மின்னஞ்சல் பகுதியில் 10 நண்பர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி அவர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எது பற்றி அவர்கள் தெரிவிக்கின்றனர்?கீழ் கண்ட பகுதியிலுள்ள அவர்களின் கருத்துக்களைப் படியுங்கள்.
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீன-அமெரிக்க நெடுநோக்கு மற்றும் பொருளாதாரப் பேச்சுவார்த்தை என்ற செய்திவிளக்கம் கேட்டேன். தற்போது துவங்கியுள்ள இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை மாபெரும் வெற்றிபெறவும், இருதரப்பு உறவு மேலும் வலுப்பெறவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகின் மிகப் பெரும் வளரும் நாடான சீனாவும், உலகின் மிகப் பெரும் வளர்ந்த நாடான அமெரிக்காவும் உறவை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இருதரப்புக்களிடையே நிலவும் ஐயத்தையும் எதிர்மறையான எதிர்பார்ப்புக்களையும் நீக்க, தற்போதைய பேச்சுவார்தை பெரிதும் உதவும் என நம்புகின்றேன். சீன அரசுத் தலைவர் தொடக்கவுரை ஆற்றியுள்ளதாலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டிருப்பதாலும் இம்மாநாட்டின் இலக்கு நிறைவேற்றப்படும் என உறுதியாக நம்புகின்றேன்.
திருச்சி அண்ணாநகர்வீ.டி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
2வது சுற்று சீன-அமெரிக்க நெடுநோக்கு மற்றும் பொருளாதாரப் பேச்சுவார்த்தை குறித்த விரிவான விளக்கத்தை செய்திகளில் செவிமடுத்தேன். இரு நாடுகளும் பரந்தளவிலும் ஆழமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது வரும் காலங்களில் இருதரப்பிடையே நல்லுறவை மேம்படுத்தும். பிரதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிப்பதிலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை பேணிக்காப்பதிலும், மிகப் பெரிய வளரும் நாடான சீனாவும், மிகப் பெரிய வளர்ந்த நாடான அமெரிக்காவும், பொதுப் பொறுப்புகளை ஏற்க கடமைபட்டுள்ளன என்ற சீன அரசுத்தலைவரின் கூற்று மறுக்கமுடியாத உன்மையும் கூட.
மதுரை அண்ணாநகர் ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மங்களூரில் நிகழ்ந்த கோர விமான விபத்தில் பலர் உயிரிழந்தனர். சிலர் கடுமையாக காயமுற்றனர். இதையெட்டி சீன தலைமையமைச்சர் இந்திய தலையமைச்சருக்கு ஆழ்ந்த அனுதாப செய்தியை அனுப்பியதை அறிந்து கொண்டேன். துன்பத்தில் துணைநிற்கும் நண்பனை போன்று அண்டை நாடான இந்தியாவில் ஏற்பட்ட துயரத்திற்கு அனுதாபம் தெரிவித்தது சிறந்த நட்பின் அடையாளமாக உள்ளது.
உத்திரக்குடி.சு.கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சிறப்புக் கட்டுரையில் பிரேசில் அரங்கு பற்றி அறிவிக்கப்பட்டது. உலகப் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அரங்கும் உயரிய குறிக்கோள் ஒன்றை மையமாகக் கொண்டு சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. பிரேசில் அரங்கு சுறுசுறுப்பான நகரமான அமைப்புகளில் ஒன்றாக திகழ்வதையும், வளரும் நாடுகளில் ஒன்றாக, பிரேசிலும் இடம்பெற்று இருப்பதும் மேலதிக வாய்ப்புகளை கொண்டுவரும். நாள்தோறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி தகவல்கள் கேட்கும்போது அதனை காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்ற சிந்தனையே மேலோங்குகிறது.
