• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
12 இணையப்பயன்பாட்டாளர்கள் தெரிவித்த கருத்துக்கள்
  2010-05-20 09:54:06  cri எழுத்தின் அளவு:  A A A   








விழுப்புரம் எஸ். பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

உலகப் பொருட்காட்சியில் மேற்கொள்ளப்படும் அனைத்துவித நடவடிக்கைகளையும் சீன வானொலியில் கேட்டு, ஓ...... இப்படியும் பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை அறிந்தேன். தெளிவாக திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் பொருட்காட்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன அரசு மற்றும் மக்களுக்கு எனது பாராட்டுக்கள். ஒவ்வொரு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வாரம் அல்லது நாட்கள் இப்பொருட்காட்சியில் சிறப்பிக்கப் படுவதையும் அறிந்தேன். அந்தந்த நாடுகளின் மற்றும் பிரதேசங்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் இவ்வழிமுறை, பிற பண்பாடுகளில் சீனாவின் காட்டும் மதிப்பை வெளிப்படுத்துகிறது.

பெருந்துறை பல்லவி கே.பரமசிவன் அனுப்பிய மின்னஞ்சல்

சாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெற்றுள்ள பதினெட்டு நாட்களில் அதிக பார்வையாளர்கள் மே-15ஆம் நாள் வருகை தந்துள்ளனர். ஒருநாளில் மட்டும் மூன்று இலட்சத்து முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உலக பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளதையும், ஒரேநாளில் நுழைவுச்சீட்டு விற்பனை எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியிருப்பதையும் சாதனையாகவே கருதுகிறேன். அதிகமான பார்வையாளர்கள் வருகின்றபோது சிறப்பு சுகாதார சேவைகளும் தன்னார்வ தொண்டர்களின் சேவைகளும் வழங்கப்படுவது பாராட்டுக்குரியது.

உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவிலுள்ள 56 தேசிய இனங்களை அடையாளப்படுத்தும் வகையில் அதே எண்ணிக்கையில் உத்திரங்களைக் பயன்படுத்தி சீன அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ள தகவலை அறிந்தேன். இதை கேட்டபோது, நாட்டின் பண்பாட்டிற்கும், கொள்கைகளுக்கும், சிறப்பியல்புகளுக்கும் சீன அரசு அளித்துவரும் முக்கியத்துவம் என்னை அசர வைத்தது. நகரமும், இணக்கமும் என்கிற அடிப்படையில் இந்திய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சிறப்பு சேர்க்கும் பண்டைய கால சுவடுகளான மொகஞ்சாதாரோ, ஹரப்பா முதல் இக்கால கட்டக்கலை அம்சங்களை மூங்கில்கள் மூலம் அரைக்கோள வடிவமாக செய்துவைத்துள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

பகலாயூர், விஜயமங்கலம் ப.ந.கோகிலா அனுப்பிய மின்னஞ்சல்

ஷாங்காய் உலக பொருள்காட்சி தொடர்பான நிழற்படங்களை சீன வானொலி இணையதளத்தின் மூலம் பார்த்து மகிழ்ந்தேன். உலக நாடுகளின் அரங்குகளை நேரில் பார்த்து இரசித்த உணர்வு என்னில் தோன்றியது. இப்பொருட்காட்சி மூலம் உலக நாடுகளின் இன்றைய வளர்ச்சிகளை அனைத்துலக மக்களுக்கு அறிவிக்க சீன அரசின் சிறப்பு ஏற்பாடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சீனாவும், உலக நாடுகளும் நட்புறவுகளை மேம்படுத்த இது பெரிய வாய்ப்பாக அமையும்.

வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

ரென்மின்பி மதிப்பு அதிகரிப்பு பற்றிய நிபுணர்களின் கருத்துக்கள் என்ற செய்தி விளக்கம் கேட்டேன். ரென்மின்பியின் மதிப்பை உயர்த்துவதன் மூலம், தனது நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை குறைக்கலாம் என அமெரிக்கா கருதுவது கேலிக் கூத்தாக உள்ளது. தென்னை மரத்தி்ல் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிக் கட்டிக்கொள்ளும் என்ற பழமொழி போல அமெரிக்காவின் இந்த எண்ணம் உள்ளது. ஏதோ ஒரு சாக்குபோக்கு கூறி, சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் மற்றொரு முயற்சியாகவோ அல்லது அமெரிக்காவில் சீனாவின் வர்த்தகத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவோ தான் இதைக் கருத வேண்டியுள்ளது. உள்நோக்கம் கொண்ட அமெரிக்காவின் இக்கோரிக்கைக்கு எப்போதுமே செவி சாய்க்க வேண்டாம் என சீன அரசை கேட்டுக் கொள்கின்றேன்.

