• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய இணையத்தில் சில புதிய வசதிகள்
  2010-05-24 15:53:07  cri எழுத்தின் அளவு:  A A A   








செல்வம்.......கடந்த ஆண்டின் இறுதியில், சீன வானொலி தமிழ்ப்பிரிவு, தனது தமிழ் இணைய பக்கத்தின் வடிவத்தினை மாற்றியமைத்தது. புதிய இணையத்தள பக்கங்களில் சில தனிச்சிறப்புக்கள் இடம்பெற்றதை நான் கண்டேன். புதிய இணைய வடிவமைப்பு அறிமுகமானவுடன் பலப்பல நேயர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ஆனால், என்னைப் பொறுத்தவரை புதிய இணையத்தில் சில புதிய வசதிகள் இருந்தாலும், அதில் சில பிரச்னைகளும் எனக்கு தென்பட்டன. அவற்றை அவ்வப்போது நான் தமிழ்ப்பிரிவிற்கும் தெரிவித்து வந்தேன். அந்நிலையில், இது தொடர்பாக ஒரு கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியைப் பதிவு செய்யலாம் என தாங்கபுதிய இணையத்தள பக்கங்களில்  கோரியதால், இந்த நிகழ்ச்சியில் நான் மகிழ்ச்சியுடன் பங்கு கொள்கின்றேன்.
கலையரசி.......தமிழ் இணையத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின் புதிய வடிவத்தில் தமிழ் இணையதளம் நேயர் நண்பர்களுக்கு சேவை புரிந்து வருகின்றது. ஆனால் வழக்கமாக தமிழ் இணையபக்கங்களில் உலாவந்து தகவல்களைப் வாசிப்பதற்கு இந்த புதிய இணையதளம் கொண்டுள்ள வசதிகளை நேயர்கள் முழுமையாக கண்டறிய வில்லை. ஆகவே கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை வாய்ப்பாக பயன்படுத்தி புரியாத பகுதிகளைத் தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். எனவே தான் இந்நிகழ்ச்சியை உருவாக்க உங்களுக்கு அழைப்பு விடுத்தேன். என் அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இசைந்தமைக்கு மிக்க நன்றி.
.
செல்வம்......... கலை நீங்கள் சொல்வது சரிதான். அப்படியிருந்தால் வினாக்களை இப்போது முன்வைக்கலாமா?
கலையரசி.......தாராளமாக.
செல்வம்........முதலில் சீன வானொலி தமிழ்ப் பிரிவு புதிய வடிவத்தில் தனது இணையப் பக்கத்தை மாற்றியமைக்க வேண்டியதன் அடிப்படைக் காரணம் என்ன?
கலையரசி..........இது நல்ல கேள்வி. 2004ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 28ம் நாள் முதல் தமிழ் இணையதளம் துவக்கப்பட்டு பல்லூடக சேவைப் பணிகள் ஆரம்பித்தன. அப்போது முதல் இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் வரை இணையதளத்தில் சீர்திருத்தம் ஏதும் மேற்கொள்ளப்பட வில்லை. ஆனால் இணையத் துறை மேலும் பெரும் வளர்ச்சி அடைந்த காலத்தில் அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் வசதியில்லா இணையதளம் இணைய வானொலி வளர்ச்சிக்கு ஏற்றாதாக இருக்காது. ஆகவே மேலும் வசதியாக மேலும் எளிதாக இணையதளத்தைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் இணையதளத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

