• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொது அறிவுப் போட்டி: சீன அரங்கு
  2010-04-10 16:50:28  cri எழுத்தின் அளவு:  A A A   

நேயர்களே, வணக்கம். நான், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சின்னம். எனது பெயர் ஹைபெள ஆகும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மே திங்கள் முதல் நாள் துவங்கவுள்ளது. 180 நாட்களுக்கு மேல் நடைபெறவுள்ள உலகப் பொருட்காட்சிக்கு உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த நண்பர்கள் வந்து ரசிப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். இன்றைய நிகழ்ச்சியில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் உபசரிப்பு நாட்டின் அரங்கு, அதாவது சீன அரங்கைப் பார்வையிட உங்களை அழைக்கிறேன்.

சீன அரங்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சீனத் தேசிய காட்சியகம், சீனப் பிரதேச காட்சியகம், ஹாங்காங், மக்கெள மற்றும் தைவான் காட்சியகம் இடம்பெறுகின்றன. சீன அரங்கு, சீன நாட்டின் அடையாள அட்டை என அழைக்கப்படுகிறது. சீனப் பண்பாட்டை நேரடியாக அறிந்து கொண்டு, சீன மக்களின் சிந்தனையையும், தற்கால சீனாவின் மதிப்பு மிக்க கருத்தையும் உணர்ந்து கொள்ளும் சாளரம் இதுவாகும்.

சீனத் தேசிய காட்சியகம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அனைத்து காட்சியகங்களிலும் மிகப் பெரியது. இந்த காட்சியகத்தின் மேல் மாடியின் பரப்பு, இரண்டரை கால் பந்தாட்டத் திடலின் பரப்புக்குச் சமம். சீனத் தேசிய காட்சியகத்தில், கோலாகலமான சீன நடையுடை பாவனைகளை உணர்ந்து கொள்ளலாம். இந்த காட்சியகத்தின் வெளிச்சுவரின் நிறம், சீனப் பாணி சிவப்பு ஆகும். இதன் கட்டிட வேலைப்பாடு, சீனக் கட்டிடப் பண்பாட்டுத் தனிச்சிறப்பு வாய்ந்த "Dou Guan" பாணியாகும். "Dou Guan" என்பதற்கு, "புனல் வடிவ மணி முடி" என்று பொருள். இத்தகைய கட்டிட வேலைப்பாடு, சீனப் பண்பாட்டின் எழுச்சி மற்றும் பண்பை வெளிப்படுத்துகிறது.

சீனப் பிரதேச காட்சியகம், சீனாவின் பல்வேறு மாநிலங்களின் காட்சியகமாகும். இதன் வடிவமைப்பில், சீனப் பாணியில் சீனப் பண்டைக்கால பாரம்பரியத் தனிச்சிறப்பியல்புகள் பயன்படுத்தப்பட்டன. பிரதேச காட்சியகத்தின் வெளிப்புறத்தில், சீன வரலாற்றில் பல்வேறு வம்சங்களின் பெயர்கள், 34 சீன எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன. சீனத் தேசத்தின் வரலாறு மற்றும் பண்பாடு, வாழையடி வாழையாக நிலவி வருவதை இது சின்னப்படுத்துகிறது. சீனாவின் அனைத்து மாநிலங்களும் உலகப் பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. நீங்கள் சீனப் பிரதேச காட்சியகத்தைப் பார்வையிட்டால், சீனாவில் உள்ள பல்வேறு இடங்களின் நடையுடை பாவனைகள் பற்றி அடிப்படையில் அறிந்து கொள்ள முடியும்.

அடுத்து, ஹாங்காங், மக்கெள மற்றும் தைவான் காட்சியகங்களுக்கு வருகின்றோம். "எல்லையற்ற நகரம்-ஹாங்காங்" என்ற தலைப்பில், ஹாங்காங் காட்சியகத்தில், ஹாங்காங் தொடர்பான 6 தனிச்சிறப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அதாவது தனிச்சிறப்பு வாய்ந்த நிலவியல், முழுமையான அடிப்படை வசதிக் கட்டுமானம், உலகம் மற்றும் சீனப் பெருநிலப்பகுதி நகரங்களுடனான நெருங்கிய தொடர்பு, ஹாங்காங்கின் சீரான போக்குவரத்து வலைப்பின்னல், பயன்மிக்க சரக்கு போக்குவரத்து சேவை, முன்னேறிய தகவல் மற்றும் செய்தித்தொடர்பு அறிவியல் தொழில் நுட்ப வசதிகள், நிதி, சரக்கு மற்றும் தகவலின் தாராளப் புழக்கம், ஒன்றிணைக்கப்படும் சீன மேலை பண்பாடுகள், செழிப்பான படைப்பாற்றல், தொடரவல்ல வளர்ச்சியடையும் தரமிக்க நகர வாழ்க்கை ஆகியவை.

மக்கெள காட்சியகத்தின் வடிவம், அன்பான முயல் போல் இருக்கின்றது. இந்த காட்சியகத்தின் வெளிப்புறம், இரட்டை கண்ணாடி அடுக்கால் தயாரிக்கப்பட்டது. இது வெவ்வேறான நிறங்களை இடைவிடாமல் மாற்றி, வெவ்வேறான உருவங்களை வெளிப்படுத்த முடியும். இம்முயலின் தலையும் வாலும் பலூனாகும். இவை காற்றின் போக்கில் எழுந்து விழுந்து அசைந்தாடும். உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது, மக்கெள காட்சியகத்துக்கு வருகை தரும் பயணிகளுக்கு முயல் வடிவ விளக்கு ஒன்று வழங்கப்படும்.

தைவான் காட்சியகத்தில், மலை வடிவ கட்டிடங்கள், மாபெரும் விளக்கு மற்றும் LED திரை காணப்படுகின்றன. இந்த காட்சியகத்தின் கட்டிடப் பாணி, சீனாவின் பழமைவாய்ந்த Kong Ming விளக்கு போல் இருக்கின்றது என்று சிற்பி் விளக்கினார். தைவான் காட்சியகத்தில் விளக்கை ஏற்றி, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, "இயற்கை நகர்", "ஆத்மா நகர்" உள்ளிட்ட அரை வட்ட திரையில் திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம்.

இனி "சீன அரங்கு" பற்றிய இரண்டு வினாக்கள்.

ஒன்று, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி எந்த நாள் துவங்கும்?

இரண்டு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சீன அரங்கின் நிறம் என்ன?

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040