• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர் நேரம்
  2010-04-16 14:06:36  cri எழுத்தின் அளவு:  A A A   









தமிழன்பன் நான் தமிழன்பன். உங்களது பொன்னான கருத்துக்களை இந்நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகின்றோம்.
கலை சிச்சுவான் எதிர்பார்ப்புக்குரிய இடம் மற்றும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற இரண்டு பொது அறிவுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இரண்டுப் போட்டிகளிலும் உங்களது பங்கேற்பு மிகவும் சிறப்பாக அமைய கேட்டுக் கொள்கிறோம்.
தமிழன்பன் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பும், அது நடத்துகின்ற பொது அறிவுப் போட்டிகளும் உங்களது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் சென்றடைந்து, பலப் படைப்புகளையும், விடைத் தாள்களையும் அனுப்பிவைக்க இடைவிடாது முயற்சி செய்ய கேட்டுக்கொள்கின்றோம்.
கலை சிச்சுவான் எதிர்பார்ப்புக்குரிய இடம் என்ற போட்டி ஜூலை திங்கள் முதல் நாள் வரையும்,. ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற போட்டி ஜூலை 31 ஆம் நாள் வரையும் நடைபெறும் என்பதை நினைவூட்டிக் கொள்கின்றோம்.
தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, நேயர்கள் கடிதங்கள் மூலம் தெரிவித்த கருத்துக்களை கேளுங்கள்.

கடிதப்பகுதி
கலை முதலாவதாக, சென்னை ரேணுகா தேவி சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன பல்கலைக் கழகங்கள், மொழி பயிற்சி, நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றை இந்நிகழ்ச்சி விளக்கிபோது, சீனாவில் ஏற்பட்டுள்ள கல்வித்துறையின் வளர்ச்சியை உள்ளங்கை நெல்லிக் கணியாய் புரிய வைத்தது.
தமிழன்பன் அடுத்து, இலங்கை வாழைச்சேனையிலிருந்து, எ.எம்.ஹூசைன் மிகவும் பிடித்த நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இணையத்தின் மூலம் தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை கேட்டு வருகின்றேன். சீன-இந்திய மற்றும் தமிழ் மக்களின் நட்புறவிற்கு பாலமா இருக்கின்ற நபர்களையும் நிகழ்வுகளையும் அறிவிக்கும் நட்புப்பாலம் நிகழ்ச்சி மிக முக்கியத்தவம் பெறுவதோடு, நான் மிகவும் விரும்பும் நிகழ்ச்சியாகும். பலருக்கும் நமது வானொலியை அறிமுகப்படுத்தி வருகிறேன்.
கலை தொடர்வது, ஊத்துக்குளி இச்சிப்பாளையம் வெ.பிரகாஷ் எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிளை கேட்டு வருவதன் மூலம் சீன அரசின் வலிமையையும், அதன் மனித மையப் பணிகளையும், மக்களின் தேவையை உடனுக்குடன் நிறைவேற்றும் கடமையுணர்வையும் அறிய முடிகிறது. சீன மக்களின் ஒத்துழைப்பும், சகோதரத்துவமும் இதற்கு அடிப்படையாகின்றன. இதனால் தான் சீன மக்கள் திட்டமிடும் வளர்ச்சி இலக்கை எளிதாக அடைய முடிகிறது.
தமிழன்பன் இனி, மதுரை திருமங்கலம் பி.கதிரேசன் சீனக் கதை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். காசியில்லாமல் இருந்த துதர் ஷாங் யி தனது மதிநுட்பத்தால் ஏராளமான செல்வங்களோடு நாடு திரும்பினான். அறிவு வாழ்விற்கு செல்வச்செழிப்பை கொண்டுவரும் என்பதை இக்கதை விளக்கியது.
கலை அடுத்தாக இடம்பெறும் கடிதம், உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி கே.கே.போஜன் எழுதியது. நாம் தொடர்பு கொள்வோரிடமிருந்து தொலைபேசி எண் மற்றும் முகவரியை பெற்றுக் கொண்டு உறவுகளை வளர்த்து கொள்வது பற்றி இந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. நட்பை வளர்க்கும். இம்முறையை அனைவரும் பின்பற்றலாமே.

