நான் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சின்னம் ஹைபௌ. தற்போது ஷாங்காய் மாநகரம் பற்றிக் குறிப்பிடுகையில், நடையுடைபாவனை மற்றும் தனிச்சிறப்பு மிக்க உலகப் பொருட்காட்சி அரங்குகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் முதல் காட்சியாக இருப்பதில் ஐயமில்லை. ஆனால், உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடும் போது, ஷாங்காயிலுள்ள இதர காட்சித் தலங்களை மறக்காதீர்கள். ஆகவே, இன்றைய நிகழ்ச்சியில், என்னுடன் சேர்ந்து அழகான ஷாங்காய் மாநகரில் அலைந்து திரிந்து பார்வையிடுவோம்.
புகழ்பெற்ற ஹுவாங் பூ ஆற்றின் கரை நாம் முதலில் சென்று பார்க்கும் இடமாகும். ஷாங்காய் மாநகரின் தாய் ஆறு—ஹுவாங் பூ ஆற்றின் மேற்கு கரையில், சுமார் 1.5 சதுர கிலோமீட்டர் பரப்புடைய பகுதி உள்ளது. அங்கே, கோதிக், ரோமன், பாரோக், கீழை மற்றும் மேலை கலப்பு பாணியுடன் 50க்கு அதிகமான கட்டிடங்கள் காணப்படுகின்றன. ஷாங்காய் மாநகரின் கோடு என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, Waitan என்று மக்களால் போற்றப்படுகிறது.
அந்தி வேளையிலான Waitanனின் காட்சியை நான் மிகவும் விரும்புகின்றேன். இருள் வருவதோடு, ஹுவாங் பூ ஆற்று நீர், மறையும் சூரியனின் ஒளியினால் orange நிறமாக அலங்கரிக்கப்படுகிறது. இரவில், ஷாங்காயின் சின்னமாக கருதப்படும் கட்டிடமான கீழை முத்து என்ற தொலைக்காட்சி கோபுரம், மிக உயரமான கட்டிடம்—Jin Mao கட்டிடம் முதலியவை ஒளி வீசுகின்ற போது, Waitan கரை மிகவும் அழகானது.
ஷாங்காய், கொள்வனவு தேவலோகம் என கருதப்படுகிறது. ஷாங்காய்க்கு சென்று, கடை வீதிகளில் உலா செல்லாமல் இருந்தால், நீங்கள் மனவருத்தம் அடைவீர்கள். எனவே, பொருட்களை வாங்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பது நமது பயணத்தில் இரண்டாவது அம்சம். சீனாவின் முதல் வணிக வீதியான Nan Jing வீதியில் நிறைந்து காணப்படும் பேரங்காடிகள், பழமை வாய்ந்த கடைகள், புகழ்பெற்ற பொருட்களின் கடைகள், தனிச்சிறப்புமிக்க கடைகள் ஆகியவை, ஒன்றின் அழகை மற்றது அதிகரிக்கிறது. நவ நாகரீக மணம் மற்றும் பருவ கால வண்ணம் நிறைந்த Huai Hai வீதி மற்றொரு குறிப்பிடத்தக்க நல்ல இடமாகும்.
கடை வீதிகளைப் பார்வையிட்ட பின், நாங்கள் காபி அருந்தி இளைப்பாறலாம். கடந்த சில ஆண்டுகளில் கட்டியமைக்கப்பட்ட Huai Hai வீதியை ஒட்டியமையும் Xin Tian Di சதுக்கம், மிகவும் வரவேற்கப்பட்ட சுற்றுலா மற்றும் பொழுது போக்கு தலமாகும். இங்குள்ள கட்டிடங்களின் வெளித்தோற்றம், பழைய ஷாங்காய் மாநகரின் Shi Ku Men எனும் வீட்டின் பாணியில் காணப்படுகிறது. ஆனால் அவற்றுக்குள் நுழைந்தால், மதுவகம், மேலை பாணி உணவகம், குழிப்பந்தாட்ட மன்றம் உள்ளிட்ட மேலை பாணியுடைய இடங்கள் காணப்படலாம். சீன மற்றும் மேலை நாட்டுப் பண்பாட்டின் கலப்பு இங்கே முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது. இதற்காக தான், இது ஷாங்காய் பாணி பண்பாட்டின் பிரதிநிதியாகவும் சின்னமாகவும் மாறியுள்ளது.
நவீனமயமாக்க மாநகராக ஷாங்காய் இருந்த போதிலும், வரலாற்று மணம் நிறைந்த மனித சமுதாயத்தின் பல்வேறு பண்பாட்டுக் காட்சிகள் பல இங்கே காணப்படலாம். யாங்ச்சி ஆற்றின் தெற்கு பாணியுடைய புகழ்பெற்ற பண்டைய தோட்டமான Yu Yuan பூங்கா, நாங்கள் சென்று பார்க்கும் மூன்றாவது இடமாகும். Yu Yuan பூங்கா முன்பு தனியார் வசிப்பிடமாக இருந்தது. 450 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுடைய இப்பூங்காவில், நேர்த்தியான கை எழுத்துக்கலை மற்றும் ஓவிய படைப்புகள், வீட்டுச் சாமான்கள், மண்பாண்ட மற்றும் பீங்கான் பொருட்கள் உள்ளிட்ட பெருவாரியான அரிய தொல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. Yu Yuan பூங்காவை ஒட்டியமையும் கோயில், தௌ மத கோயில் ஆகும். அதன் பெயர் நகரக் கடவுள் கோயிலாகும். ஷாங்காய்க்குச் சென்று நகரக் கடவுள் கோயிலை பார்வையிடா விட்டால், ஷாங்காய் சென்ற முழுமை இருக்காது என்று யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். ஷாங்காயில் இந்தக் கோயிலின் தகுநிலை மற்றும் செல்வாக்கை இது காட்டுகிறது. மேலும், இக்கோயிலில் இறைச்சி கொழுக்கட்டை, வசந்த உருள், நண்டு கொழுக்கட்டை உள்ளிட்ட எண்ணற்ற ஷாங்காய் பாணி சிற்றுண்டிகளைச் சுவைப் பார்க்கலாம்.
Long Tang எனும் ஷாங்காய் பாணி குறுவீதி, நாங்கள் சென்று பார்க்கும் கடைசி இடமாகும். Hu Tong எனும் பெய்ஜிங் பாணி குறுவீதி, பழைய பெய்ஜிங்கின் சின்னம் என கூறினால், Long Tang எனும் குறுவீதி, பழைய ஷாங்காயின் ஒரு அடையாளம் என கருதப்படலாம்.
Jing An Si குடியிருப்புப் பகுதியிலுள்ள 70க்கு அதிகமான உலகப் பொருட்காட்சிக்கான குடும்பங்களில் தங்கியிருந்தால், ஷாங்காய் நகரவாசிகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதோடு, ஷாங்காயின் தனிச்சிறப்புமிக்க குறுவீதிகளை நீங்கள் பார்வையி்ட்டு, பழமை வாய்ந்த இந்தக் குறுவீதிகளின் மூலம் ஷாங்காயின் நடையுடை பாவனைகளை உணர்ந்து கொள்ளலாம்.
இனி போட்டிக்கான மூன்றாவது கட்டுரை தொடர்பான வினாக்கள்.
1. ஷாங்காய் மாநகரின் கோடு என அழைக்கப்படுவது எது?
2. ஷாங்காயில் எந்த வீதி சீனாவின் முதல் வணிக வீதி என அழைக்கப்படுகிறது?