செல்வம்.........அடுத்து இணையதளத்தின் கட்டமைப்பு பற்றிய கேள்வி. பழைய வடிவத்தில் செய்திகள் மற்றும் வெளிநாட்டுச் செய்திகள் என இரு பகுதிகள் மட்டுமே இருந்தன. ஆனால், புதிய வடிவத்திலோ, சீனா, உலகம், இலக்கு நாடுகள் என மூன்று பகுதிகள் உள்ளன. இதன் மூலம், தேவையான செய்திகளை உடனுக்குடன் நேயர்களால் காண முடிகிறது. இதற்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வேளையில் இலக்கு நாடுகள் என்பதன் பொருளை நேயர்களுக்கு தாங்கள் விளக்கிக் கூறலாமா?
கலையரசி........இலக்கு நாடுகள் பற்றி குறிப்பிட்டால் தற்போது இதில் வெளியாகும் செய்திகள் முன்பு உலகச் செய்திப் பகுதியில் வெளியிடப்பட்டன. எனவே தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் பற்றிய செய்திகளைப் படிப்பது எளிதாக இருக்கவில்லை. ஆகவே உலகச் செய்திகளிலிருந்து தெக்காசிய நாடுகள் பற்றிய செய்திகளைப் பிரித்து சிறப்புப் பகுதி அதாவது இலக்கு நாடு என்ற பகுதியில் வெளியிட்டு நேயர்களுக்கு செய்திகளை தேர்வு செய்து வாசிக்க எளிதாக்குவதே இலக்கு நாடுகள் என்ற பகுதியை நிறுவுவதன் காரணமாகும்.

செல்வம்........ இப்படி பல சிறந்த வாகிக்க எளிதான அம்சங்கள் பல இருக்கும். அதே வேளையில் புதிய இணையத்தில் காணப்படும் சில பிரச்னைகளையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். பழைய இணையத்தில், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், புதிய இணையத்திலோ அவ்வாறான பகுதிகள் ஏதும் இல்லை. எடுத்துக்காட்டாக இசை நிகழ்ச்சி, நேயர் விருப்பம், விளையாட்டுச் செய்திகள் மற்றும் உங்கள் குரல் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் புதிய இணையத்தில் தனிப்பக்கங்களைக் காண முடியவில்லை. இந்த நிலையை மாற்ற முடியுமா?
கலையரசி.........முந்தைய வடிவம் இணையதள வடிவமைப்பாகும். இப்போது பயன்பாட்டில் உள்ள இணையதளம் இணைய வானொலி வடிவமாக அழைக்கப்படுகின்றது. இணையதளத்தில் உலாவந்து செய்திகளை எளிதாக வாசிக்க செல்வதே எமது இணையதள வடிவமைப்பின் நோக்கமாகும். ஆகவே புதிய வடிவத்தில் இயங்குகின்ற தமிழ் இணையதளம் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிக் கூறி நேயர்களுக்கு மேலும் கூடுதலான தகவல்களை அறிவிக்க வேண்டும்.

செல்வம்........ அடுத்து புதிய இணையத்தில், Web Radio என்னும் பிரிவில், சீனா இன்று, சீன மக்கள், பண்பாடு, மனம் மகிழ, பொது அறிவு என்ற பக்கங்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள தலைப்புக்களைச் சொடுக்கினால், உடனடியாக ஒலி வடிவில் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிகிறது. ஆனால், எந்த எந்த நிகழ்ச்சி இங்கே காணப்படுகிறது என்பதைக் கண்டறிவதில் குழப்பம் காணப்படுகிறது. இப்பக்கத்தில், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனி பக்கத்தை உருவாக்க வாய்ப்பு உண்டா?
கலையரசி.........இணைய வானொலி தமிழ் இணையதளத்தின் சீர்திருத்தத்தின் நோக்கமாகும். முன்பு திங்கள் முதல் ஞாயிற்று கிழமை வரையான முழுமையான அன்றாட நிகழ்ச்சிகள் இப்போதும் முதல் பக்கத்தின் கீழுள்ள வலது பகுதியில் உள்ளன. இடது பக்கத்தில் இணைய வானொலி புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான், சீனா இன்று, சீன மக்கள், பண்பாடு, பொது அறிவு என்ற பகுதிகளில் ஒவ்வொரு பகுதியிலும் சில நிகழ்ச்சிகள் சேர்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக சீன இன்று என்ற முதல் வரிசையில் செவ்வாய்க் கிழமையில் மக்கள் சீனம் நிகழ்ச்சி ஒலிபரப்பபடும். வியாழக் கிழமையில் சமூக வாழ்வு நிகழ்ச்சி வழங்கப்படும். சீன மக்கள் என்ற இரண்டாவது தலைப்பு சீன மக்களின் வாழ்க்கையைக் காட்டும் வானொலி பகுதியாகும். வியாழக் கிழமையில் சீன தேசிய இனம் நிகழ்ச்சியும், சீன மகளிர் நிகழ்ச்சியும் ஒலிபரப்பபடும். மூன்றாவது தலைப்பு பண்பாடு பற்றிய வானொலி வரிசையாகும். இதில் சீனாவின் பாரம்பரிய பண்பாட்டைக் காட்டும் இப்பகுதியில் புதன் கிழமை சீனக் கதை அல்லது சீன பண்பாடு நிகழ்ச்சி வழங்கப்படும். நான்காவது தலைப்பு மனம் மகிழ என்பதாகும். செவ்வாய்க் கிழமை சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி, புதன்கிழமை சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி, திங்கள் கிழமை விளையாட்டுச் செய்திகள் மற்றும் மலர்ச் சோலை நிகழ்ச்சி ஆகியவை ஒலிபரப்பப்படும். கடைசி தலைப்பு பொது அறிவு என்பதாகும். இப்பகுதியில் வெள்ளிக் கிழமை அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி ஆகியவை இடம் பெறும். நான் இந்த இணைய வானொலியில் ஒலிபரப்பபடும் நிகழ்ச்சிகள் பற்றிய இந்த விளக்கத்திற்கு பின் உங்களுக்கு நாள்தோறும் ணைய வானொலியில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்படும் முறை புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

