• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர் நேரம்
  2010-04-29 11:28:42  cri எழுத்தின் அளவு:  A A A   








தமிழன்பன் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் விளங்கும் நேயர் நண்பர்கள், கருத்துக் கடிதங்கள் மூலம் இந்நிகழ்ச்சிக்கு வழங்கிவரும் ஆதரவுக்கு எமது உளம் கனிந்த நன்றி.
கலை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி இன்னும் இரண்டு நாளில் தொடங்கவிருக்கிறது. அதனால் சீனா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அரையாண்டு அதாவது மே முதல் நாளிலிருந்து அக்டோபர் 31 ஆம் நாள் வரை உலகப் பொருட்காட்சி நடைபெறும். இவ்வேளையில் ஷாங்காயில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.

தமிழன்பன் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம், சிச்சுவான்-எதிர்பார்ப்புக்குரிய இடம் என்ற இரண்டு பொது அறிவுப் போட்டிகளில் அதிகமானோர் பங்கேற்க வைக்கும் முயற்சிகளை தொடரவும் கேட்டுக் கொள்கின்றோம். சீன வானொலி நிலையத்திலேயே அதிக பங்கேற்பை உருவாக்கி சீனாவில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுவோராக மாற உங்களை அழைக்கின்றோம்.
கலை நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னால் கருத்துக் கடிதங்கள் எழுதுவது பற்றிய சிறு விளக்கம் உங்களுக்காக. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கின்ற நிகழ்ச்சிகள் பற்றிய உங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களே நேயர் நேரம் நிகழ்ச்சி. நிகழ்ச்சியையும், நீங்கள் கேட்ட தேதியையும் குறிப்பிட்டு அந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழன்பன் இணையதள பக்கங்களிலிருந்து செய்திகளையோ அல்லது இன்ன பிற தகவல்களையோ அப்படியே எடுத்து ஒட்டி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். சில வரிகளாக இருந்தாலும், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் பற்றிய உங்களின் விமர்சன வரிகளாய் அமைத்து அனுப்பவும். அந்த விமர்சனங்களில் உங்கள் பெயரை எழுதும்போது மாவட்டத்தையும் ஊரையும் சேர்த்து எழுதினால் நலமாக இருக்கும்.

கலை இன்றைய கடிதப்பகுதியில் முதலாவதாக, சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய கடிதம். சீனாவில் பின்பற்றப்படும் பன்னிரொண்டு ஆண்டுகள் பற்றிய விரிவான விளக்கம் கேட்டேன். டிராகன் என்பதை பறவை நாகம் என்று சீனாவில் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் பறக்கும் பாம்பு என்கின்றனர். பன்னிரெண்டு விலங்குகளின் பெயரில் ஆண்டுகளை குறிப்பிட புத்தர் பெருமானிடம் கேட்டபோது, அவரும் மஞ்சள் பேரரசர் பாதுகாப்பிற்கு தேர்வு செய்த பன்னிரெண்டு விலங்குகளை குறிப்பிட்டதிலிருந்து, சீன மக்கள் விலங்குகளிடம் கொண்டிருந்த மதிப்பை உணர முடிந்தது.
தமிழன்பன் அடுத்ததாக, சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி சென்னை ரேணுகாதேவி எழுதிய கடிதம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்கா வடிவமைப்பு பற்றிய கட்டுரையை கேட்டேன். இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுவரும் அரங்குகளின் சிறப்பியல்புகள் வியப்பளித்தன. இதில், சீனாவின் பாரம்பரிய தொல்பொருட்கள் இடம்பெறுவதும், சீன சமூக வாழ்வு முறைகள் விளக்கப்படுவதும் பார்வையாளகள் பலரின் ஆர்வத்தை தூண்டியிழுக்கும். ஆஸ்திரேலிய அரங்கு பற்றிய விளக்கமும் மிகவும் அருமை.

