• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விண்வெளி ஆய்வுத் துறையிலான முனைவர் சியென் சியே சன்
  2010-05-11 09:51:01  cri எழுத்தின் அளவு:  A A A   








விண்வெளி அறிவியல் ஆராய்ச்சித் துறையை துவக்கிய அறிவியலாளர் முனைவர் சியென் சியே சன் அவர்களை சீன மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். 1911ம் ஆண்டில் பிறந்த சியென் சியே சன் 1935ம் ஆண்டில் கல்வி பெற அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில் புகழ் பெற்ற காற்று உந்தாற்றலியல் நிபுணர் பேராசிரியர் சியோடு பஃன் காமனிடமிருந்து அவர் கல்வி பெற்றார். பல முறை அவர் முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். 1947ம் ஆண்டின் தொடக்கத்தில் 36 வயதான சியென் சியே சன் மாசசூசட்ஸ் தொழில் நுட்பக் கல்லூரியின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

1949ம் ஆண்டு பெய்ஜிங்குக்கு முந்தைய பீகிங் அமைதி முறையில் விடுதலை பெற்ற பின் தாய்நாட்டுக்குத் திரும்ப சியென் சியே சன் தீர்மானித்தார். அவர் தாய்நாட்டுக்கு திரும்ப ஆயத்தம் செய்யும் போது அமெரிக்காவில் சீன எதிர்ப்புவாதமான McCarthyism தலைவிரித்தாடியது. அமெரிக்க அரசு சியென் சியே சன்னை அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக குற்றஞ்சாட்டி அவரை 15 நாட்கள் தடைக்காவலில் வைத்தது. பின்னர் அவர் பிணை விடுதலை பெற்றதாலும் குடியேறியோர் விவகார ஆணையத்தின் தடுப்பிலும் மத்திய கள ஆய்வு ஆணையத்தின் கண்காணிப்பிலும் 5 ஆண்டுகள் வைக்கப்பட்டார். இந்த கடினமான சூழ்நிலையில் சியென் சியே சன் 1954ம் ஆண்டு பொறியியல் கட்டுப்பாட்டுத் தத்துவம் என்ற நூலை வெளியிட்டார். தாய்நாட்டுக்குத் திரும்பும் முன் தன்னுடைய ஆசிரியரிடம் பிரியாவிடை பெறும் போது பஃன் காமன் உணர்வுடன் கல்வியியல் ரீதியில் நீங்கள் என்னை தாண்டினீர்கள் என்று சியென் சியே சன்னை பாராட்டினார்.

1956ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள் சியென் சியே சன் தலைவராக கொண்ட சீனாவின் முதலாவது ஏவுகணை ஆய்வுக் கழகமான தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் 5வது ஆய்வுக் கழகம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1956ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள் நவ சீனாவின் ஏவுகணை மற்றும் விண்வெளித் துறையின் துவக்க நாளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அன்றுதான் சியென் சியே சன் தாய்நாட்டுக்கு திரும்பிய ஓராண்டு நிறைவு நாளாகும். சில பத்து ஆண்டுகளின் ஆராய்ச்சியில் முனைவர் சியென் சியே சன் பல பெருமைகளை பெற்றார். "அரசின் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்ற சிறப்பு விருது","உலகளவிலான அறிவியல் தொழில் நுட்ப மற்றும் பொறியியல் மனிதர்","அரசு நிலை தலை சிறந்த பங்கு ஆற்றிய அறிவியலாளர்","சீன விண்வெளித் துறையில் 50 ஆண்டுகாலத்திலான மிக உயர்ந்த கௌரவ விருது"போன்ற பெருமைகள் சியென் சியே சன்னணையே சாரும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040