நாகர்கோயில் பிரின்ஸ் இராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

வென்சுவான் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ள தகவல்களை சீனா வானொலி தமிழ் ஒலிபரப்பில் கேட்டேன். ஒருபுறம் துயரமாக இருந்தாலும், மறுபுறம் ஆறுதலாக இருந்தது. கிராமங்களிலும், நகரங்களிலும் புதிய வீடுகள், வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு, வேலையில்லாதோருக்கு காப்புறுதி நிதி வழங்கல் ஆகிய நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இயற்கை சீற்றத்தால் பொலிவிழந்த சிச்சுவான் மக்களின் குடியேற்றத்தால் களைக்கட்டுவதை கேட்கும்போது மனநிறைவு ஏற்பட்டது.

ஈரோடு சி. சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல்

சீன-இந்திய நட்புறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அற்புதமான பெய்ஜிங் எனும் நிழற்படக் கண்காட்சி இந்தியாவின் பெங்களூரு நகரில் துவங்கியதை செய்தி விளக்கத்தில் கேட்டேன். கடந்த ஆண்டு உலகப்பொருளாதாரமே வீழ்ச்சிகண்ட நிலையில் பெரிய வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் பொருளாதார மீட்சியடைந்து வளர்ச்சி கண்டது, உலகின் கவனத்தை ஈர்த்தது. சீனா பற்றிய இந்திய மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் இக்கண்காட்சி, இரு நாட்டு நட்புறவில் வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று கர்நாடக மாநில இந்திய-சீன நட்புறவுச் சங்க அதிகாரி கூறியதை அவருடைய கருத்தாக மட்டும் நான் பார்க்கவில்லை. இந்திய மக்களின் பொதுக் கருத்தாகவே பார்க்கின்றேன்.

முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

விழா எடுத்துக் கொண்டாடி மகிழும் அளவிற்கு இந்திய சீன நட்புவுறவு நெருக்கமாக மாறிவருகிறது. அண்மையில் இந்தியாவின் பெங்களூரு நகரில் இந்திய சீன தூதாண்மை நிறுவப்பட்ட அறுபதாவது ஆண்டு விழாவை கொண்டாடி பெருமை சேர்த்துள்ளனர். பல துறைகளில் சீனாவும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைக்கும் சூழலில் இவ்விழா கொண்டாட்டம் பெருமை சேர்ப்பதாகும். இது போன்ற பல கொண்டாட்ட நிகழ்வுகள் இந்தியாவிலும் சீனாவிலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

சிறுநாயகன்பட்டி கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்

இந்திய- சீனா தூதரக உறவு நிறுவப்பட்ட வைரவிழாவை முன்னிட்டு "அற்புதமான பெய்ஜிங்" எனும் நிழற்படக் கண்காட்சி பெங்களூருவில் துவங்கியதை அறிந்தேன் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இரு நாடுகளின் நட்புறவு மென்மேலும் வளரவே ஆசைப்படுகின்றேன். பெய்ஜிங் மாநகரை இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தி உறவுக்கு பாலம் அமைக்கும் நிகழ்வாக இந்த நிழற்பட கண்காட்சி அமையும்.

திருச்சி அண்ணாநகர் வி.டி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவும் அமெரிக்காவும் எரியாற்றல் துறை ஒத்துழைப்பில் ஒளிமயமான எதிர்காலத்தை கொண்டிருப்பது குறித்த தகவல்களை நமது வானொலியில் செவிமடுத்தேன் . புதிய எரியாற்றல் துறையில் பரந்தளவில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இரு நாட்டு அரசுகளும் பாடுபட முடிவு எடுத்துள்ளமை நல்லதொரு தீர்மானமாகும். இவ்வகை ஒத்துழைப்புகள் விரைவாக நடைமுறைக்கு வருவது நல்லது.

பரசலூர் பி.எஸ்.சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாடுகளின் உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரஸல்சில் நடைபெற்றமை, கிரேக்க நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த மூவாயிரம் கோடி டாலர் கடனுதவிக்கு அனுமதியளித்தது முதலிய செய்திகளை தெரிந்து கொண்டோம். இது பற்றிய தகவல்கள் வேறு எந்த வானொலியிலும் இடம்பெறாத நிலையில் சீன வானொலியில் மட்டுமே ஒலித்தது மகிழ்ச்சியளித்தது.

பொள்ளாச்சி தேவநல்லூர் சு.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்

சீன இசைநிகழ்ச்சியை செவிமடுத்தேன். செவிக்கினிய பாடல் இதமூட்டின. மொழி தெரியாவிட்டலும் பாடல்களுக்கு முன்னால் வழங்கப்படும் சிறப்பு விளக்கங்கள் மிகவும் உதவுகின்றன. காதல் பாடலை பாடி தனது காதலை ஏற்கும்படி காதலனிடம் வேண்டுவதை விளக்கிய அறிமுகம் அருமையாக இருந்தது. பாடல்களும் மனதுக்கு இனிமை தந்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040