• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர்களின் கருத்துக் கடிதங்கள்
  2010-04-08 15:15:24  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை      அன்பான நேயர்களே! இப்போது நேயர் நேரம் நிகழ்ச்சி. நான் கலையரசி.

 

தமிழன்பன்  நான் தமிழன்பன். நேயர்களின் கருத்துக் கடிதங்களை தொகுத்து வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

 

கலை       சிச்சுவான் எதிர்பார்ப்புக்குரிய இடம் என்ற பொது அறிவுப்போட்டி ஜீலை திங்கள் முதல் நாள் வரை தொடரும் என்பதை நினைவூட்டிக் கொள்கின்றோம். உங்களது படைப்பாற்றலை கூர்மையாக்கி, கட்டுரை, நிழற்படம், ஓவியம், கைவினைப் பொருட்கள் என பல்வேறு வடிவங்களில் இந்த போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கின்றோம். இன்னும் பங்குபெறாதவர்கள் தங்களின் அதிகளவிலான பங்கேற்பை காட்ட நாட்கள் உள்ளன என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.

 

தமிழன்பன்  ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற முழக்கம் தற்போது உலகெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதே தலைப்பில் சீன வானொலி நிலையம் பொது அறிவுப் போட்டி நடத்துகிறது. அதற்கான நான்கு கட்டுரைகள் இத்திங்கள் 5 முதல் 8 ஆம் நாள் வரை ஒலிபரப்பாகி வருகின்றன. நான்கு நாட்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகும் நான்கு கட்டுரைகளில் கேட்கப்படும் எட்டு கேள்விகளுக்கு சரியான விடையளித்து, விலைமதிப்பில்லா பரிசுகளையும், சிறப்பு நேயராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பையும் தட்டிச்செல்லுங்கள். ஜுலை 31 ஆம் நாளுக்குள் அதிகபட்ச விடைதாள்களை அனுப்பி உங்கள் ஆழமான பங்கேற்பையும், விடைத்தாள் எண்ணிக்கையில் தமிழ்ப்பிரிவு முதலிடம் பெறுவதையும் உத்தரவாதம் செய்ய கேட்டுக் கொள்கின்றோம்.

 

கலை       நேயர்கள் அனைவரும் முழுமையாக செயல்பட்டு அதிக பங்கேற்பை உறுதி செய்வீர்கள் என்றும், இன்னும் புதியவர்கள் பலரையும் இந்த போட்டிகளில் பங்கேற்க செய்வீர்கள் என்றும் நம்புகின்றோம்.

 

தமிழன்பன்  இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நேயர்களின் கடிதங்களில் இடம்பெற்ற கருத்துக்களை கேட்போம்.

 

கடிதப்பகுதி

 

கலை       கடிதப்பகுதியில் முதலாவதாக, இலங்கை கெம்மதங்கம என்ற இடத்திலிருந்து எம்.யு.இ. ரிஸ்வானா அனுப்பிய கடிதம். சீன தமிழொலி இதழ் "அழகான சிச்சுவான்" பொது அறிவுப் போட்டியில் சிறப்பு நேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு சீனாவில் பயணம் மேற்கொண்ட முனுகப்பட்டு பி. கண்ணன்சேகர் அவர்களின் பயண நூலாக அமைந்தது. சீன பெருஞ்சுவர், தியென்ஆன்மென் சதுக்கம், சிச்சுவான் மாநில அருங்காட்சியகம், லொசான் நகர், அங்குள்ள புத்தர் சிலை, மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம், சாங்லி நகர், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி பறை கூடை போன்றவற்றை பற்றி இதன் மூலம் விரிவாக அறிய முடிந்தது.

 

தமிழன்பன் அடுத்தாக, செந்தலை மீ.செல்வகுமரன் எழுதிய கடிதம். சீன-ரஷிய நெடுநோக்கு ஒருங்கிணைப்பு கூட்டாளியுறவு பற்றி சீன வானொலி நிகழ்ச்சிகளில் கேட்டேன். சர்வதேச அளவில் நிதி நெருக்கடி சீனாவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சீன ரஷிய பொருளாதார வர்த்தக உறவு சீராக இருந்து வருவதை அறிந்தேன். ரஷியாவில் சீன மொழியாண்டு வெற்றிபெறும் என்று ரஷியா உத்தரவாதம் கொடுத்துள்ளது. ஒரே மொழியுள்ள மாநிலங்களில் சண்டைச் சச்சரவுகள் நிகழ்ந்து வரும்போது அயல்நாட்டு மொழியை, பண்பாட்டை உணர்ந்து கொள்ள முயல்வதை சிறப்பாக கருதுகிறேன்.

