வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். மார்ச் திங்கள் 5ம் நாள் முதல் 14ம் நாள் வரை சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் நடைபெற்ற போது சீன மக்கள் செலுத்தும் நமது நேயர்களும் ஆர்வம் கொள்ளும் பிரச்சினைகள் பற்றி உறுப்பினர்கள் விவாதித்தனர். இன்றைய நிகழ்ச்சியில் அவர்கள் பள்ளியை தேர்வு செய்வது பற்றி விவாதித்து தெரிவித்த கருத்துக்களை கேளுங்கள். தொகுத்து வழங்குபவர் தி. கலையரசி
யாங் சிங் பிங் சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகளில் ஒருவராவார். அவர் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரின் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவரும் கல்வி வல்லுனரும் ஆவார். 11வது தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது செய்தியாளருக்கு அவர் பேட்டியளித்தார். தற்போது கட்டாயக் கல்வி கொண்ட முக்கிய பள்ளி, முக்கிய வகுப்பு போன்ற விதிகள் நீக்கப்பட்ட போதிலும் பள்ளியை தேர்வு செய்வது தொடர்பான போக்கு கட்டுபாட்டற்ற முறையில் வளர்ந்துவருகின்றது என்று அவர் கவலையுடன் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது.
தற்போது பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட இடங்களில் பெற்றோர்கள் பள்ளியை தாங்களாக தேர்வு செய்யும் முறை இன்னும் தளர்ச்சியடைய வில்லை. எங்கள் கல்வி வளர்ச்சியில் உண்மையான சம நிலைமை காணப்பட வில்லை என்றார் அவர்.
இந்த பிரச்சினையை தீர்க்க ஆசிரியர்கள் மற்றும் கல்வி வசதிகள் குறைந்த பள்ளிகளுக்கு அரசு ஆதரவு அளவை அதிகரிக்க வேண்டும். பள்ளிகளுக்கிடையில் சம நிலையில் கல்வி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தவிரவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இதர ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு இந்த மென்மையான மூலவளங்களை போதியளவில் சரிசம நிலையில் வளரச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது.
நமது பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். முக்கிய பள்ளிகள், புகழ் பெற்ற பள்ளிகள் என்ற அறியப்படுவை ஆகியவற்றில் பல சிறந்த ஆசிரியர்கள் அதிகளவில் சேர்ந்து பணி புரிகின்றனர். இந்த பள்ளிகள் மிகச் சிறப்பானவை என்று மக்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் இந்த பள்ளி தொடர்பான எல்லை மற்றும் வரையறையை முறியடிக்க வேண்டும். பள்ளிகளுக்கிடையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாறிமாறி கல்விப் பரிமாற்றம் மேற்கொண்டால் கல்வித் துறையில் சம வளர்ச்சி நிறைவேறுவதில் இன்னல் இருக்காது. இது வலுவானதோர் நடவடிக்கையாகும் என்று யாங் சிங் பீங் கூறினார்.
கல்வித் துறையின் வளர்ச்சியில் அரசு சாரா உயர் கல்வித் துறையின் வளர்ச்சி பற்றி சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினரும் புதிய கீழை கல்வி அறிவியல் தொழில் நுட்ப குழுமத்தின் தலைமை இயக்குனருமான yu min hong மாநாட்டின் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது தம் கருத்துக்களை தெரிவித்தார்.
சீனப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகாலத்தில் சீனாவில் அனுபவங்களை கொண்ட தொழில் முனைவோர் பிரிவு உருவாகும். அவர்கள் அரசு சாரா உயர் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு நிதி உதவி வழங்கும் நிதியமும் நிறுவப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது சீனாவில் அரசு சாரா உயர் நிலை கல்வித் துறை தொடக்கக் கட்டத்தில் உள்ளது. அதன் வளர்ச்சி சுதந்திர பக்குவ நிதியத்தின் உதவியை சார்ந்திருக்கும். இத்துறையை நடத்துவதற்கான பெரும் தொகுதி தொழில் முனைவோர்கள் தன்னார்வத்துடன் நன்கொடை வழங்குவர் அல்லது இத்துறையில் முதலீடு செய்வர் என்று தலைமை இயக்குனர் yu min hong கூட்டத்தில் தெரிவித்தார்.