கலை தொடர்வது, செய்திகள் பற்றி ஆந்திராவிலிருந்து எழுதும் மும்பை சுகுமார் அனுப்பிய கடிதம். சீன புத்தமதத்துறை பிற நாடுகளுடன் கொண்டிருக்கும் தொடர்பை இதில் அறிய முடிந்தது. பல்வேறு நாடுகளுடன் தொடர்புக்கொண்டு ஒத்துழைக்கும் பண்பு அனைவருக்கும் நன்மைபயப்பதாகும். இந்த ஒத்துழைப்பில் எல்லாதரப்பினருக்கும் மேன்மைதரும் புத்தரின் அறநெறிக் கொள்கைகள் உலக நாடுகளில் பரவி அமைதி பிறக்க வழிவகுக்கும்.
தமிழன்பன் இனி, தஞ்சை நரசிங்கன்பேட்டை சந்தான கிருஷ்ணன் சீன தமிழொலி இதழ் பற்றி எழுதிய கடிதம். புத்தாண்டு வாழ்த்து அட்டையோடு, சீன தமிழொலி இதழும் கிடைத்து. சிறப்பு நேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு சீனாவில் பயணம் மேற்கொண்ட முனுகப்பட்டு கண்ணன்சேகர் அவர்களின் பயணக்கட்டுரையை வாசித்து மகிழ்ந்தேன். சீன மக்களின் வரவேற்கும் பண்பு, விருந்தோம்பல், சிக்சுவானின் சிறப்பு மிகு இடங்கள் ஆகியவற்றை பற்றி அறிந்ததோடு, அங்கு பயணம் மேற்கொண்ட உணர்வையும் பெற்றேன்.

கலை அடுத்தாக, மட்டக்களப்பு எம்.என்.எப்.நிப்றா இசை நிகழ்ச்சிகள் பற்றி அனுப்பிய கடிதம். உலக தமிழ் மக்களின் காதுகளில் இன்னிசை மழையாய் தவழ்ந்து வரும் சீன வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகும் நேயர் விருப்பம் மற்றும் சீன இசை நிகழ்ச்சிகள் மிகவும் சிறந்தவை. இனிய தமிழ் திரைப்பட பாடல்கள், இசை இலயத்தை உணர வைக்கும் சீன இசையில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் மனதிற்கு இதம் அளிக்கின்றன.
தமிழன்பன் தொடர்வது, ஈரோடு சி.சுந்தர் ராஜா செய்தி விளக்கம் பற்றிய எழுதிய கடிதம். செர்க்கத்திலுள்ள திபெத் என்ற தலைப்பில் அமையும் திபெத் அரங்கின் திட்டப்பணிகள் ஷாங்காய் உலப்பொருட்காட்சி பூங்காவில் நடைபெற்று வருவதை இது விளக்கியது. 120 நாடுகளிலிருந்து, சுமார் ஏழு கோடி பேர் கலந்து கொள்ளும் ஷாங்காய் உலகப்பொருட்காட்சியின்போது திபெத்தின் தனிசிறப்புமிக்க பண்பாடு, இயற்கைக்காட்சிகள், அமைதியான விடுதலைக்கு பின்னர் திபெத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை இந்த திபெத் அரங்கின் மூலம் உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைப்பது பாராட்டுக்குரியது.
கலை இனி, திருச்சி எம்.தேவராஜா விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். 2010 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சீனாவின் பனிசறுக்கு ஹாக்கி அணி பெற்றதை அறிந்தேன். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வாட்டத்தில் ஜப்பானை தேற்கடித்து தனது தகுநிலையை இது உயர்த்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக விளையாட்டுத் துறையில் சீனர்கள் சாதித்து வருவதை பல்வேறு சாதனைகள், வெற்றிகள் உலகிற்கு அறிவித்து வருகின்றன. விளையாட்டில் ஆர்வமும், வெற்றியே இலக்கு என்ற மன உறுதியும், நல்ல வாய்ப்புகளை திறந்து வருகின்றன.

தமிழன்பன் அடுத்து இடம்பெறுவது, மாவேலிப்பாளையம் மு.சிவக்குமார் சீனக்கதை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இதில் நகைச்சுவைகள், சிந்தனையை தூண்டும் கதைகள் இடம்பெறுகின்றன. இக்கதைகள் சீனாவின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை அறியதருகின்றன. இந்நிகழ்ச்சியை கதை வழியாக சீனா என்று சுருக்க சொல்லலாம்.
கலை அடுத்தாக, தாசப்பகவுண்டன் புதூர் எஸ்.சுதர்ஷன் உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். திருப்பூர் மாவட்ட சீன நேயர் மன்றம் வழங்கிய நிகழச்சியை கேட்டோம். திருப்பூர் நகரம் மகாபாரத புராணத்தோடு தொடர்புடையதை ஆறுமுகம் அறிய செய்தார். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தை சேர்ந்த ஜெயலட்சுமி ஆறுமுகத்தின் உரை எழுச்சியூட்டியது. தொடர்கின்ற இந்நிகழ்ச்சியின் பகுதிகளை கேட்க ஆவலாய் உள்ளோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040