• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு வாழ்த்துரையை குறுந்தகவல்களாக வழங்கும் சேவை தொடர்பாக
  2010-04-19 14:01:20  cri எழுத்தின் அளவு:  A A A   








ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு வாழ்த்து தெரிவிக்கும் குறுந்தகவல்களுக்கான சேவை தொடர்பாக, பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

1. சீன வானொலி தமிழ்ப்பிரிவு வரலாற்றில், சீனாவில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று செல்லிடப்பேசி மூலம் வாழ்த்து தெரிவிக்கும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன?

184 ஆண்டு வரலாறு கொண்ட உலகப் பொருட்காட்சி இவ்வாண்டு மே முதல் நாள் ஷாங்காய் மாநகரில் தொடங்கி நடைபெற உள்ளது. இதை நடத்துவது சீன மக்களை பொறுத்தவரை முக்கிய விடயமாகும். ஆசிய நாடுகளை பொறுத்தவரையும் கூட இது முக்கிய நிகழ்வாகும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை செவ்வனே பரப்புரை செய்யும் வகையில் தமிழ்ப் பிரிவு ஏப்ரல் 5ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய பொது அறிவுப் போட்டியை துவக்கியுள்ளது. இந்த போட்டி ஜுலை திங்கள் 31ம் நாள் வரை நீடிக்கும். இதற்கிடையில் மே 24ம் நாள் முதல் 27ம் நாள் வரை, ஜுன் திங்கள் 21ம் நாள் முதல் 24ம் நாள் வரை இப்போட்டிக்கான 4 கட்டுரைகள் மீண்டும் ஒருமுறை ஒலிபரப்படும். தவிரவும் ஏப்ரல் 12ம் நாள் முதல் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை துவக்கியுள்ளோம். நிகழ்ச்சிகளை கேட்ட பின் செலிடப் பேசி மூலம் குறுந்தகவல்களில் நீங்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். நேயர்களின் நேரடி வாழ்த்து ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை நன்றாக பரப்புரை செய்வதில் ஒரு முக்கிய பகுதியாக மாறும். பல தகவல்களை குறிப்பிட்டேன். இவையனைத்தும் நாம் செலிடப் பேசி மூலம் குறுந்தகவல்களை பெறுவதன் நோக்கமாகும்.

2. நேயர்கள் தெரிவிக்கும் வாழ்த்துச் செய்திகள் எத்தகையதாக இருக்க வேண்டும்?

குறுந்தகவல் என்ற வடிவம் வாழ்த்து தெரிவிப்பதன் அளவை கட்டுப்படுத்துகின்றது. ஆகவே சுருக்கமாக தெளிவாக வாழ்த்தை தெரிவிப்பது அருமையான தேர்வா அமையும். ரத்திணச் சுருக்கமான வாழ்த்துக்கள் எளிதில் மக்களை கவரும் அல்லவா?

3. நேயர்கள் தெரிவிக்கும் வாழ்த்துச் செய்திகள், ஆங்கில மொழியில் மட்டும் இருக்க வேண்டும், அப்படித்தானே?

சரி. இது முக்கியமானது. இது பற்றிய அறிவிப்பில் ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டோம். இங்கே மீண்டும் தெளிவுப்படுத்துகின்றேன். அதாவது ஆங்கிலத்தில் அல்லது தமிழ்ச் சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி அனுப்பவேண்டும். சீனாவில் பயன்படுத்தப்படும் செலிடப் பேசியில் தமிழ் எழுத்துருக்கள் வசதியில்லை. முக்கியமாக சீன மொழி மற்றும் ஆங்கில மொழி உள்ள இநத்த செலிடப் பேசியிக்கு தமிழ் எழுத்துக்களை நீங்கள் அனுப்பினாலும் எம்மால் பார்க்க இயலாது. ஆகவே நாங்கள் கோரிட படி நீங்கள் குறுந்தகவல்களை ஆங்கிலத்தில் அனுப்புங்கள்.

4. குறுந்தகவல்களை எந்த நேரத்தில் அனுப்ப வேண்டும் என்பது பற்றி ஏதேனும் கட்டுப்பாடு உண்டா? அதாவது ஒரு நாளின் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானும் குறுஞ்செய்தியை நேயர் ஒருவர் அனுப்பி வைக்கலாமா?