மனித நேயக் கல்வியை மையமாக கொண்ட அரசு சாரா உயர் கல்வி நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக புதிய கீழை குழுமம் தொழில் முனைவோர்களிடமிருந்து நன்கொடையை திரட்டி வருகின்றது. இந்த உயர் கல்வி நிலையத்தில் தொழில் கல்வி உள்ளிட்ட பயிற்சித் துறை அடக்கம். மாணவர்களில் 50 விழுக்காட்டினர் கிராமப்புறங்களை சேர்ந்தவர். அவர்கள் பயிலும் போது கல்விக் கட்டணம் நீக்கப்படும் என்று yu min hong விவரித்தார்.
இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியாக பள்ளியில் சேரும் வயதை அடையாத குழந்தைகளுக்கு தாராள வாழ்வுச் சூழ்நிலை உருவாக்குவது பற்றி கூறுகின்றோம்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் செங்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான su rong பெய்ஜிங்கில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது 8ம் நாள் நடைபெற்ற அமர்வில் கருத்துரு ஒன்றை முன்வைத்தார்.
கல்வித் துறையில் பள்ளிக்கு முந்திய கல்வி வரையறைக்கப்பட வேண்டும். பள்ளிக்குச் செல்லும் வயதை அடையாத குழந்தைகளுக்கு குழந்தைகாலத் தளர்ச்சி வழங்கப்பட வேண்டும் என்று அவர் முன்வைத்த கருத்துரு கோருகின்றது.
இத்தகைய குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை திறமைசாலியாக வளர்க்கும் எண்ணத்தை பயன்படுத்தி பல கல்வி நிறுவனங்கள் கட்டாயக் கல்வியில் கற்றுக் கொள்ளப்படும் கணிதம், உச்சரிப்பு, ஆங்கிலம் போன்ற பாடங்களை பள்ளிக்கு செல்லும் வயதை அடையாத இந்த மழலையருக்கான கல்வியில் சேர்த்துள்ளன. இவை சிறுவர் சிறுமியரின் இயல்பு தன்மையையும் புத்தாக்கத் தன்மையையும் பாதிக்கும் என்று su rong கூறினார்.
பள்ளிக்குச் செல்லும் வயதை அடையாத குழந்தைகளுக்கான கல்விச் சட்டத்தை அரசு கூடியவிரைவில் வெளியிட வேண்டும். இக்கல்வியை கல்வி விவகாரங்களுக்குப் பொறுப்பான வாரியங்களின் கண்காணிப்பில் வைக்க வேண்டும். மழலையருக்கான கல்வி வழிமுறை வரையறைப்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளின் தனிச்சிறப்பியல்புக்கு ஏற்ற கல்வி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தவிரவும், குழந்தை காப்பகத்தின் நிலை பற்றிய மதிப்பீட்டு அமைப்பு முறையும் பெற்றோர்கள் பங்கு கொள்ளும் பொது மதிப்பீட்டு அமைப்பு முறையும் உட்புகுத்தப்பட வேண்டும். பள்ளிக்குச் செல்லும் வயதை அடையாதோரின் கல்வியை சமூகத்தின் கண்காணிப்பில் வைக்கச் செய்ய வேண்டும். மழலையர் நலமுடன் சீராக வளரும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் செங்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான su Rong ஆலோசனை முன்வைத்தார்.
சரி நேயர்களே ஆண்டு கூட்டத் தொடர்களில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் பள்ளி மற்றும் கல்வி பற்றி விவாதித்து தெவித்த கருத்துக்களைக் கேட்டீர்கள். இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர் நண்பர்களே.