செல்வம்.........செய்தி விளக்கம் நிகழ்ச்சியின் ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியாக ஒலி வடிவில் கேட்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற வசதி, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டால் நேயர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். அதாவது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனிப்பக்கங்களை உருவாக்கி, அதில் இடம் பெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனித்தனியாக கேட்கும் வசதியை உருவாக்கலாம் அல்லவா?

கலையரசி.........ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஒலி வடிவத்தில் வழங்கபட வேண்டும் என்பதை உங்கள் உரையாடலிருந்து உணர்ந்துள்ளேன். அடுத்த முறை சீர்திருத்தம் மேற்கொள்ளும் போது இதனை கருத்தில் கொள்வேம்.

செல்வம்..............இன்னுமொரு யோசனையையும் முன் வைக்க விரும்புகின்றேன். சில வேளைகளில் சில நிகழ்வுகளுக்கு இணையத்தில் தனித்தனி பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, கடந்த மார்ச் திங்களில் நடந்து முடிந்த 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆகியவை தொடர்பாக, நேயர்களின் கருத்துக்களை அறியும் வகையில் தனி இணையப் பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், கூட்டத் தொடர்கள் நடந்து முடிந்து இரு திங்கள் காலமான போதிலும், இணையப் பக்கத்தின் முதல் பக்கத்தில் இன்னும் தனிப்பக்கம் காணப்படுகின்றது. தமிழ்ப்பிரிவின் இணையத்தை முதன்முறையாக காண்பவர்களுக்கு இப்பக்கம் சற்றே குழப்பத்தை அளிக்கக் கூடும். இதுபோன்ற பக்கங்களை முதல் பக்கத்தில் வைக்காமல் உள்ளே இடம் பெற செய்யலாம் அல்லவா?
கலையரசி.............நீங்கள் கூறியதில் நாங்கள் உண்மையாக கவனம் செலுத்த வேண்டும். இணையதளத்தின் இயல்பான இயக்கத்தை செவ்வனே நிர்வகிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் இது தொடர்பான புதிய இணையபக்கத்தைத் துவக்குவது நேயர்கள் வாசிப்பதற்கு வசதி வழங்குவதன் அடிப்படையில் இருக்க செய்வோம். ஆனால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பின் இந்த இணையபக்கம் முன்பக்கம் தோன்றாமல் இருக்க செய்வோம். இது பற்றிய நிர்வாகத்தில் இனிமேல் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

செல்வம்.........புதிய இணையப் பக்கத்தில் நாட்குறிப்பு என்ற ஒரு பகுதி காணப்படுகின்றது. புதிய இணையம் அறிமுகப்படுத்தப் பட்ட போது, இப்பக்கத்தில், சீன வானொலிப் பணியாளர்களின் தனி அனுபவங்கள் இடம்பெறும் என கூறினீர்கள். ஆனால், இதுவரை தி.கலையரசியாகிய உங்களின் அனுபவம் மட்டுமே அதில் இடம்பெற்றுள்ளது. பிற பணியாளர்களின் அனுபவங்களையும் அப்பக்கத்தில் இடம்பெறச் செய்யலாம் அல்லவா?

