• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் பகுதி
  2010-04-01 09:54:22  cri எழுத்தின் அளவு:  A A A   








திருச்சிஅண்ணாநகர்வீ. டி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவி்ன் தென் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வறட்சி நிலை 5 திங்களுக்கு மேலாக தொடர்வது வருத்தமளிக்கின்றது. 6 கோடிக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டோருக்கு உதவ, பல்வேறு சமூகத் துறைகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளமை நல்லதொரு மனிதநேய நடவடிக்கை. சீனாவின் வறுமை துடைப்பு நிதியம் சீனாவின் பல செய்தி ஊடகங்களுடன் இணைந்து நடத்திய நடவடிக்கையின் மூலம் மார்ச் 26ஆம் நாள் வரை, 92 லட்சத்து 10 ஆயிரம் யுவான் மதிப்புள்ள நன்கொடை மற்றும் பொருட்கள் கிடைத்திருப்பது, சீன மக்களின் சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்துகிறது. குழந்தைகள், முதியோர், மாற்று திறனாளிகள், நோயாளிகள் ஆகியோர் உள்ள குடும்பங்களுக்கு உதவியில் முன்னுரிமை அளித்திருப்பதும் சிறப்பானது.

வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் ஹமித் கர்சாயுடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய விவரங்களை செய்திகளில் முழுமையாக அறிந்து கொண்டேன். உள்நாட்டுப் பிரச்னைகளினால், ஆப்கானிஸ்தான் மாபெரும் இழப்புக்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், கர்சாய் அவர்களின் இப்பயணம், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றும் என நம்புகின்றேன். சீனாவின் வெளிநாட்டு முதலீட்டுச் சூழல் மோசமாகியுள்ளது என சில மேலை நாடுகள், தவறான பரப்புரை மேற்கொண்டுள்ளதை பிறிதொரு செய்தியில் கேட்டு, மனச் சோர்வுற்றேன். போற்றுவார் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் என்பதாய் தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடைபோடுங்கள்.

முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
இந்தியாவில் பயணம் மேற்கொண்ட‌ சீனத் துணைத் தலைமையமைச்சர் ஹுய் லியாங்யூ புதுதில்லியில் சீன-இந்திய தொழில் மற்றும் வணிகத் துறை ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார். இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவை அவர் உயர்வாக மதிப்பிட்டு பேசியது இருநாடுகளின் உறவு சிறப்பாகவே தொடர்கிறது என்பதை உலகிற்கு புரிய வைக்கும். சீன-இந்திய நட்புறவை முன்னேற்றுவதற்கு அவர் முன்வைத்த 4 முன்மொழிவுகள் மேலும் ஆழமான நட்புறவை வளர்க்க உதவும்.
பரசலூர்-பி.ஸ்.சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
சீனத் தலமையமைச்சர் வென்சியாபாவை பெய்ஜிங்கில் சந்தித்த வங்காளதேச தலைமையமைச்சர் சேக்ஹசீனா அம்மையார் இருதரப்பு நல்லுறவு, கல்வி, சுகாதாரம், மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு சீன உதவி ஆகியவை பற்றி விவாதித்ததை சீன வானொலி நிகழ்ச்சிகளில் அறிந்து கொண்டேன். அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சீனா காட்டும் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் சீனா எடுத்து வைத்த சாமர்த்தியமான நடவடிக்கைத் தான் ரென் மின் பியின் மாற்று விகிதம் என்பதை விளக்கி, அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் நிதித் திரட்டல் கமிட்டிக்கு சீனா அளித்துள்ள கருத்துக்கள், ஆலோசனைகள் மதிப்பிற்குரியவை. பொருளாதாரம் உலகமயமாகி வரும் இவ்வேளையில் சீனாவும், அமெரிக்காவும் பல்வேறு பிரச்னைகளை கூடி விவாதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய விவாதங்களை தவிர்த்தால் இருதரப்புக்கும் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் சீனா தெளிவுபடுத்தியுள்ளது சிறந்தது.

நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
திபெத்தில் பண்ணை அடிமை முறை அழிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் மார்ச் 28 ஆம் நாளை பண்ணை அடிமைகளின் விடுதலை நாளாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இவ்வாண்டு பண்ணை அடிமைகளின் விடுதலை நாள் அறிவிக்கப்பட்ட ஓராண்டு நிறைவை சீன அரசு வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கு பாராட்டுகள். இச்செய்தி, உலகின் பல நாடுகளில் மதத்தை பயன்படுத்தி பண்ணை அடிமைகளை நியாயப்படுத்தி கொண்டிருக்கும் மக்களுக்கு விடுதலை வேட்கையை தூண்டுவதாக அமைகிறது.
உத்திரக்குடி.சு.கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
மக்கள் சீனம் பகுதியில் சீனாவில் புதியதாக வளரும் தொழில்கள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை கேட்டேன். சீனா, வேளாண் துறையிலிருந்து சேவைத்துறை வரை அனைத்து நிலைகளிலும் முன்னேறி வருவது மகிழ்ச்சிளித்தது.வேலையில்லா பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர தொழில் நிறுவனங்களில் புதிய புதிய உத்திகளை கையாள்வதிலும், பசுமை பொருளாதாரத்தை வளர்க்க ஊக்குவிக்கும் சீன அரசு தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் முதன்மை நாடாக திகழ்ந்து மூக்கில் மேல் விரல் வைத்து வியக்குமாறு உள்ளது.

விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
ஜப்பான் ஆக்கிரமிப்பின்போது மும்பை மருத்துவரின் சேவை சீனாவை நெகிழச் செய்ததை மலர்ச்சோலை நிகழ்ச்சியில் கேட்டேன். இதனால் ஏற்பட்ட உறவு பிணைப்போ என்னவோ சீனாவின் முதலாம் இந்திய துணைத்தூதரகம் மும்பையில் திறக்கப்பட்டது. சீனாவில் தயாரான சுரங்க தொடர்வண்டி மும்பையில் பயன்படுத்தப்படயிருக்கிறது. மருத்துவர் ஒருவரின் தன்னமற்ற சேவை தொடர் நன்மைகளைத் தந்து கொண்டிருப்பதை இது காட்டுகிறது. இது மனித நேயத்திற்கு கிடைத்த ஒப்புதலாகும். உலகில் உயர்ந்தது மனித நேயமே.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040