 

கலை       தொடர்வது, செய்திகள் பற்றி ஆரணி டி.சரவணன் அனுப்பிய கடிதம். மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக தொடர்வண்டி குறித்து செய்திகளில் வாசிக்க கேட்டேன். வூகான், குவாங்சோ இடையிலுள்ள 1600 கிலோமீட்டர் தூரத்தை விமானத்திற்கு சமமான வேகத்தில் சென்றடையும் அதிவேக தொடர்வண்டி விரைவாக வளர்ந்துவரும் சீனாவின் அடையாளம். இந்த தொடர்வண்டியை பற்றி எங்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள். கண்டு களிப்படைந்தோம். சீனாவை எண்ணி பெருமையுற்றோம்.

 

தமிழன்பன்  இனி, நாமகிரிபேட்டை கவித்துளி சக்தீஸ்வரன் சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். அழகான கடலோர நகரம், சைய்யா பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. கோடையில் அதிக வெப்பமில்லை. மணல் வெள்ளையாகவும், பொடியாகவும் உள்ளது. கடலும் வானும் ஒரே வண்ணத்தில் காட்சியளிக்கிறன. சைய்யா நகரில் பயணித்தால் மனம் இதம் அடையும் என்று இந்நிகழ்ச்சி விளக்கியபோது அங்கு சுற்றுலா செல்லும் ஆவலை  மேலோங்க செய்தது.

 

கலை       சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். கணினியின் சிறப்பை தெரிவித்த இந்நிகழ்ச்சியின் மூலம் அதன் செயற்கரிய பணிகளையும், செயல்பாட்டையும் அறிந்து வியந்தேன். மேலும், இணையத்தினால் ஏற்படும் தீமைகளும் பட்டியலிட பட்டன, குழந்தைகளையும், பெரியவர்களையும் பாதித்து பல உளவியல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

 

தமிழன்பன்        அடுத்தாக இடம்பெறுவது, நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி குருணிகுளத்துப்பட்டி கே.சி.முருகன் எழுதிய கடிதம். நீலகிரி மாவட்ட நேயர் மன்றம் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சியை கேட்டோம். சீன வானொலி சேவை, அதனை கேட்கும்முறை, சிறந்த நேயராக செய்ய வேண்டியவை அனைத்தையும் ஈரோடு மாவட்ட நேயர் மன்றத் தலைவர் பி.எ.நாச்சிமுத்து தெரிவித்தார். நாங்களும் அவ்வாறு செயல்பட இந்நிகழ்ச்சி தூண்டுதல் தந்தது.

 

கலை      இலங்கை ஓட்டமாவடியிலிருந்து, எம்.பி.றாபியா அனுப்பிய கடிதம். சீன வானொலி வழங்குகின்ற சிறந்த நிகழ்ச்சிகளால் உலக தமிழர்களிடம் நீங்கா இடம்பெற்றுவிட்டது. மேலும்,

 

   உலகில்

ஒரே காலநிலை இருந்ததில்லை

   ஒரே அதிகாரம் நிலைத்ததில்லை ஆனால் நீ

   ஒரே வானொலியாய் நிலைத்துவிட்டாய் - தமிழரின்

   நினைவலைகளில் கலந்துவிட்டாய்

என்று சீன வானொலியை பாராட்டி கவிதையும் எழுதி அனுப்பியுள்ளார்.

 

தமிழன்பன்  தொடர்வது, சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் எழுதிய கடிதம். திபெத் பீடபூமியில் மின் பற்றாகுறை இருந்த நேரத்தில், அங்கு நீர் மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது மிகவும் திறமையான பொறியாளராக விளங்கிய அம்மையாரின் சிறப்பான நிர்வாகம் பற்றி இந்நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. நீர்மின் நிலைய கட்டிடப்பணியின் காலத்தில் நீர் கசிவு அதிகரித்தது உள்பட 200 க்கு மேலான இன்னல்களை சமாளித்து, இந்நிலையத்தை அமைப்பதில் வெற்றிகண்டார். அவரது தொழில் நுட்ப திறமையை இந்நிகழ்ச்சி எங்களுக்கு அறிவித்தது.

 

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040