• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர்களின் மின்னஞ்சல்கள்
  2010-03-25 14:49:19  cri எழுத்தின் அளவு:  A A A   








மின்னஞ்சல் பகுதியில் 11 நண்பர்கள் நிகழ்ச்சிகளை கேட்ட பின் தெரிவித்த கருத்துக்களை படித்து மகிழுங்கள்.

வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்

மார்ச் திங்கள் 19 ஆம் நாள் இடம்பெற்ற இரண்டாவது •செய்தி விளக்கம்• நிகழ்ச்சியில் •ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சுற்றுலா பரப்புரை• என்ற கட்டுரையைக் கேட்டேன். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, சீனாவின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, சுற்றுலா வளர்த்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வாய்ப்பாகும். உலகப் பொருட்காட்சி நடைபெறும் காலம் நெருங்க நெருங்க அனைவர் மனதிலும் ஓர் ஆனந்த பரபரப்பு எழுந்துள்ளது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கும் நாள், என் வாழ்க்கையில் ஒரு திருவிழா நன்னாளாகும். நாள்தாறும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியுடன் தொடர்புடைய தகவல்கள் அதிக அளவில் இடம்பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

பெருந்துறை பல்லவிபரமசிவன்

சாங்காய் உலகப் பொருட்காட்சி நெருங்கிவரும் வேளையில் அதன் ஏற்பாடுகள் நிறைவடந்து வருவதை அறிந்தேன். உலகமே எதிர்பார்க்கும் இந்த பொருட்காட்சி சீனாவுக்கு நல்ல புகழை பெற்றுத்தரும் என்பது நிச்சயம். உலகப்பொருட்காட்சி ஏற்பாட்டினால் சீனா உலகின் பல்வேறு நாடுகளுடன் நல்ல நட்புறவை வலுப்படுத்த உதவியாய் அமைகிறது. என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.‌

விழுப்புரம், எஸ். பாண்டியராஜன்

மார்ச் திங்கள் 19 ஆம் நாளுடன் செல்வம், பாலக்குமார், ராஜகோபால் ஆகியோர் இணைந்து நேயர்களுக்கு வழங்கும் குறுந்தகவல் அளிக்கும் செல்லிடைப்பேசி வலைப்பின்னல் சேவை துவங்கி 5 ஆண்டு நிறைவு பெறுகிறது. அவர்கள் தேடலின் வெளிப்பாடு எங்களுக்கு, திருக்குறள் போன்ற சிறு தொடர் தகவல் களஞ்சியமாகும். அவர்களுக்கு என் சார்பிலும் தமிழ்ப்பிரிவின் நேயர்கள் சார்பிலும் வாழ்த்தினையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது தமிழிலும் தகவல் தரத்துவங்கியுள்ளனர். நல்ல முயற்சி. அவர்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாங்கள் செல்வம், பால குமார், ராஜ கோபால் ஆகியோரின் முயற்சியைப் பாராட்டுகின்றோம். இம்முயற்சி தொடரட்டும். நேயர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு ஊக்கமனிக்கும்.

பழனி பகத்சிங்

நமது நிகழ்ச்சிகளின் மூலம் சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டம் பற்றிய நிகழ்வுகள் முழுவதையும் தெரிந்துகொண்டதோடு உலக நடப்புகளையும் தெரிந்துகொண்டேன். குறிப்பாக சீன தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடரில் நீதித்துறையிலான மாற்றங்கள் குறித்த விவாதித்தது என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் நீதித் துறையிலும் காலத்திற்க்கேற்ப மாற்றங்களை செய்யவேண்டியது அவசியமாகிறது. சீன மக்கள் குடியரசின் வெற்றிக்கு இதுவே காரணம் எனலாம். பயனுள்ள செய்திகளை வழங்கிய சீன வானொலிக்கு நன்றிகள் பல.

ஆர்.அமுதாராணி, மதுரை-20.

மனித உரிமை பிரச்சினையைப் பயன்படுத்தி இதர நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ரஷியா, எகிப்து, வட கொரியா, கொலம்பியா ஆகிய நாடுகள் கண்டித்துள்ளமை சரியானதுதான். மனித உரிமை பிரச்சனையை சாக்காக கொண்டு பிறநாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்க தலையீடு செய்வதை அனைத்து நாடுகளும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மனித உரிமை மற்றும் ஜனநாயகப் பிரச்சினையை வசதியாகக் கொண்டு பிற நாடுகளின் மனித உரிமையை காலால் மிதிக்கின்றது என்றும், அமெரிக்கா தனது மனித உரிமை பிரச்சினையை முதலில் சமாளிக்க வேண்டும் என்றும்வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது சரியான கருத்தாகும்.

