இந்திய அரங்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மண்டலத்தின் ஏ பகுதியில் அமைந்துள்ளது. நான்காயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய இவ்வரங்கு, தனிச்சிறப்பு மிக்கது. அதன் 37 மீட்டர் அளவுடைய அரைவட்ட பெரிய ரக மத்திய கூரை, சிவப்பு நிறத்தில் உள்ளது. புகழ்பெற்ற தாஜ்மகால் போன்றது, அதன் வடிவமைப்பு. "நகரமும் இணக்கமும்" என்ற தலைப்புடன், இந்தியாவின் எழில்மிக்க பண்பாடு, பல்வகை மதநம்பிக்கைகள், மொழிகள், பாரம்பரியம் மற்றும் நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, நகரம் மற்றும் கிராமப்புற இணைப்பு ஆகியவை, இவ்வரங்கில் எடுத்துக்காட்டப்படும்.
இந்தியாவின் மிகப் பண்டைய மிகப் பிரமண்டமான கட்டடங்களின் பாணிகளிலிருந்து, இந்திய அரங்கின் வடிவமைப்புக்கான அகத்தூண்டல் ஏற்பட்டது. அகமதாபாதிலுள்ள siddisyed கோயிலின் தோற்றத்தின் படி, இவ்வரங்கின் வளைவுக் கதவு, கட்டியமைக்கப்பட்டது. தனிச்சிறப்பான இந்திய அரங்கில், பயணிகள், பண்டைக்காலத்திலிருந்து இன்று வரையான இந்தியாவை கண்டு ரசிக்கலாம். ரசகர்கள் முதலில், கி.மு.3000 முதல் கி.மு 2000ம் ஆண்டு வரையான மொகஞ்சதாரே மற்றும் ஹராப்பா நாகரிகங்களிலிருந்து தொடங்கி, நடு நூற்றாண்டு காலத்தின் இந்தியாவைக் கடந்து, அப்போதைய மொகலாய நகர வாழ்க்கை நிலையை உணர்ந்து கொண்டு, நவீன இந்தியாவுக்கு வருவார்கள்.
பண்டைக்கால பாணியுடைய இந்திய அரங்கில், உயர் அறிவியல் தொழில் நுட்பங்கள் அதிகமாகப் பயன்ப்படுத்தப்படுகின்றன என்று அதன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான Naidu கூறினார். இந்திய அரங்கின் கட்டுமானத்தில் வேதியியல் பொருட்கள் ஏதும் பயன்படுத்தவில்லை. சூரிய ஆற்றல் மின்கலன், காற்றாலை, மூங்கில் உள்ளிட்ட தாவரங்கள் முதலிய கட்டிட மூலப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டியமைக்கப்பட்ட இந்திய அரங்கு, மிகவும் தனிச்சிறப்பானது. குறிப்பாக மூங்கில்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதால், இந்திய அரங்கு, நடப்பு உலகப் பொருட்காட்சி மண்டலத்தில் மூங்கிலை முக்கிய கட்டுமான மூலப் பொருளாகக் கொண்ட ஒரேயொரு அரங்காக மாறியது. இப்பொழுது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சின்னமான ஹெய்பெளவுடன், இந்திய அரங்கைப் பார்த்து ரசியுங்கள்.
இந்திய அரங்கில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கட்டுமான மூலப் பொருட்கள், அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை, உலகப் பொருட்காட்சி முடிவடைந்த பிறகு, மீண்டும் பயன்படுத்தப்படலாம். முன்னேறிய காற்று பதனாக்கி மற்றும் விளக்கு வசதிகளைப் பயன்படுத்துவதால், இவ்வரங்கின் எரியாற்றல் செலவு குறைவாகவும், பயன் உயர்வாகவும் இருக்கும். தொழிற்சாலையில் கையாளப்பட்ட கழிவு நீர் மற்றும் மழை நீர், பசுமைமயமாக்கப் பாசனத்தில் பயன்படுத்தப்படும். இக்கட்டிடத்தின் கூரையில், சூரிய ஆற்றல் மின்கலன் மற்றும் காற்றாலை பொருத்தப்பட்டிருப்பதால், மாசுபாட்டற்ற மின்னாற்றல் கிடைக்கும். தவிர, இக்கட்டிடத்திலுள்ளே வைக்கப்பட்டுள்ள நீர் குழாய் வெப்ப குறைவு வசதி மூலம், கோடைக்காலத்தில், பயணிகள் இயற்கையான குளிர் வானிலையை அனுபவிக்கலாம்.