கலையரசி...........நீங்கள் சொன்னது சரிதான். நான் உங்கள் உணர்வை ஏற்றுக் கொண்டுள்ளேன். பல முறை இணையதளத்தை இயக்குபவரான திலக்கவதியை நினைவூட்டினே. தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்று கோரினேன். ஆனால் நடைமுறை கண்காணிப்பு பயன் உள்ள முறையில் இருக்க வில்லை. வெளியிடும் திட்டம் வகுக்கப்பட்டாலும் இன்னும் மனநிறைவு தரும் பயன் பெற வில்லை. ஆகவே இனிமேல் கண்காணிப்பு நிர்வாகத்தை வலுப்படுத்த பாடுபடுவோம். குறிப்பாக இது பற்றி கலைமகளிடம் கலந்தாலோசனை செய்ய இருக்கின்றேன்.
.
செல்வம்........பொதுவாக, வானொலியைக் கேட்கும் நேயர்கள் அனைவரும் வானொலியில் பணிபுரிபவர்கள் யார் யார், அவர்களின் பின்னணி விபரங்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள். எனவே, தமிழ்ப் பிரிவுப் பணியாளர்களின் நிழற்படங்கள் மற்றும் அவர்களின் சொந்தக் குறிப்பு ஆகிய தகவல்களை உள்ளடக்கிய தனிப் பக்கத்தை உருவாக்கி, அதை இணையத்தின் முதல் பக்கத்தில் நிரந்தரமாக இடம்பெறச் செய்யும் வாய்ப்பு உண்டா?
கலையரசி..........இந்த கோரிக்கையை முன்வைக்காமல் நாங்கள் சுயவிருப்பத்தின் படி இந்த பக்கத்தை நிறுவ வேண்டும். இந்த பக்கத்தை உருவாக்கி தமிழ்ப் பிரிவில் பணிபுரிவோர் அனைவரின் பின்னணி பற்றியும் வெளியிடப்பட வேண்டும். இதில் இன்னல்கள் ஏதும் இல்லை. உங்கள் முன்மொழியை நடைமுறைப்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம்.

செல்வம்........தமிழ்ப்பிரிவின் இணையப் பக்கம் வழியாக, உலகப் பொருட்காட்சி, சீன இணையத் தளம், சீன திபெத், மக்கள் இணையத் தளம் மற்றும் சின்குவா இணையத் தளம் ஆகியவற்றின் இணையப் பக்கங்களுக்கு நேரடியாக செல்லும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் China Daily. Beijing Review, China Today, China Travel போன்ற இணையப் பக்கங்களுக்கும் நேரடி இணைப்பு வழங்க வேண்டும் என விரும்புகின்றேன். இந்த வசதியை வழங்க முடியுமா?
கலையரசி...........உங்கள் கோரிக்கை சிக்கலானதல்ல. என் சொந்த கருத்தில் இது பிரச்சினையில்லா கோரிக்கை. ஆனால் தொடர்புடைய நிர்வாகியை விசாரிக்க வேண்டும். முடிந்த அளவில் china Daliy, Beijing Review, China Today, ChinaTravel போன்ற இணையப் பக்கங்களை தமிழ் இணையதளத்துடன் இணைக்க முயற்சி செய்வோம். இதில் பிரச்சினையில்லை என்பது எனுடைய கருத்து.
.....................
செல்வம்........கடந்த ஏப்ரல் திங்கள் 23 ஆம் நாள் முதல், இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பண்பலை ஒலிபரப்பு தொடங்கியிருக்கிறது. அச்சேவையை தமிழக நேயர்களால் கேட்க இயலாது. அந்நிலையில், கொழும்பு பண்பலை ஒலிபரப்பின் ஒலிவடிவத்தினை நமது இணையத்தில் இடம் பெறச் செய்ய இயலுமா?
கலையரசி............இது பற்றி தொடர்புடைய நிர்வாக அலுவலகத்திடம் கேட்டோம். பதில் தொழில் நுட்பக் காரணமாக தற்காலிகமாக பண்பலை நிகழ்ச்சியை இணையபக்கத்துடன் இணைக்க முடியாது என்று பதிலளித்தனர். ஆகவே தயவு செய்து பொறுமையுடன் காத்திருங்கள்.