தமிழன்பன் தொடர்வது, மதுரை அண்ணாநகர் என்.இராமசாமி சீனாவில் மின்னாற்றல் வினியோகம் பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் மின்னாற்றல் வினியோகம் வசந்த காலத்திலும் பற்றாகுறையின்றி இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா இவ்வாறு உறுதிபட கூறுவது, இதர எரியாற்றல் வளங்கள் போதியளவு இருப்பதால் தான் என உணர முடிகிறது.
கலை இனி, மெட்டாலா எஸ்.பாஸ்கர் நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனாவின் நண்பரான கனடியர் நோர்மன் பசுனின் சேவை மனதை நெகிழ வைத்தது. அவரது இரவு, பகல் மருத்துவ சேவை, ஆக்கிரமிப்பு எதிர்ப்பு பணிகளால் சீனர்களை மட்டுமல்ல, மனிதநேயம் போற்றும் அனைவரின் மனங்களிலும் இடம்பெற்றுவிட்டர்.
தமிழன்பன் அடுத்தாக இடம்பெறுவது ஆரணி இ.நந்தினி கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். கிராம மக்களின் முன்னேற்றம் குறித்தாக அமைந்த இந்நிகழ்ச்சி ஒரு துறை அமைச்சரிடம் கேள்விக் கேட்டு பதில் பெறுவது போன்று அமைந்தது. முதல் ஐந்தாண்டு திட்டங்கள், சுற்றுலா, காப்புறுதி, இணையதளம் ஆகிய வளர்ச்சி திட்டங்களால் சீனாவின் வளர்ச்சி 30லிருந்து 57 விழுக்காடாக மாறியுள்ளதை அறிந்தேன்.

கலை தொடர்வது, விளையாட்டு செய்திகள் பற்றி திருச்சி எம்.தேவராஜா எழுதிய கடிதம். சீன கால்பந்து துறையின் புதிய வளர்ச்சியை இது விவரித்தது. இத்துறையை மீட்டெடுக்க சீன அரசு காட்டிய அக்கறை விளையாட்டுத் துறை நலிவுற்றுவிடாது வளர காட்டுகின்ற சிறந்த செயல்பாடாகும். இதனால் ஏற்படும் மறுமலர்ச்சி சீன கால்பந்து துறையை மீண்டும் நிலைநிறுத்தும்.
தமிழன்பன் இனி, பொள்ளாச்சி தேவநல்லூர் எஸ்.செந்தில் குமார் சீன இசை பற்றி அனுப்பிய கடிதம். நமது ஒலிபரப்பில் இடம்பெறும் சீனப் பாடல்களுக்கு சிறந்த விளக்கம் அளி்த்து ஒலிபரப்பப்படுகிறது. பாடல் வரிகளின் பொருள் புரியாவிட்டாலும், விளக்கத்தை கேட்டு அது வெளிப்படுத்தும் உணர்வை பெற முடிகிறது.
மின்னஞ்சல் பகுதி
நாகர்கோயில் ஸ்டெல்லா ஷர்மிளா அனுப்பிய மின்னஞ்சல்
அமெரிக்காவில் நடைபெறும் அணு ஆற்றல் உச்சி மாநாட்டில் சீன அரசுத்தலைவர் கலந்து கொள்கிறார். அணு ஆற்றலை பொருளாதாரத்தின் ஆக்கபூர்வ வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் சீனா எப்போதுமே உறுதியாக இருப்பதன் மூலம், உலக அமைதிக்கு அது அளிக்கும் முக்கியத்துவம் தெரிகிறது.