ஆர‌ணி‍-அபி.அமிர்த‌வ‌தி

சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர் ஒன்பதரை நாட்கள் நடைபெற்று 14ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. மாநாட்டின் சுமார் மூவாயிரம் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் கருத்துருக்களை முன்வைத்தனர். மக்களுக்கு இன்பத்தையும் மதிப்பையும் வழங்க சீன அரசு சளையாத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த‌ கூட்ட‌த்தொட‌ரில் ப‌ல்வேறுநிலை முக்கிய‌த் த‌லைவ‌ர்க‌ளும் கூறிய‌ க‌ருத்துக்க‌ள் முன்னேறிய‌ சீனாவை மேலும் முன்னேற்றும்.

செயங்கொண்டம் கு.மாரிமுத்து

மார்ச் 5ஆம் நாள் துவங்கிய சீன மக்கள் பேரவை கூட்டத்தொடர் பற்றியும் சீன அரசுத்தலைவர் பணியறிக்கை பற்றியும், நமது நேயர்கள் வழங்கிய கருத்துக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை, பயன் உள்ளவை. தலைமை அமைச்சரின் பணியறிக்கையை கேட்டு மனம் மகிழ்ந்தேன். நடப்பு ஆண்டில், சீனப்பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை. மக்களின் கருத்துக்களை கேட்டு மக்களுக்காகவே நலத்திட்டங்களை உருவாக்குவதில் சீன அரசுக்கு நிகர், சீன அரசு தான்.

உத்திரக்குடி, சு. கலைவாணன் ராதிகா

மார்ச் 17ம் நாள் ஒலிபரப்பான சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சியில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் வெளிநாட்டுத் தொண்டர் அணியின் தலைவர் துருக்கி நாட்டைச் சார்ந்த லோயலோனா பற்றி கேட்டேன். ஒரு மனிதனின் உழைப்பு அவனது முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் அமைகிறது. அந்த வகையில் சேவை மனப்பான்மையும், மனித நேயமுள்ள இளைஞராக துருக்கி நாட்டு லோயலோனா திறம்பட செயல்பட்டுள்ளார். இனியும் செயல்படுவார் என்பதை நிகழ்ச்சியின் ஊடாய் கேட்டு மகிழ்ச்சி பெற்றோம். வரலாற்றில் மிக தலைசிறந்த ஷாங்காய் உலகப் பொருட்காட்சியாக அமையும் என்பது அவரது எண்ணம் மட்டும் அல்ல எங்களுடையதும்தான்.

முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர்

சீன சந்தையிலிருந்து விலகுவதாக கூகுள் நிறுவனம் சில முறைகள் தெரிவித்திருப்பது நல்ல வணிகத்திற்கு அழகல்ல!. சீன அரசு இணையக் கண்காணிப்பு செய்வதை காரணமாகக் கூறுவது சரியல்ல! தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சூழலை கூகுள் நிறுவனம் பயன்படுத்த முயல்வதை அனைவருமே அறிவார்கள். ஒருநாட்டின் சூழலுக்கு தகுந்தார் போல் வணிகம் செய்வததுதான் நல்ல நிறுவனத்துக்கு அழகு. சீன தயாரிப்பு பொம்மைகளை சரியல்ல என் தடை செய்ய அமெரிக்காவுக்கு உரிமை இருப்பது போல், அமெரிக்க‌ கூகுள் நிறுவனத்தின் வணிகத்தை சீனாவுக்குள் முறைப்படுத்த சீனாவுக்கு உரிமை இருக்கிறது.

திமிரி‍ புலவர் வீர.இராமதாஸ்

உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் கட்டுமானப்பணிகள், திட்டப்படி நிறைவேற்றப்பட்டுள்ளன. பாதை மற்றும் பொது வசதிகள் முதலியவை ஏப்ரலில் முழுமையாக கட்டியமைக்கப்படும் என்ப‌து சிறப்பு. ஷாங்காய் உல‌க‌ப்பொருட்காட்சி உல‌க‌ள‌வில் பெரும் சாத‌னை ப‌டைக்கும் என்பது உறுதி. இந்த‌ பொருட்காட்சி சிறப்படைய என் வாழ்த்துக்கள்.

நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங்

திபெத்தில் சூரிய ஆற்றல் மின் நிலையத்தின் கட்டுமானம் பற்றிய நிகழ்ச்சி மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

சீனா மார்ச் 19-ம் நாள் 10000-கிலோவாட் சூரிய ஆற்றல் மற்றும் அனல் மின்னாற்றல் திட்டப்பணிக்கு 22-கோடி யுவான் ஒதுக்கீடுசெய்து இந்த மாபெரும் திட்டத்தை திபெத்தின் யாங்பாஜாய்னில் துவங்கியதை கேட்டேன். ஒரு நாடு சிறுபான்மை மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் எப்படி தொழில் துறையையும், சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பது என்பதை உலகுக்கு உணர்த்துவதாக இது அமைகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040