்கள் அக்கறை செலுத்தும் பிரச்சினைகளைப் பற்றியும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் தெரிவித்து, நடப்பு கூட்டத்தொடரும் வழமை போல் வெற்றியடைச் செய்திடவேண்டுமென வாழ்த்துகிறேன்.

புதுக்கோட்டை ஜி வரதராஜன்

மார்ச் 5ம் நாள் துவங்கிய சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடர் சிறப்புடன் நடைபெற்று இனிதெ நிறைவேற வாழ்த்துகின்றேன். சீன தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் 3000 பேரவை பிரதிநிதிகளின் முன் அரசின் பணியறிக்கையை வழங்கினார். சீர்திருத்தப்பட்ட அயராமல் தயாரிக்கப்பட்ட அரசின் பணியறிக்கை இது என்பதில் ஐயமில்லை. கடந்த ஆண்டு பணியறிக்கை முன்வைத்த பல்வகை வளர்ச்சி இலக்குகளுடன் சீனா நனவாக்கிய வலிமையான பொருளாதார வளர்ச்சி, உலகப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு, உந்து சக்தியாக விளங்குவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது.

சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி

3000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் 5ம் நாளன்று துவங்கியதை அறிந்தேன். சீன தலைமை அமைச்சரான திரு.வென்ச்சியாபாவ் அவர்கள் வழங்கிய 2010ம் ஆண்டுக்கான பணி அறிக்கையை வானொலி மூலமும் இணையதளம் மூலமும் தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்டேன். இவ்வறிக்கையின் மூலம் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி, வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பது, விலை வாசி உயர்வினை கட்டுப்படுத்துதல், இருகரை உறவினை வலுப்படுத்துவது, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகள் பற்றியும் சீனாவின் சுமூகமான தூதாண்மை கொள்கை பற்றியும் அறியமுடிந்தது.

பாண்டிச்சேரி N.பாலகுமார்

மார்ச் 5ம் நாள் காலை பெய்ஜிங்கில் துவங்கிய 11ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரில் சீனத் தலையமைச்சர் வென்ச்சியாபாவ் வழங்கிய பணியறிக்கையில் மக்கள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களும், இடம்பெற்றுள்ளதால் மக்கள் மீது அரசு காட்டும் ஈடுபாடு மற்றும் அக்கறையின் வெளிபாட்டாக எடுத்து கொள்ள முடிகிறது. உறைவிட பிரச்சினையைத் தவிர, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, சமூகக் காப்புறுதி அமைப்பு முறை மேம்பாடு, வருமான பங்கீட்டு அமைப்பு முறையின் சீர்திருத்தம், மருத்துவ மற்றும் சுகாதார சீர்திருத்தம், கல்வி லட்சியத்தின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி, அரசுப் பணியறிக்கை திட்டவட்டமான தீர்வு நடவடிக்கைகளை பற்றி விரிவாக விளக்கிக்கூறியது, என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் கவனத்துடன் தயாரித்த இந்த பணியறிக்கை, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியாக அமைந்துள்ளது.

முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர்

சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரில் அரசுப் பணியறிக்கையை வழங்கிய செய்தியை வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன. சீனா, பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது, சமூகத்தின் நியாயத்தை பாதுகாப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட‌, இப்பணியறிக்கை என்று, ஜப்பானிய அசாஹி ஷிம்புன் என்னும் செய்தியேடு வெளியிட்ட விமர்சனம் கூறியது பாராட்டுக்குரியது. சீன அரசின் பணியறிக்கை உலக நாடுகளின் ஊடகங்கள் பலவற்றை கவர்ந்துள்ளதை இது காட்டுகிறது.

பாண்டிச்சேரி .ஜி.ராஜகோபால் (051750)

கடந்த ஐந்தாம் நாள் துவங்கிய சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தொடரில், சீன தலைமை அமைச்சர் வென் சியா பாவ் அவர்கள், வழங்கிய பணியறிக்கை, நெருக்கடிக்குப் பிந்திய சீனாவின் வளர்ச்சியினை வெளிப்படுத்தியது. மேலும், சீன மக்கள் கவனம் செலுத்துகின்ற பிரச்சனைகளுக்கு, இப்பணி அறிக்கை தீர்வு நடவடிக்கைகளை முன்வத்துள்ளது.

மக்கள் கவனம் செலுத்தும் பிரச்சினைகளை சீன அரசு முன்வைத்துப் பார்த்து நேர்மையாக பதிலளித்துள்ளது அருமை.

சீனாவில் உறைவிட பிரச்சினையைத் தவிர, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, சமூக காப்புறுதி அமைப்பு முறை மேம்பாடு, மக்களின் வருமான பங்கீடு அமைப்பு முறையில் சீர்திருத்தம், மருத்துவ மற்றும் சுகாதார சீர்திருத்தம், மக்களின் கல்வி லட்சியத்தின் வளர்ச்சி என முக்கிய பிரச்சினைகளைப் பற்றி இப்பணியறிக்கை திட்ட வட்டமான தீர்வு நடவடிக்கைகளை, விபரமாக விளக்கியுள்ளது மிகவும் சிறப்பு. சீன மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் நிச்சயம், சீன மக்களின் சிறப்பான வாழ்க்கைக்கு வழிகாட்டி என்றால் அது மிகையில்லை.

மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி

சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் 5ம்நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. தலையமைச்சர் வென் ச்சியாபாவ் வழங்கிய அரசின் பணியறிக்கையில் பல அம்சங்கள் விளக்கப்பட்டன. சீன மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி சமுக இணக்கத்தை முன்னேற்றுவது முதலியவை இவ்வாண்டு அரசின் முக்கிய கடமையாக கொள்ளப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, வேலை இழப்பு விகிதத்தை குறைப்பது ஆகியவை இவ்வாண்டு அரசின் முக்கிய நோக்கமாகும். சீன அரசின் நோக்கம் முழுமை பெற எனது வாழ்த்துகள்

பாண்டிச்சேரி என்.வசந்தி.

கடந்த ஓராண்டுக் காலமாகத்தான் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டு வந்தாலும், சீனாவின் அரசியல் நிகழ்வுகளில், இரு கூட்டத் தொடர் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி நான் நன்றாக தெரிந்து வைத்துள்ளேன். அந்த வகையில், 2010 ஆம் ஆண்டில் சீனா எவையெற்றையெல்லாம் செய்யப் போகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக, கூட்டத்தொடர் பற்றிய தகவல்களை அன்றாடம் சீன வானொலி மூலமாக அறிந்து கொள்வதில் கவனம் செலுத்தினேன். 2010 ஆம் ஆண்டிலும், உலகில் சீனா முன்னிலை வகிக்கும் என்ற நம்பிக்கை, தலைமை அமைச்சரின் அரசுப் பணி அறிக்கைக்குப் பின்னர் என்னுள் எழுந்துள்ளது. கவர்ச்சி அரசியலை விடுத்து, நம்பிக்கை அரசியலை நடத்தும் சீனத் தலைவர்களை பாராட்டவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040