திருச்சி அண்ணாநகர் வீ.டி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
யுஷு பிரதேசத்தில் இதுவரை நடைபெற்ற பேரிடர் நீ்க்கப் பணிகளில் பல முக்கிய பலன்கள் பெறப்பட்டிருப்ப்பது மீட்புதவிக்குழுவினரின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். அடுத்ததாக, மக்களின் அடிப்படை வாழ்க்கையை உறுதி செய்வது, இயல்பு நிலையடைய செய்வது, மறுசீரமைப்பு ஆகியவை தொடர இருக்கின்றன. மறுசீரமைப்பு பணியில், உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு செயல்படயிருப்பது சிறப்பம்சம்
வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பற்றிய தகவல்களை நாள்தோறும் அளித்து வருவதற்கு நன்றிகள். பல்வேறு ஆசிய நாடுகள் மற்றும் மேலை நாடுகளின் அரங்குகள் பற்றிய தகவல்களை அளித்தீர்கள். ஆனால், மிகவும் பின்தங்கிய நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்கக் கண்ட நாடுகள் உலகப் பொருட்காட்சியில் எவ்வாறு பங்கெடுக்கின்றன என்பது பற்றி இதுவரையில் விரிவாகக் கூறவில்லை. குறிப்பாக, மிகச் சிறிய நாடுகளான, பெனின், எரிடிரியா, காபோன், லைபீரியா, கினி, மாலவி, ருவாண்டா, டோகோ குடியரசு, ஜிபூட்டி, லேசோதோ, போட்ஸ்வானா, கோ டிவா மற்றும் சியாரா லியோன் போன்ற மிகச் சிறிய நாடுகள் எத்தகைய வடிவில் அரங்குகளை அமைத்துள்ளன என்பதைப் பற்றிய அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கின்றேன்.
பரசலூர் உத்தமசீலன் அனுப்பிய மின்னஞ்சல்
இரண்டு நாட்களாக நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2010ம் ஆண்டு வசந்தக் கால கூட்டம் 25ம் நாள் வாஷிங்டனில் நிறைவடைந்திருப்பதை அறிய வந்தேன். உலக வங்கியில் வளரும் நாடுகளின் வாக்களிப்பு உரிமையில் சீர்திருத்ததை சீன நிதி அமைச்சர் உயர்வாக மதிப்பிட்டுள்ளதையும் செய்திகளின் வாயிலாக அறிந்தேன். இந்த சீர்திருத்தம் பல்வேறு நன்மைகளை வளரும் நாடுகளுக்கு வழங்குவது உறுதி.
நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் நிலநடுக்கம் பாதித்த மக்களுக்கு செய்த உதவியை என்னும் சீன வானொலி ஒலிபரப்பின் வழியாக அறிந்தேன். இதுவரை 82 கோடி யுவானுக்கு மேல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் உதவியுள்ளனர். பாதிக்கப்பட்ட வர்க்கத்தினர் மேம்பட உதவி, மனித மையம், மனிதநேயம் போன்ற கொள்கைகளின் செயல்பாட்டை விளக்குவதாக இந்த உதவி அமைந்துள்ளது.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை எம். செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கும் நாள் நெருங்கி வருவதால், ஜெர்மனியில் உற்சாகம் அதிகரித்து வருவதையும். உலகப் பொருட்காட்சியைப் பார்வையிட சீனாவில் பயணம் மேற்கொள்ள விசா விண்ணப்பம் செய்யும் ஜெர்மனி மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதையும் செய்திகளில் தெரிந்துகொண்டேன். உலக மக்கள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியயால் ஈர்க்கப்படுவதையே இது காட்டுகிறது.
செந்தலை என்.எஸ்.பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்
சீன அரசுத்தலைவர் ஹூசிங்தாவ் தனது அமெரிக்க கண்டத்தில் மேற்கொண்ட பயணத்தை முன்னதாக முடித்துகொண்டு நாடு திரும்பினார். யூசு மாவட்டத்தில் நடைபெறும் மீட்ப்புபணிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றை துரிதப்படுத்த அவ்வாறு செய்துள்ளார். இச்செயல் பல நாட்டு தலைவர்களுக்கு முன்னுதாரணம். மக்களுக்களின் தலைவன் என்பதனை விளக்கும் செயல்பாடு இதுவாகும்.
மெட்டாலா எஸ். பாஸ்கர் அனுப்பிய மின்னஞ்சல்
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திபோம் என்ற பொது அறிவுப்போட்டி பற்றியும், குறுஞ்செய்தியில் வாழ்த்து அனுப்புவது பற்றியும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கலையரசி மற்றும் எஸ்.செல்வம் அவர்கள் கலந்துரையாடல் வாயிலாக விளக்கம் அளித்தனர். நேயர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்நிகழ்ச்சி உதவியாக இருக்கும்.
பகளாயூர் பி.எ.நாச்சிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு சீனா அரசு தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. சீன மக்களின் உழைப்பையும் தனித்திறமைகளையும் தற்போதைய நவீன வளர்ச்சியால் உருவாகியுள்ள புதிய தொழில் நுட்பங்களையும் உலனிற்கு அறிவிக்கும் வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
மீனாட்சிபாளையம் கா.அருண் அனுப்பிய மின்னஞ்சல்
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி கேட்டேன். இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வோர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டாலோ உடனடியாக உதவிபுரிய செய்துள்ள முன்னேற்பாடுகளை பற்றி அறிந்தேன். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின்போது பெற்ற அனுபவம் இப்போது அதிகமாக உதவும்.
முனுகபட்டு பி.கண்ணன்சேகர்
.சீன வானொலி நிலையத்தின் கொரிய பண்பலை ஒலிபரப்பு சீனாவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள Ji Lin மாநிலத்தின் Yan Ji நகரில் தொடங்கியிருப்பது அறிந்தேன். மேலும், ஏப்ரல் 23ம் நாள் முதல் கொழும்பு பண்பலை 102 மெகாஹெர்ட்ஸ் மூலம் சிங்களம், தமிழ், ஆங்கிலம், மற்றும் சீன மொழியில் சீன வானொலி 19 மணிநேர நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப துவங்கியுள்ளதையும் என்பதையும் அறிந்தேன். சீன வானொலியின் சேவை மேலும் விரிவடைந்துள்ளதை எண்ணி மகிழ்கின்றேன்.