திருச்சி துப்பாக்கித்தொழிற்சாலை எம்.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
சர்வதேச அணு ஆயுதக் குறைப்புக்காக, சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து சீனா முயற்சிக்கிறது. அணு ஆயுதங்களை பன்முகங்களிலும் தடுத்து, இல்லாமல் செய்திட விரும்புவதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது. எந்த நிலையிலும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என சீனா உறுதியளித்திருப்பது பாராட்டுக்குரியது.
கோவை மோப்பேரிப்பாளையம் பி.தங்கராஜ் அனுப்பிய மின்னஞ்சல்
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறும் அணு ஆற்றல் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் புறப்பட்டுள்ளனர். அணு ஆற்றல் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் முக்கியமாகி வருவதை இது சுட்டுகிறது. இந்நிலையில், அணு ஆயுதங்கள் உலகளவில் பரவிவிடாமல் இருக்க பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதே சாலசிறந்தது.

வளவனூர் புதுபாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில், உலகப் பொருட்காட்சி தோன்றிய வரலாறும், பண்பாட்டுப் பின்னணியும் சுவைபட தொகுக்கப்பட்டது. உலகப் பொருட்காட்சி துவங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதை பற்றிய சீன வானொலி நிகழ்ச்சிகள் களை கட்டத் துவங்கியுள்ளன. 1851 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் நாள், பிரிட்டனின் இலண்டன் மாநகரில் துவங்கிய முதலாவது உலகப் பொருட்காட்சி, படிப்படியாக வளர்ச்சியடைந்து, தற்போது உலகின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது.
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
22 இலட்சம் தன்னார்வ தொண்டர்கள் ஷாங்காய் உலகப்பொருட்காட்சியின்போது தகவல் அளிப்பது, உபசரிப்பு, வழிகாட்டுதல் போன்ற முக்கிய சேவைகளை அளிக்கவுள்ளனர். அனைத்து நாட்டு பார்வையாளர்களுக்கும் இவர்களின் பணி நிறைவாய் அமைய வாழ்த்துக்கள். மேலும், முழுமையாக சீனாவின் தயாரிப்பில் உருவான மணிக்கு ஐநூறு கி.மீ வேகம் செல்லும் நவீன தொடர்வண்டி சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்தூ நகரில் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இது, சீனாவின் ஆற்றலை உலகிற்கு காட்டும் அடையாளம்.
பரசலூர் உத்தமசீலன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் ஹைனன் மாநிலத்தின் போ ஆவ் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் சீனாவின் துணை அரசுத் தலைவர் சிச்சின்பிங் கலந்து கொண்டு சிறப்பித்தார். உலக காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது பல்வேறு நாடுகளின் பொது நலன்களுடன் தொடர்புடையதால், புவியின் பாதுகாப்புக்குப் எல்லா நாடுகளும் பொறுப்பு ஏற்க வேண்டுமென்ற அவரது கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.


திருச்சி அண்ணாநகர் வீட்டியார் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் ஹைனன் மாநிலத்தின் போ ஆவ் ஆண்டு கூட்டம் பசுமையான மறுமலர்ச்சி அதாவது ஆசியாவில் தொடரவல்ல வளர்ச்சியின் நடைமுறை தேர்வு என்பதை தலைப்பாக கொண்டு நடைபெற்றதை அறியத்தந்தீர்கள். உலகளவில் கூட்டான ஆனால் நாடளவில் உகந்த வேறுப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்ற உறுதியளித்துள்ள சீனா, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதென்ற உலக நடவடிக்கைகளில் பங்கு எடுப்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
விழுப்புரம்.எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
மே திங்கள் 25 முதல் 28 வரை பெய்ஜிங்கில் உலக சுற்றுலா மாநாடு நடைபெறவதை அறிந்தேன். சுற்றுலாத்துறை வருவாய் கொணர்வது மட்டுமல்ல. அதனால் ஓரிடத்தின் கலாச்சாரம், நடைமுறை, பழக்கவழக்கங்கள், உணவு, மரபுச் செல்வங்கள், பாரம்பரிய முறைகள் என பலவித விழிப்புணர்வை சுற்றுலாப் பயணி சுவைக்கிறார். பின்னர், சுற்றுலா பயணியே விமர்சகராக மாறி, அனுபவம் பெற்ற விளம்பர நபராகவும் விளங்குவதே உண்மை. பெய்ஜிங் சுற்றுலா மாநாடு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் நேரத்தில் நடைபெறுவதால் சீன மக்களுக்கு அதிக வாய்ப்புக்களை கொண்டுவரும்.