செல்வம்.............தமிழ்ப்பிரிவு பணியாளர்களின் பணிச்சுமை என்னவென்று எனக்குப் புரியும். சீன வானொலி தமிழ்ப் பிரிவு இணைய தளத்தை எத்தனை நேயர்கள் அன்றாடம் பார்வையிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால், தமிழ்ப் பிரிவுப் பணியாளர்களின் சரிபாதி உழைப்பு இணைய தளத்திற்காக செலவிடப்படுகிறது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பு அளிக்கும் வகையில், இணையத்தை நாள்தோறும் பார்வையிட்டு, தொடர்ந்து பல்வேறு கருத்துக்களைத் தமிழ்ப்பிரிவிற்கு அனுப்பிக் கொண்டு வருகின்றேன். அந்நிலையில், மதிப்பெண் அடிப்படையில், தமிழ்ப்பிரிவு இணையம், சீன வானொலியின் பல்வேறு மொழிப் பிரிவுகளில் எத்தனையாவது இடம் வகிக்கிறது என்பதை தெரிவிக்க முடியுமா?
கலையரசி............இணையதளத்தை மதிப்பிடுவதற்கு அது சொடுக்கப்பட்டு உலாவரப்படும் குறியீட்டைப் பார்க்க வேண்டும். ஆகவே குறிப்பிட்ட காலம் அதாவது முக்கிய நிகழ்வுகள் நிகழ்கின்ற போது இணையதளத்தில் உலாவந்து சொடுக்கும் விகிதம் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக அண்மையில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு வாழ்த்துக்களைக் குறுந்தகவல் வடிவத்தில் அனுப்புவது பற்றிய அலுவலைத் துவக்கிய பின் குறுந்தகவல் வடிவத்தில் நேயர்கள் தெரிவித்த வாழ்த்துக்கள் தமிழ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பின் தமிழ் இணையதளத்தைச் சொடுக்கும் குறியீடு மிகவும் அதிகரித்துள்ளது. இப்போது தமிழ் இணையதளம் சீன வானொலி நிலையத்தில் நடுத்தர நிலையில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். ஆகவே தலைசிறந்த நிலையில் தமிழ் இணையதளத்தை வளர்க்க நாங்கள் பாடுபடுவோம்.
செல்வம்..........இலங்கை பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைக் கையாள வேண்டிய பணி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு தகவல்களைச் சேகரிக்கும் பணி என நாள்தோறும் நீங்கள் அனைவரும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு வருவீர்கள் என்பதை நானறிவேன். பல்வேறு பணிகளுக்கிடையில் எந்தப் பணியாளரையும் தொந்திரவு செய்யக்கூடாது என தொலைபேசியில் கூட நான் யாரையும் அழைத்துப் பேசுவதில்லை. அந்த நிலையிலும் கூட, இணையம் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னிடம் தெரிவித்து இந்த நிகழ்ச்சியை உருவாக்க உதவிய தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றேன். இதன் மூலம், சீன வானொலி தமிழ்ப் பிரிவு இணைய தளச் சேவையின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு நேயரும் புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றேன்.
கலையரசி.......வாய்ப்பைக் கொண்டு தமிழ் இணையதளத்தின் வளர்ச்சி பற்றியும் இதன் செயல்பாடு பற்றியும் நடத்திய உரையாடல் நேயர்களுக்கு உதவுமானால் இந்நிகழ்ச்சியை உருவாக்கிய நோக்கம் நிறைவேற்றப்படும் என்று கருதுகின்றேன்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040