• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் பகுதியில் நேயர்களின் கருத்துக்கள்
  2010-03-18 09:28:29  cri எழுத்தின் அளவு:  A A A   








மின்னஞ்சல் பகுதியில் 7 இணையப்பயன்பாட்டாளர்களின் கருத்தை கேளுங்கள்.
உத்திரக்குடி.சு.கலைவாணன் இராதிகா
மார்ச் திங்கள் 10ம் நாளன்று நேயர் நேரம் பகுதியில் முற்றிலும் ஒரு வித வேறுபாட்டை காண முடிந்தது. மின்னஞ்சல் பகுதியில் 11 நேயர்களின் கருத்துக்களை கேட்டபோது சீனாவில் நடைபெறுகின்ற 11வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஒரு மனநிறைவு ஏற்பட்டது. மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றதை அப்படியே படம்பிடித்து காட்டிவிட்டார்கள் நமது அற்புத நேயர்கள்.
அரசின் பணி அறிக்கையில் சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் அவர்கள் சீன மக்களுக்கு கல்வி முதல் மருத்துவம் வரை அனைத்து வகை செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை பற்றி கூறியது சிறப்பு.

வளவனுர் புதுப்பாளையம்.எஸ்.செல்வம்
மார்ச் திங்கள் 10 ஆம் நாள் இடம்பெற்ற •சீன மகளிர்• நிகழ்ச்சியில் •நிழற்படக் கலைஞர் சென்மா• என்ற கட்டுரையைக் கேட்டேன். அழகிய பெரிய கண்களுடன் கூடிய அழகிய இளம் நங்கையாக இருந்தபோதிலும், படிப்பின் மீது அக்கறை ஏதுமின்றி காணப்பட்ட போதிலும், ஓவியத்தின்பால், அதீத அக்கறை கொண்ட சென்மா, மிகச்சிறந்த நிழற்படக் கலைஞராக மாறியதை அறிந்து மிகவும் மகிழ்ந்து போனேன். சிறந்த நிழற்படக் கலைஞராக திகழ்வதற்கு, நல்ல கற்பனைத் திறன் அவசியம். அந்தத் திறன் இருப்பதாலேயே இவ்விளம்வயதிலேயே கலைப்பனிமணை ஒன்றை நடத்தும் திறனை அவர் பெற்றிருக்கின்றார். இவருடைய புரிந்துணர்தல் மற்றும் நடைமுறை அனுபவத்தை கணக்கிட்டால், எதிர்காலத்தில் உலகளாவிய மிகச் சிறந்த நிழற்படக் கலைஞராக இவர் மாறுவார் என்றே எனக்குள் எண்ணம் எழுகின்றது. பிரெஞ்சு இதழான China Plus என்ற இதழின் முகப்பு அட்டையில் இடம்பெற்றாலும், அலட்டிக் கொள்ளாத இவரின் சுபாவம் என்னைப் பெரிதும் கவர்கின்றது.
திமிரி புல‌வ‌ர்.வி.இராம‌தாஸ்.
பிப்ரவரி திங்களில் சீன மக்களின் நுகர்வுக் குறியீடு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 2.7 விழுக்காடு அதிகம் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். காரணம் பொருளாதார சிக்கலில் இருந்து சீனா விடுபட்டு மெல்ல மெல்ல வளர்ச்சி அடைவதாகவே தெரிகிறது. தொழிற்துறைப் பொருட்களின் சந்தைப்படுத்தலுக்கு முன்பான தொழிற்சாலை விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 5.4 விழுக்காடு அதிகம் என்பதும் நல்ல வளர்ச்சியின் அடையாளம்தான். 11வது தேசிய மக்கள் பேரவை மற்றும் தேசிய அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்களின் நிகழ்வுகள், சீனாவிற்கு நல்ல எதிர்காலத்தை தலைவர்கள் காட்டுவதை உணர்த்துகிறது.

நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங்
முதல் தொகுதி பெண் விமானிகள் பற்றிய சீன வானொலி ஒலிபரப்பிய செய்தி அருமையிலும் அருமை. இன்று உலகத் தலைவர்கள் வாய் கிழிய பெண் சமத்துவம் பற்றி பேசினாலும் முதன் முதலாக 1951-ம் ஆண்டில் சீனத்தலைவர் மாவ் சே துங் அவர்கள்தான் வியத்தகு முறையில் பெண் விமானி அணியை சீனாவில் உருவாக்க முடிவு செய்தார். 1952-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாள் பெண் விமானிகள் சோதனை முறையில் பறத்தல் மேற்கொண்டனர். எனவே இந்த உலக மகளிர் நாளின் 100-ம் ஆண்டு விழாவை கொண்டாடும்போது, சீன தலைவர் மாவ் சே துங்கை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
பி.கண்ணன்சேகர்
சீனாவின் பொருளாதார வளர்ச்சி வழிமுறை மாற்றப்பட்டு, தொழிற்துறைகளின் கட்டமைப்பு சரிப்படுத்தப்பட வேண்டும். 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடரில் ஹெபெய் மாநிலப் பிரதிநிதிக் குழுவின் விவாதத்தில் கலந்து கொண்ட சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் இதை வலியுறுத்தியது ஆக்கபூர்வமானது.
பாரம்பரிய தொழிற்துறைகளின் கட்டமைப்பின் மேம்பாட்டைத் தூண்டி, பின்தங்கிய உற்பத்தி ஆற்றலை அகற்றி, தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் புத்தாக்கத்தை விரைவுப்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்தது வளர்ச்சிக்கு உதவும். சீனாவின் அனைத்து பிரதேசங்களின் பல்வேறு துறைகளது வளர்ச்சிக்கு பயன்மிக்க பணியறிக்கை முன் வைக்கப்பட்டது பாராட்டுக்குரியது.

விழுப்புரம்.எஸ்.பாண்டியராஜன்
மார்ச் திங்கள் 10ம் நாளன்று வழங்கிய சீன மகளிர் நிகழ்ச்சியை கேட்டேன். உலக மகளிர் நாள் கொண்டாடிய பிறகு வழங்கப்பட்ட முதல் சீன மகளிர் நிகழ்ச்சி இது. நிழற்படக் கலைஞர் பற்றி கூறியது நிகழ்ச்சிக்கு மகுடமாக அமைந்தது என்று கூறலாம். புநிழற்படம் என்பதும் ஒரு வரலாற்றுச் சின்னம்தான். மற்ற வரலாற்றுச் சின்னங்களை விட இது எந்த வகையிலும் குறைந்தது அல்ல. என் மனைவி, என் மகள் சிறுவயது நிழற்படங்கனை நான் சேகரித்து வைத்துள்ளேன். என் பேத்திக்கு வரலாற்றுச் சின்னமாக வழங்குவதற்காக. நிழற்படம் என்பது, கடந்த கால நிகழ்வை மனதில் அசை போட வைக்கும் அரிய சின்னமாகும். நிகழ்ச்சியை வழங்கிய சீன வானொலிக்கு என் பாராட்டுக்கள். தமிழ்ப்பிரிவு பெண் பணியாளர்களுக்கு என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்.
ஈரோடு. சி சுந்தர் ராஜா
மார்ச் திங்கள் 12 நாள் ஒலிபரப்பான செய்திகளின் மூலம் தலாய் லாமா குழு ஆயுதக் கலகம் நடத்திய 51வது ஆண்டு நிறைவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரநிதிதிகளவை தலைவர் நான்சி பெலோசி அம்மையார் அறிக்கை வெளியிட்டத்தை ப‌ற்றி அறிந்தேன். அச்சில்லாத‌ தேராக‌ இருந்த‌ திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைபெற்ற 51 ஆண்டுகளில், சமூகப் பொருளாதார வளர்ச்சி, மனிதநேய இலட்சியம், மத மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு முதலியவற்றில் மாபெரும் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்று உன்மை நிலையை உள்ளபடியே வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஜின் காங் தெரிவித்த‌ற்கு பாராட்டுக்க‌ள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040