• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர்களின் கடிதங்கள்
  2010-03-25 14:47:54  cri எழுத்தின் அளவு:  A A A   








இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியில் உள்ள கடித கருத்துப் பகுதியில் மொத்தம் 10 நண்பர்கள் நிகழ்ச்சியை கேட்டு கருத்து தெரிவித்துள்ளனர். கேட்டு ரசியுங்கள்.

கலை: நிகழ்ச்சியில் முதல் கடிதம், அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து ஆரணி டி. இளங்கோ எழுதியது. வாணி அவர்கள் வழங்கிய பல்கலைக்கழகங்கள் பற்றிய கட்டுரையின் மூலம் காலநிலை மாற்றச் சமாளிப்பில் மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து முயற்சி மேற்கொண்டதை அறிய முடிந்தது. இப் பல்கலைக்கழக ஒன்றியம் எரியாற்றல் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலியவற்றில் மேற்கொள்ளும் ஆய்வு வரவேற்கத்தக்கது.

க்ளீட்டஸ்: அடுத்து வேலூர் குமார. ராமமூர்த்தி எழுதிய கடிதம். திபெத்திற்கான நடுவனரசின் உதவி பற்றிய செய்தி கேட்டேன். சீன நடுவனரசு திபெத்தின் வளர்ச்சிக்கென செம்மையாக திட்டமிட்டுச் செயல்படுவதால் திபெத் தன்னிறைவான வளர்ச்சி அடைந்து வருவதில் வியப்பில்லை. ந்லிவுற்றிருந்த திபெத் இன்று வளமாகி வருகிறது.

கலை: தொடர்ந்து சித்தூர் ம. நந்தினி எழுதிய கடிதம். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நேயர் ஜி. வரதராஜனின் நேர்காணல் இடம்பெற்றது. சீன வானொலி பற்றிய அவரது எதிர்பார்ப்பு, சீன வானொலியுடன் அவரது தொடர்பு, அவரது செயல்பாடு என பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

க்ளீட்டஸ்: அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி ஆந்திர மாநிலம் மும்பை. சுகுமார் எழுதிய கடிதம். இணையதள அடிமைத்தனம் மற்றும் போதைத்தனம் பற்றி தமிழன்பன் வழங்கிய விரிவான தகவல்களை கேட்டேன். இந்தியாவிலும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல போதைகளுக்கு அடிமையானதால் மக்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை ஆய்வு செய்தால் தெரியும். முதலில் தொலைக்காட்சி புறக்கணிப்பு இயக்கம் வரவேண்டும்.

கலை: மக்கள் சீனம் நிகழ்ச்சி குறித்து ஈரோடு. சி. சுந்தர் ராஜா எழுதிய கடிதம். காலநிலை மாற்றம் தொடர்பான சீனாவின் பணி பற்றி ஈஸ்வரி அவர்கள் வழங்கிய நிகழ்ச்சி அறியத் தந்தது. 2020ம் ஆண்டுக்குள் கரியமில வாயுவெளியேற்ற அளவை தற்போதுள்ளதை விட 40 முதல் 45 விழுக்காடு வரை குறைக்கும் சீன அரசின் திட்டம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

க்ளீட்டஸ்: இலங்கை உக்குவளை ஏ. எம். அகீலா எழுதிய கடிதம். இலங்கையில் அரசுத்தலைவர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்ற நிலையில் எமது பள்ளிகள் மூடப்பட்டன. அதேவேளை நாங்கள் விரும்பிக் கேட்கும் சீன வானொலி தமிழ்ப்பிரிவின் ஒலிபரப்பு தெளிவாகக் கேட்கமுடியாமல் போனது. இயன்றவரை கேட்கும் நிகழ்ச்சிகள் எப்போதும் போல் சிறப்பாகவுள்ளன. சீனாவை பற்றி மேலும் அறிய உதவும் இதழ்களை தொடர்ந்து எமக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

கலை: விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி தொடர்பாக திருச்சி எம். தேவராஜா எழுதிய கடிதம். 2009ம் ஆண்டு சீன விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதல்தர போட்டிகள் பற்றியும், நீச்சல், பூப்பந்து, மேசைப்பந்து, தடகள விளையாட்டு உள்ளிட்டவற்றில் பெற்ற சாதனைகள் பற்றியும் விளையாட்டுச் செய்திகளில் கேட்டேன். 2009ல் ஈட்டிய சாதனைகள் எதிர்கால சாதனைகளூக்கு கட்டியம் கூறுபவையாக உள்ளன. சீன விளையாட்டுத்துறை மேலோங்க வாழ்த்துகிறேன்.

க்ளீட்டஸ்: நாமக்கல், மெட்டாலா, எஸ். பாஸ்கர் எழுதிய கடிதம். உலகப் பொருளாதார மாநாட்டில் சீனாவும் இந்தியாவும், பகையாளி நாடுகள் அல்ல, கூட்டாளி நாடுகளாகும். இரு நாடுகளும் மாபெரும் வளர்ச்சிக் கருத்துக்களைக் கொண்டுள்ளன. உலகப் பொருளாதார வளர்ச்சிக்காக சீனாவும் இந்தியாவும் கூட்டாக பாடுபடும் என்று இந்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆனந்த சர்மா கூறுயதை வாணி அவர்கள் செய்தியில் வாசிக்கக் கேட்டு பெருமிதம் அடைந்தேன்.

கலை: அடுத்து சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி குறித்து இலங்கை கல்முனைக்குடி நேயர் ஏ. ஆர். எம். சுல்பாத் எழுதிய கடிதம். எள்ளில் தயாரிக்கப்படும் சூப் பற்றிய நிகழ்ச்சி கேட்டேன். நிகழ்ச்சியில் எள்ளு சூப் தயாரிப்பு மட்டுமின்றி, கறுப்பு எள்ளின் பயன்களையும் தெளிவாக அறியச்செய்தமைக்கு நன்றி. சுவையான நிகழ்ச்சி.

க்ளீட்டஸ்: அதே நிகழ்ச்சி குறித்து எஸ். கே. பாப்பம்பாளையம் பி.டி.சுரேஷ்குமார் எழுதிய கடிதம். கறுப்பு எள்ளைக் கொண்டு தயார் செய்யும் சூப் பற்றிய தகவலை வாணி அவர்கள் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் அழகாக வழங்கினார். அருமையான தகவல் துணுக்கும் இணைத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040