• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரதிநிதிகளின் வேண்டுகோள்
  2010-03-15 09:49:52  cri எழுத்தின் அளவு:  A A A   








இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். கடந்த நிகழ்ச்சியில் சிறுநாயக்கன்பட்டி கே வேலுசாமி சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடர் ஆகியவற்றில் சீன மக்கள் கவனம் செலுத்தும் பிரச்சினைகள் பற்றி கேள்வி கேட்டார். இவை தொடர்பாக குறிப்பிட்ட அளவில் விளக்கி கூறப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில் இவ்விரண்டு கூட்டத் தொடர்கள் நடைபெறுகின்ற வேளையில் கரி குறைந்த பொருளாதார வளர்ச்சி பற்றி சில மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் சில உறுப்பினர்களும் சீனாவுக்கான பல்கேரிய தூதரும் செலுத்திய கவனம் பற்றி விளக்கிக் கூறுகின்றோம்.

கரி குறைந்த பொருளாதார வளர்ச்சி பற்றி சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் மத்திய நாணயப் பல்கலைக்கழகத்தின் பங்கு முன்பேர வர்த்தகம், ஆய்வகத்தின் தலைவருமான ஹெ ச்சியாங் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். சீனாவுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குமிடையில் கரி குறைந்த தொழில் நுட்ப இடைவெளி அதிகமில்லை. யார் முன்முயற்சியுடன் இத்துறையை வளர்ப்பது என்பதே இத்துறையின் திறவு கோலாகும். ஆகவே தற்போது கரி குறைந்த பொருளாதாரத்தை வளர்ப்பது சீனாவைப் பொறுத்தவரை மிகவும் சிறந்த வரலாற்று வாய்ப்பாகும் என்று செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் அவர் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது.

கரி குறைந்த பொருளாதாரத்தைப் பார்த்தால் தற்போது நிலவுகின்ற பிரச்சினையானது, அதிகமாக முதலீடு செய்து மிகக் குறைவான பயன் பெறுவதாகும். அதிகமான செலவும் குறைவான பயனும் என்பது இத்துறையின் தற்போதைய முக்கிய பிரச்சினையாகும். இத்தடையை நீக்க 3 அல்லது 5 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியில் மாபெரும் முன்னேற்றமடைய வேண்டும். எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் துறையில் ஒரு முன்னேற்றம் அடைந்தால் நமக்கு பரந்த எதிர்காலம் உருவாகும். கரி குறைந்த தொழில் புரட்சி ஏற்படக் கூடும். ஆகவே எரியாற்றலைச் சிக்கனப்படுத்துவது தொடர்பான தொழில் நுட்ப ஆய்வு, அகழ்வு மற்றும் தொழில்மயமாக்கத்துக்கு அரசு கொள்கை மற்றும் நிதி ஆதரவில் முன்னுரிமையை வழங்க வேண்டும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் மத்திய நாணய பல்கலைக்கழகத்தின் பங்கு முன்பேர வர்த்தக ஆய்வகத்தின் தலைவருமான ஹெ ச்சியாங் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தம் கருத்தை தெரித்தார்.

கரி குறைந்த பொருளாதார வளர்ச்சியில் சர்வதேசச் சமூகத்துடன் ஒத்துழைத்து முயற்சி செய்வது பற்றி சீன தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் சீனாவின் ஹூவாங்மிங் சூரிய ஆற்றல் குழுமத்தின் தலைமை இயக்குனருமான ஹூவாங்மிங் சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் கலந்து கொள்ள பெய்ஜிங் வந்த போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் கருத்து தெரிவித்தார். சூரிய ஆற்றல் வளர்ச்சித் துறையில் தேசியப் பேரவையின் ஒரேயொரு பிரதிநிதியாக அவர் திகழ்வது குறிப்பிடத்தக்கது. கரி குறைந்த பொருளாதார வளர்ச்சித் துறையில் சீன அரசும் சமூகத்தின் பல்வேறு வாரியங்களும் மேற்கொண்ட பல முயற்சிகள் பற்றி சர்வதேசச் சமூகம் போதியளவு அறிந்து கொள்ள வில்லை. ஆகவே 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் ஆண்டு கூட்டத் தொடரும் துவங்குவதற்கு முன் ஹூவாங்மிங் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிந்தைய மாநாடு அதாவது 2012ம் ஆண்டு காலநிலை தொடர்பான உலக மாநாட்டை நடத்த சீனா உற்சாகத்துடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். மாநாட்டில் கரி குறைந்த பொருளாதார வளர்ச்சியில் சீனா பெற்றுள்ள சாதனைகளை உலகத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இதன் மூலம் எரியாற்றலைச் சிக்கனப்படுத்துவது பற்றி பொது மக்கள் புரிந்து கொள்வதென்ற எண்ணம் மேலும் உயர்த்தப்படும்.