நல்லது. சரியான கேள்விதான். நீங்கள் எந்த தயக்கமுமின்றி குறுஞ்செய்தியை தாராளமாக எந்த நேரமும் அனுப்பலாம். நீங்கள் மட்டுமல்ல உங்கள் நண்பர்களையும் சக பணியாளர்களையும் ஊக்குவித்து ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான வாழ்த்துரை தெரிவித்து குறுஞ்செய்திகளை அனுப்புமாறு செய்யுங்கள். வாழ்த்துக்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து இணைய தளத்தில் வெளியிடப்படும்.

5. குறுந்தகவலை அனுப்புவதற்கு கடைசி நாள் எது? அதாவது, நேயர்கள் எந்த நாள் வரை குறுந்தகவல்களை அனுப்பி வைக்கலாம்?

கடைசி நாள் உறுதிப்படுத்தப்பட வில்லை. அதாவது இணையதளத்தில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான பக்கம் நிலைநிறுத்தப்படும் வரை இதற்கான வாழ்த்துக்களை நீங்கள் தொடர்ந்து அனுப்பலாம்.

6. செல்லிடப் பேசி மூலம் நேயர்கள் தெரிவிக்கும் வாழ்த்துச் செய்திகள், இணையத்தில் எந்த வடிவத்தில் இடம்பெறும்?

தமிழ் இணையதளத்தின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பக்கத்தில் இதற்காக ஒரு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இணையதளத்தின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி என்ற பக்கத்தை திறந்தவுடன் செல்லிடப் பேசி சின்னத்தை காணலாம். செலிடப் பேசியின் நடுவில் "இங்கே"என்ற சொல்லை சொடுக்கினால் குறுந்தகவல் பகுதி உடனடியாக உங்கள் கண்களின் முன்னே தோன்றும். இதில் நீங்கள் அனுப்பும் வாழ்த்து குருஞ்செய்திகள் பதிவாகியிருக்கும். இல்லையென்றால் வேறு ஒரு வழியில் குறுந்தகவல் பக்கத்தை அடையலாம். தமிழ்ப் பிரிவின் இணைய பக்கத்தில் முகப்பில் வலம் இருந்து இடமாக ஓடும் முக்கிய செய்திகளின் தலைப்புகளை சொடுக்கினால் நேரடியாக குறுஞ்செய்தி வாழ்த்துக்கள் உள்ள பக்கத்தை அடையலாம். ஆகவே இரண்டு வழிகளின் மூலம் குறுஞ்செய்தி பகுதியை அடையலாம்.

7. வாழ்த்துச் செய்திகளை அனுப்ப வேண்டும் என அறிவிப்பு வெளியானவுடன், நேயர்களிடமிருந்து நல்ல மறுமொழி கிடைத்ததா?

நேயர்கள் உற்சாகமாக தங்களது ஆதரவை காட்டியுள்ளனர். இதில் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வமாகிய உங்கள் பெயர் முதல் வரிசையில் வெளியிடப்படுகின்றது. அடுத்து, விழுப்புரம் எஸ் சேகர், புதுவை எஸ் அரவிந்தன், பொருணை பாலு, புதுவை எஸ் சுதா, புதுக்கோடை ஜு வரதராஜன், ஆர் ஜெயஸ்ரீ, விழுப்புரம் எஸ் சேகர், ஆண்டரசன்பட்டி கே.எம்.ராஜீ.

ஆகியோர் அனுப்பிய குறுஞ்செய்தி வாழ்த்துக்கள் இடம் பெறுகின்றன. இனிமேல் கூடுதலான நேயர் நண்பர்கள் மாறி மாறி அனுப்பிய வாழ்த்துத் தகவல்கள் இந்த பக்கத்தில் வெளியிடப்படுவது திண்ணம்.

8. சீன வானொலியின் பிற மொழிச் சேவைகளும் இத்தகைய ஏற்பாட்டினைச் செய்துள்ளனவா?

என்னைப் பொறுத்தவரை, இல்லை. ஆனால் மற்ற பிரிவுகள் தங்களது விருப்பத்திற்கிணங்க வேறு வடிவத்தில் அவற்றின் இணையதளத்தில் நேயர் பங்களிப்பை ஊக்கப்படுத்தி வருகின்றன. பல்வேறு வடிவங்களில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி பரப்புரை செய்கின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040