ரசிகர்கள், இந்திய அரங்கில் நுழைந்தவுடன், பெரிய சிவப்பு நிறமான வட்ட கூரையினால் ஈர்க்கப்படுவர். இந்த மத்திய கூரை, இந்தியாவின் இணக்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. சான்ஜி புத்த மத கோபுரம் மட்டுமல்லாது, இந்து மத கட்டிடப் பாணியுடன், இந்தக் கூரையின் வடிவமைப்புக்கு அகத்தூண்டலாக அமைந்தது. பச்சை புற்கள், மத்திய கூரையை மூடியுள்ளன. அழகான பசுமையில், உயிர் மரம் என்னும் வெண்கலச் சிற்பம் உள்ளது. தாவரங்களையும் உலோகதையும் இணைக்கும் இந்த மத்திய வளைவுக் கூரை, சிறப்பான உயிராற்றலை வெளிப்படுத்துகிறது. இந்தக் கூரை, சீனாவின் சேச்சியாங் மாநிலத்தின் ஆன்ஜியில் தயாரிக்கப்பட்டது. சீன-இந்திய கட்டிடப் பண்பாட்டுத் தொடர்பை இது எடுத்துக்காட்டியதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருத்தையும் வெளிக்கொணர்கிறது.
இந்திய அரங்கின் தரை, மண்ணையும் கற்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. பயணிகள் இத்தரையில் நடந்த போது, இந்தியாவின் வாரனாசி நகரத்தில் நுழைந்ததை போன்று உணரலாம். வாரனாசி நகரம், இந்தியப் பண்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நகரங்களில் ஒன்றாகும். கங்கை ஆறு, இந்நகரத்தை கடந்து செல்கிறது. இந்தியவர்கள் கங்கை ஆற்றில் புனித நீரோடுவது வழமை.
இந்திய அரங்கைப் பார்வையிடும் போது, பயணிகள், இந்திய சந்தைப் பகுதிக்குச் சென்று பார்க்கலாம். இப்பகுதியில், சுற்றுப்புறத்தின் அழகான காட்சியைக் கண்டு ரசித்து, இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளைச் சுவைக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் அறிவியல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால், புத்தாக்க வடிவமைப்பு, அறிவியல் தொழில் நுட்பம் முதலியவை, கண்காட்சியில் முக்கிய உள்ளடக்கங்களாக மாறின. தகவல் தொழில் நுட்பம், செயற்கைகோள் தொலைத் தொடர்பு தொழில் நுட்பம், உயிரி அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த இந்திய தொழில் நிறுவனங்கள், உலகப் பொருட்காட்சியில் பங்கேற்கும். இந்திய அரங்கின் விற்பனை மையத்தில், இந்தியாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள், உள்ளூரின் தனிச்சிறப்பான உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வார்கள்.
மேலும், உலகப் பொருட்காட்சி நாட்களில், இந்தியாவின் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.
இந்திய அரங்கின் முதன்மைப் பிரதிநிதி ஹிலா பேசுகையில், இந்திய அரங்கு, மணிதோறும், சுமார் 1500 பயணிகளை வரவேற்கலாம். ரசிகர்கள், திரைப்படம், கலை நிகழ்ச்சி, உணவு வகைகள், தனிச்சிறப்பான உற்பத்திப் பொருட்கள் முதலியவற்றின் மூலம், இந்தியாவைப் புரிந்துகொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தினார்.
நேயர்களே, வாய்ப்பு இருந்தால், ஷாங்காய் மாநகருக்கு வந்து உலகப் பொருட்காட்சியில் இந்திய அரங்கை கண்கூடாக பார்ப்பதை வரவேற்கின்றோம்.
இனி, போட்டிக்கான 4வது கட்டுரை தொடர்பான இரண்டு வினாகள்:
ஒன்று, இந்திய அரங்கின் தலைப்பு என்ன?
இரண்டு, இந்திய அரங்கின் பெரிய கூரை, சீனாவின் எந்த இடத்தில் தயாரிக்கப்பட்டது?