சிறுநாயக்கன்பட்டி வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
21-ம் நூற்றாண்டில் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்களும சிறந்து விளங்குகிறார்கள். மகளிர் உச்சிமாநாடு பெய்ஜிங்கில் துவங்கியதை அறிந்தேன் ஒரு குடும்பம் சிறக்க பெண்களின் பங்களிப்பு எவ்வளவு அவசியமானதோ அதேவகையில் ஒரு நாடு அனைத்து துறைகளிலும் சிறந்த முன்னேற்றமடைய அவர்களின் பங்களிப்பு அவசியமே. இன்று அதிபர், தலைமையமைச்சர் பதவிகளைக்கூட பலநாடுகளில் பெண்கள் வகிக்கிறார்கள். 'பெண்கள் நாட்டின் கண்கள்' என்பதற்கு இணங்க மகளிரின் பங்களிப்பு மென்மேலும் இவ்வுலகத்திற்கு தேவைப்படுகின்றது.
மதுரை அண்ணாநகர் என்.ராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்
21ம் நூற்றாண்டில் உலக பொருளாதாரத்தின் முன்னனியில் பெண்கள் என்ற தலைப்பில் பெய்ஜிக்கில் உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் சீனாவின் அமைப்பு சாரா அமைப்பு சங்கமும், சீன மகளிர் முன்னேற்ற சங்கமும் பங்கேற்கின்றன. உலக சமுகங்களிலும், பொருளாதாரங்களிலும் மேலதிக வளர்ச்சி வாய்ப்புகளை மகளிர் பெறுவது பற்றி விவாதிக்கும் இம்மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள்.
நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங்
உலக மகளிர் உச்சி மாநாடு பற்றி சீனா வானொலி ஒலிபரப்பு மூலம் அறிந்தேன். மகளிருக்கு முன்னுரிமை வழங்குவதில் சீனா உலகிலேயே முதலிடம் வகிக்கிறதென கருதுகிறேன். மகளிர் 21-ஆம் நூற்றாண்டில் உலகின் தலைமை பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ளதை இந்த உச்சி மாநாடு பற்றிய செய்திகள் உறுதிபடுத்தின.
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
சிங்கியாங் தன்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சிக்காக சீன நடுவண் அரசு பலவித நல திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அப்பகுதி வளர்ச்சியடைந்து வருகிறது. அங்கு இயற்கையாக கிடைக்கும் மூல வளங்கள் அதிகமாக இருப்பதால், சீனாவின் முக்கிய நிறுவனங்கள் தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. சின்சியாங் மக்களின் முன்னேற்றத்தை குறிக்கோளாய் கொண்டு வறிய மக்களுக்கு வீடுகள், வாழ்க்கைத் தர உயர்வு, மக்களின் வருமான உயர்வு என ஆக்கப்பணிகளும் தொடர்கின்றன. சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தில் அக்கரை செலுத்தும் சீன அரசையும், சீன கம்னியூஸ்டு கட்சியையும் பாராட்டி மகிழ்கின்றேன்.
பொள்ளாச்சி தேவநல்லூர் சு.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
உங்கள் குரல் பகுதியில் கோவை மாவட்டம் தயரித்து அனுப்பிய நிகழ்ச்சி அதிக நேயர்களை கவரும் வகையில் இருந்தது. சில புதிய நேயர்களின் குரல்கள் இடம்பெற்றன. கோவை சீன வானொலி நேயர் மன்றம் இன்னும் அதிக புதிய நேயர்களை விரைவில் உருவாக்கும் என்று நம்புகின்றோம். எல்லா மாவட்ட நேயர் மன்றங்களும் பதிவு செய்யும் உங்கள்குரல் நிகழ்ச்சியில் புதிய நேயர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். உங்கள் குரல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு.
பகளாயூர் பி.எ.நாச்சிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்
இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் சீன விலைவாசி குறியீட்டில் சற்று உயர்வு காணப்படும் என்ற செய்தியை கேட்டேன். மக்களின் நுகர்வுப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தி, அவர்களது வாங்கும் சக்தியை வளர்க்க சீன அரசு அரும்பாடுபடுகிறது. பொருட்களின் விலைகள் அதிகளவு உயராமல் தடுத்து, எல்லா மக்களும் தாங்கள் வருமானத்தை அதிகரித்து வசதியான வாழ்க்கை வாழ்வதே சீன அரசின் நோக்கமாக உள்ளதை அறியமுடிகிறது.