• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன இந்திய தூதாண்மை உறவின் வைரவிழா பற்றி அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள்
  2010-04-08 15:16:38  cri எழுத்தின் அளவு:  A A A   








சீன இந்திய தூதாண்மை உறவின் வைரவிழா பற்றி அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள்

வளவனூர் புதுபாளையம் எஸ்.செல்வம்

சீன-இந்திய இருதரப்பு உறவு நிறுவப்பட்ட 60 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,  இரு நாடுகளின் அரசுத் தலைவர்களும், தலைமை அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்திகளை தெரிவித்துக் கொண்ட தகவலை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  புதிய சீனா உருவாக்கப்பட்டதும், உடனடியாக சீனாவுடன் நல்லுறவை நிறுவிய நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும்.  கடந்து வந்த உறவுப் பாதையில், ஆங்காங்கே சில தடைகள் ஏற்பட்டபோதிலும், மனந்திறந்த செயல்பாடு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் காரணமாக, இருதரப்பு உறவு, வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.  இரு நாடுகளை எல்லைக் கோடு மட்டுமே பிரிக்கிறது.  ஆனால், இரு நாட்டு மக்களையும் எப்போதும் நல்லெண்ண உணர்வு இணைத்துக் கொண்டேயிருக்கிறது.  இருதரப்பு உறவு மேன்மேலும் வளர்ச்சியடைய என் அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

பகளாயூர் பி.எ.நாச்சிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்

இந்தியா சீனா இருநாடுகளிடை நட்புறவு   சிறப்பாக தொடர்கிறது. உலக நாடுகளில் நட்பு வளர்க்கவும், பண்பாடு பரவலுக்கும்  சீன வானொலி  ஒலிபரப்பு  முக்கிய பங்காற்றுகின்றது. உலக அளவில் மனிதநேயம் வளர்ப்பது, உலக மக்களிடம் நல்லெண்ணங்களை  உருவாக்குவது ஆகியவை மூலம் நட்பு ஒத்துழைப்புக்கு சீன வானொலி அடிப்படையிடுகிறது என்று சொல்லலாம். 

 

திருச்சி திருவானைக்காவல்  சக்கரபாணி

சீன-இந்திய தூதாண்மை உறவின் வைர விழாவை கொண்டாடும் வகையில், இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம் ஏப்ரல் முதல் நாள் விருந்தளித்தமை குறித்த செய்தியினை கேட்டறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மேலும், பல்வகை அறைகூவல்களைத் தாக்குபிடித்து சீராக தொடர்ந்து வளர்ந்திட விரும்புகின்றேன்.

 

நாகர்கோயில் ஸ்டாலின்

.இந்திய -சீன தூதாண்மை உறவின் வைர விழாவில் சீன தூதர் zhang yan- இந்திய-சீன நட்பின் முக்கியத்துவத்தை தெரிவித்தது மனநிறைவை தந்தது. இவ்விரு நாடுகளின் ஒற்றுமை ஆதிக்கவாதிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து ஆசிய கண்ட மக்களை காக்க முடியும் என்பது உறுதி.

 

சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்

ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகையில் "ரஷ்யாவில் சீன மொழியாண்டு " என்ற நடவடிக்கையின் துவக்கவிழாவினை பற்றி சீன வானொலி நிகழ்ச்சிகள் மூலம் தெரிந்துகொண்டேன். பாரம்பரிய மிக்க பண்பாட்டு வளர்ச்சியினை கொண்டுள்ள சீன-ரஷிய பாண்பாட்டு உறவு பரிமாற்றம் உன்னதமான நிலையடைவதோடு. இருநாட்டு மக்களை மிகவும் நெருக்கமாக்கும்.

 

செந்தலை என்.எஸ்.பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல் 

சீன ஜெர்மனி வர்த்தக உறவு பற்றி செய்திகளில் கேட்டேன். இருநாட்டு உறவும் சீராகவும், நன்றாகவும் முன்னேற்றம்  கண்டுவருகிறது. குறிப்பாக தொழிற்துறையில் இரு நாடுகளுக்கிடையே சிறந்த பரிமாற்றம் நிலவிவருவதை அறிந்தேன். சீனப் பணியாளர்களின் ஜெர்மனி வருகை அதன் தொழிற்துறையில் விரைவான  வளர்ச்சியை தூண்டியுள்ளமை இருநாடுகளுக்கிடையில் தொடர் பரிமாற்றங்களை வளர்க்கும்.

 

மதுரைஅண்ணாநகர் ஆர். அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவில் வாழ்கின்ற மொத்தம் 56 தேசிய இனக்களில் சிறுபான்மை தேசிய இனமக்கள் நாட்டின் பல பகுதிகளில் வாழ்த்து வருவதை அறிந்து கொண்டேன். சிறுபான்மை தேசிய இனங்களின் மொழிகளையும் வடடார மொழிவழக்குகளையும் ஒலி மற்றும் ஒளிப் பதிவுகளாக ஆவணப்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது வரலாற்று சாதனையாகவே பதிவாகும்.

 

திருச்சி அண்ணாநகர் வீ.டி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்.

வீடு மற்றும் நில உடைமைத்துறையின் சீரான நிதானமான வளர்ச்சியை முன்னேற்றி, நகரங்களில் வீடுகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மக்களின் அடிப்படை உறைவிட தேவையை நிறைவேற்ற வேண்டிய கடமையை சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் இவ்வாண்டு அரசுப்பணி அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதை செய்திவிளக்கத்தில் செவிமடுத்தேன். சீன அரசின் பல்வேறு வாரியங்கள் ஒரு தொகுதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இதற்காக வெளியிட்டிருப்பது உடனடி செயல்பாட்டை காட்டுகிறது.

 

புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்.

கரி வெளியேற்ற அளவை குறைத்திடும் வகையில் சீனா ஆக்கபூர்வமாக சிந்தித்து பொருளாதாரம் மாசுப்படாமல் வளர பல வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தும் முன்மாதிரி நாடாக சீனா விளங்குகிறது. நெகிழிப் பை பயன்பட்டை தவிர்த்தல், கழிவுப் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது, கரி குறைந்த வாழ்க்கை வாழ மக்களுக்கு பரப்புரை, நிலக்கரி வளத்தின் தரத்தை உயர்த்தி கழிவு வாயுவைக்கொண்டு மின் உற்பத்தி, கழிவு நீரினை மீண்டும் பயன்படுத்துவது என்ற சீனாவின் அனைத்து செயல்பாடுகளும், பசுமை பொருளாதாரத்தில் அதனை உலகில் முன்னிலைப்படுத்தும்.

 

சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன்

வண்ணங்களுக்கும் மனித எண்ணங்களுக்கும் தொடர்பு இருப்பதை க்ளீட்டஸ் விளக்கியது அருமை. இந்த கருத்து தமிழ் மருத்துவம் முன்பே கூறியுள்ளது தான். வீட்டுக்கு வெள்ளை சுண்ணாம்பு அடிப்பது வெப்பத்தை குறைக்க உதவுகிறது. இது போன்ற ஆய்வுகளை தமிழர்கள் அக்காலத்திலே குறிப்பிட்டுள்ளனர்.

 

நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங்

சீனாவில் மரம் நாடும் நடவடிக்கை காடு வளர்ப்பு திட்டத்தை சிறுவர்களின் பங்கை ஊக்குவிப்பதாக இருந்தது. மரம் நடும் நிகழ்ச்சியில்  குழந்தைகளுடன் சேர்ந்து சீனத் தலைவர்கள் கலந்துகொண்டது நல்ல முன்னுதாரணம்.

 

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040