பசுங்கூட வாயு வெளியேற்றம், மாசுபாடு, எரியாற்றல் செலவு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை பற்றி உலகம் சீனாவை தவறாக புரிந்து கொண்டுள்ளது. சீனா அதிகமாக மூலவளங்களை நுகர்வு செய்துள்ளது என்பது உலகத்தின் பொதுக் கருத்து. ஆனால் உண்மையில் சீனா மூலவளங்களை பெரிதும் சிக்கனப்படுத்தி வருகின்றது. எதிர்காலத்தில் சீனா மேலும் இப்படியே செயல்படும். ஆகவே கூட்டத் தொடரில் கலந்து கொள்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி காலநிலை மாற்றம் பற்றிய 2012ம் ஆண்டு உலக மாநாட்டை நடத்த சீனா விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். கரி குறைந்த பொருளாதாரத் துறையில் சீனா உலகத்துக்கு முன்னேறிய மாதிரியாக அமைந்து புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். ஹூவாங்மிங் தம் எண்ணத்தை விளக்கிக் கூறும் போது இவ்வாறு கூறினார்.
சீனாவின் சில கரி குறைந்த துறைகள் உலகின் முன்னணியில் உள்ளன. அவற்றுக்கு மிகப் பரந்த எதிர்காலம் உண்டு. காலநிலை மாற்றம் பற்றிய 2012ம் ஆண்டு உலக மாநாட்டை நடத்த சீனா விண்ணப்பம் செய்யுமென நம்புகிறேன் என்று ஹூவாங்மிங் கூறினார்.
புள்ளிவிபரங்களின் படி ஹூவாங்மிங் சூரிய ஆற்றல் குழுமம் முதலீடு செய்து நிறுவிய சீனாவின் சூரிய ஆற்றல் மண்டலம் தற்போது உலகில் மிகப் பெரிய சூரிய ஆற்றல் தொழில் நிறுவனங்கள் குவிந்துள்ள மண்டலமாகும். இந்நிறுவனங்கள் பயன்படுத்திய எரியாற்றலில் சுமார் 70 விழுக்காடு சூரிய ஆற்றலாகும். சூரிய பயன்பாடு உலகின் முன்னணியில் இருக்கின்றது. இது பற்றி ஹூவாங்மிங் கூறியதாவது.

சீனாவின் சூரிய ஆற்றல் மண்டலத்தின் பரப்பளவு 10 லட்சம் சதுர மீட்டருக்கு மேலாகும். கட்டிடங்கள், ஆலைக் கட்டிடங்கள், பொது வசதிகள், உணவு விடுதிகள், குடியிருப்புப் பிரதேசங்கள் ஆகியவை கரி குறைந்த மூலவளங்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவை உயிரினச் சுற்றுச் சூழல் கோரிக்கைக்கு ஏற்றவை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சீனாவின் சூரிய ஆற்றல் மண்டலம் பன்னாடுகள் பின்பற்றும் மாதிரியாகவும் எதிர்கால நகரங்கள் மற்றும் குடியிருப்புப் பிரதேசங்களாகவும் மாறும் என்று ஹூவாங்மிங் முழு நம்பிக்கையுடன் விவரித்தார்.

கரி குறைந்தப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்வதில் சீனாவின் முயற்சியை சீனாவுக்கான பல்கேரிய தூதர் Georgi Pejchinov உயர்வாகப் பாராட்டினார். மார்ச் 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கிய 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் தூதர் Georgi Pejchinov கலந்து கொண்டு சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் வழங்கிய அரசுப் பணியறிக்கையைக் கேட்டறிந்தார். எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் சீன அரசு மேற்கொண்ட முயற்சியை அவர் உற்சாகத்துடன் பாராட்டினார். சீன அரசு எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு உயர்ந்த குறிக்கோளை வகுத்துள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார். இது பற்றி அவர் கூறியதாவது.

இந்த குறிக்கோளை நடைமுறைப்படுத்தும் போது சீன அரசு சில இன்னல்களை எதிர்கொள்கின்ற போதிலும் இவற்றை நிறைவேற்றப் பாடுபட்டு வருகின்றது. சுற்றுச் சூழலைப் பாதுக்காப்பது சீன நலனைப் பாதுக்காப்பதாகும் என்பதை சீன மக்கள் அறிந்து கொண்டுள்ளனர் என்று Georgi Pejchinov கூறினார்.
2009ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் 2020ம் ஆண்டில் நாட்டின் உற்பத்தி மதிப்புக்கான கரியமில வாயு வெளியேற்ற அளவு 2005ம் ஆண்டில் இருந்ததை விட 40 முதல் 45 விழுக்காடு குறையும் இலக்கை சீனா முன்வைத்தது. எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு சொந்த வடிவத்தில் ஆதரவளிக்கின்றது. அதாவது தற்போதைய பொருளாதார வளர்ச்சியைப் போதியளவில் கருத்தில் கொள்வதென்ற அடிப்படையில் தகுந்த வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்கை சீனா வகுத்து பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்வதற்குமிடையில் சமநிலைப் புள்ளியை தேட சீனா பாடுபட்டு வருகின்றது. மார்ச் 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கிய 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் பல்கேரிய தூதர் Georgi Pejchinov கலந்து கொண்ட போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் இவ்வாறு கூறினார்.
சரி நேயர்களே பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் கரி குறைந்த பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்வது பற்றி சில பிரதிநிதிகளும் சீனாவுக்கான பல்கேரிய தூதரும் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டீர்கள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040