என் பெயர் ஹைபௌ. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மங்களச் சின்னமாக நான் அழைக்கப்படுகின்றேன். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மே நாளில் துவங்கும். சீன வானொலி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இந்த பொது அறிவுப் போட்டி மூலம் உங்களுக்கு அருமையான ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவரிக்கப்படும். அதேவேளையில் பொருட்காட்சி பற்றிய கேள்விகளுக்கு கவனமாக சரியான விடையளிக்கும் உங்களுக்கு அதிர்ஷிட நேயர் என்ற பெருமை கிடைக்கும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவைப் பார்வையிடும் வாய்ப்பையும் ஹைபௌவுடன் நெருங்கி தொடர்பு கொள்ளும் வாய்ப்பையும் பெறும் பெருமை உங்களைச் சாரும்.
முதலில் நான் என்னை பற்றி கூறுகின்றேன்.
எழுந்து நிற்கின்ற தலைமுடியை கொண்ட எனக்கு வட்டமான விழிகள் உண்டு. பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்கள் ஒப்படைத்த 20 ஆயிரம் வடிவமைப்புப் படைப்புகளிலிருந்து தேர்நெடுக்கப்பட்டது என் உருவன். ஹைபௌ எனும் பெயர் இரண்டு சொற்களால் உருவாக்கப்படுகின்றது. சீன மொழியில் ஹை என்றால் கடல், பௌ என்றால் கருவூலம் அல்லது புதையல் என்று பொருள்படுகின்றது. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது சீனர்கள் பலர் கருவூலம் என்ற சொல்லைப் பயன்படுத்தி மங்களத்தை வெளிப்படுத்த விரும்புகின்றனர். கடலில் பிறந்த நான் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் பங்கெடுத்து ஆதரவளிக்கும் நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிரமுகர்களின் கருவூலமாக விளங்குகின்றேன். ஆகவே ஹைபௌ என்ற பெயரில் என்னைக் கூப்பிடுவது சரியானது. சரி இன்று நான் முன்கூட்டியே ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவைப் பார்வையிட உங்களை அழைக்கின்றேன்.
முதலில் மையக் கோடு, சீன அரங்கு, கலைநிகழ்ச்சி அரங்கேற்ற மையம், உலகப் பொருட்காட்சி மையம், முக்கிய தலைப்பு அரங்கு ஆகியவை இடம் பெறும் உலகப் பொருட்காட்சியின் முக்கிய பகுதியைப் பார்க்கலாம். உலகப் பொருட்காட்சியின் முக்கிய கோடு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் மக்கள் நுழையும் முக்கிய சாலையாக திகழ்கின்றது. சீன அரங்கு, கலைநிகழ்ச்சி அரங்கேற்றம், உலகப் பொருட்காட்சி மையம் மற்றும் தலைப்பு அரங்கை இது இணைக்கும். காற்றில் பறக்கின்ற பாய் வடிவத்தில் அமைந்த இந்தப் பகுதி மக்களின் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. செந்நிறத்திலுள்ள சீன அரங்கு குறுகிய தொலைவில் சீனப் பண்பாட்டை ஆராய்ந்து உணர்த்தும் இடமாக கருதப்படுகின்றது. கலைநிகழ்ச்சி அரங்கேற்ற மையம் கலை அம்சங்கள் கொண்ட கட்டிடமாகும். குவாங்பூ ஆற்றின் கரையில் நிற்கின்ற இம்மையம் இரவில் ஒளிரும் சிப்பி போல காட்சியளிக்கின்றது. உலகப் பொருட்காட்சி நடைபெறும் நாட்களில் பல்வகை பெரிய ரக அரங்கேற்றங்களும் முக்கிய நடவடிக்கைகளும் இங்கேதான் நடைபெறும்.
"மேம்பட்ட நகரம் மேம்பட்ட வாழ்க்கை"என்பது 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் முக்கிய தலைப்பாகும். இந்த தலைப்பை மேலும் ஆழமாக விளக்கிக் கூறும் வகையில் நடப்பு உலகப் பொருட்காட்சியில் தலைப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. நகரம், மனிதர், உயிர் ஆகியவற்றுக்கிடை உறவு, புவி எதிர்காலம் ஆகியவற்றுக்கிடை உறவு முதலியவை இந்த அரங்கில் ஆராயப்படும்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் மிக அழகான வெளிநாட்டு அரங்குகள் இடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக கட்டிட வடிவமைப்பில் பிரிட்டன் அரங்கின் வெளிப்புறத்தில் ஒளிரக் கூடிய கொம்புகள் காற்றுடன் அசைந்து பல்வகை வண்ணப் படங்களை உருவாக்கும். ஸ்பெயின் அரங்கின் வெளிப்புறச் சுவர் பிரம்புகளால் பின்னப்பட்டது. ஜப்பானிய அரங்கு ஊதா நிறமான கூட்டுப்புழு போல வடிவமைக்கப்படுகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரங்கு இயற்கையான வண்ணப் பாலைவனக் குன்றாக காட்சியளிக்கின்றது. சிங்கப்பூர் அரங்கு மின்னுகிற திறந்த இசைப் பெட்டி போல காட்சிக்கு அளிக்கின்றது. உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அமைகின்ற அனைத்து நாடுகளின் அரங்குகளும் தனிச்சிறப்பியல்பு மிக்க பண்பாட்டையும் வட்டார தனிச்சிறப்பியல்ப்பையும் வெளிக்காட்டுகின்றன. காட்சிக்கு வைக்கப்படும் அம்சங்களில் Van gogh, Rodin முதலிய கலை முன்னோடிகள் படைத்த மதிப்புக்குரிய கலைப் பொருட்கள் பிரான்ஸ் அரங்கில் காட்சிக்கு வைக்கப்படும். டென்மார்க் நாட்டின் கருவூலமாக அழைக்கப்படுகின்ற "மனிதர் உடல் கொண்ட அழகான மீன் சிலை"டென்மார்க் அரங்கில் முதல் முறையாக வெளிநாட்டில் பார்வையாளருக்குக் காட்சிக்குவைக்கப்படும். இத்தாலி சுவை கொண்ட உணவுப் பொருட்களின் மூலம் அதன் மக்களின் வாழ்க்கை பழக்கவழக்கங்களை வெளிக்காட்டுவது இத்தாலி அரங்கின் தனிச்சிறப்பியல்பாகும். பிரேசில் அரங்கில் மக்களின் கவனத்தை கவரும் கால் பந்தாட்டத்தின் ஈர்ப்பும் Samba ஆடலின் உற்சாக உணர்வும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். ஆகவே உலகப் பொருட்காட்சி நடைபெறும் நாட்களில் மக்களுக்கு பல்வேறு நாடுகளின் தனிச்சிறப்பியல்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்.
அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க எண்ணங்களை உலகப் பொருட்காட்சியில் வெளிக்காட்டுவது தவிர, பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மக்களுக்கு வழங்கும். 184 நாட்களில் 20 ஆயிரம் அரங்கேற்றங்கள் நடைபெறும். பிரிட்டனின் தேசிய Ballet நடனக் குழு, அமெரிக்காவின் பிஃலாடெல்பிஃயா ஒத்திசை குழு உள்ளிட்ட உலகின் புகழ் பெற்ற கலைக் குழுக்கள் சிறப்பாக நிகழ்ச்சிகளை அரங்கேற்றும். இதற்கிடையில் பிரேசிலின் சாம்பா நடனம், புரூண்டியின் மேளம், Soloman தீவுக் கூட்டத்தின் பல குழல் இசை கருவி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நடையுடைபாவனைகள் மக்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும்.