ஈரோடு, சி. சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல்
பத்தாயிரம் குடும்பங்கள் கலந்து கொள்கின்ற குடியிருப்புப் பிரதேச பசுமை நடவடிக்கை பெய்ஜிங்கில் துவங்கியதை நிகழ்ச்சிகளில் அறிந்தேன். இக்குடும்பங்கள் குடும்பங்கள் ஜுன் முதல் ஆகஸ்ட் திங்கள் வரை திங்கள்தோறும் தலா ஒரு கிலோவாட் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவுளள்ன. கரியமில வாயுவின் வெளியேற்றம் குறைப்பு, கரி குறைந்த தொடரவல்ல வாழ்க்கையை இம்முயற்சி முன்னிலைப்படுத்தும். சீனரின் இம்முயற்சியை உலக மக்கள் பின்பற்றி இவ்வுலகை பசுமையானதாக மாற்ற வேண்டும்.
பரசலூர் பி.எஸ்.சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
தூங்குமூஞ்சி நாடுகளை மலர்ச்சோலை நிகழ்ச்சியில் அறியவந்தேன். பிரஞ்சு, அமெரிக்கா, ஸ்பெயின் நாட்டு மக்கள் அதிக நேரம் தூங்குவதாக தெரிகிறது. வேலை நேரம் குறைவு, வேலை ஆட்களையே பெரிதும் நம்பியிருப்பது என சுவையான தகவல்கள் அதில் இடம்பெற்றன.
நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
வினாடிக்கு பத்து கோடியே கோடி தரவுகளை கணக்கிடும் சிறப்புக் கணினி சீனாவின் அபார அறிவியல் வளர்ச்சியின் அடையாளம். அளவில் சிறிய, உற்பத்தி மற்றும் மின்சார செலவுகள் குறைந்த இக்கணினியின் தனிச்சிறப்புகள் மலைப்பை ஏற்படுத்தின.

உத்திரக்குடி சு.கலைவாணன் இராதிகா
சீன மகளிர் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்காவிற்கு சென்ற சீனாவின் முதல் இளம் தொண்டர் அணித்தலைவியின் சேவை பற்றி அறிந்தோம். சேவை முடிந்தும், சீன தூதரகத்தின் அனுமதியோடு, சீன நாட்டின் மருத்தவமுறைகளில் ஒன்றான அக்குபஞ்சர், இசை நாடகம், உணவு வகைகளில் ஒன்றான இறைச்சி கொழுக்கட்டை ஆகியவை பரவல் செய்யும் பணியையம் அவர் செய்துள்ளார். சேவை உணர்வோடு, இரு நாடுகளின் நட்புக்கு அடிப்படையிட்டார் என்பதே பொருந்தும்.
வளவனூர் முத்துசிவக்குமரன் அனுப்பிய மின்னஞ்சல்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களால் 75 துணை இராணுவப்படையினர் கொல்லப்பட்ட செய்தியினை சீன வானொலியில் கேட்டேன். கொடூரச் செயல்களை ஜனநாயகத்தினை விரும்பும் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொது மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு கொலை, கொள்ளை என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளதே.

மதுரை அண்ணாநகர் ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் மேற்குபகுதி வளர்ச்சி திட்டம் நிறைவேற்றப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் மாபெரும் சாதனைகள் காணப்பட்டன. அடுத்த பத்தாண்டுகளில் அங்குள்ள வளர்ச்சி திறன்களை வலுப்படுத்துவதை மையமாக கொண்டு அறிவியல் தொழில்நூட்பங்களை அரசு புகுத்தவுள்ள செயல்பாடு, விரைவான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்.
சின்னவளையம் கு.மாரிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் பேட்டியை நட்புப்பாலம் நிகழ்ச்சியில் கேட்டேன். இந்திய-சீனா நட்புறவு வளர்ச்சி பெற்று வருவதை அனைவரும் அறிவிக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040