• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக மகளிர் உச்சி மாநாடு பற்றி
  2010-06-01 16:25:19  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை......இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்.......கலை வணக்கம். உங்கள் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று இந்நிகழ்ச்சியில் பங்காற்ற விரும்புகின்றேன்.

கலை......வணக்கம் தமிழன்பன். உலக மகளிர் உச்சி மாநாடு பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை உருவாக்குவதற்கு உங்களது பங்களிப்பு தேவை. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டதில் நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழன்பன்.......சரி. 2010ம் ஆண்டு உலக மகளிர் உச்சி மாநாடு மே 20ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

கலை......ஆமாம் மகளிரைப் பொறுத்தவரை இது மாபெரும் நிகழ்வாகும்.

தமிழன்பன்....... எத்தனை நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்?

கலை......பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு அதிகமான சிறந்த மகளிர் பிரதிநிதிகள் பெய்ஜிங் வந்தடைந்து இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தமிழன்பன்.......அப்படியிருந்தால் நடப்பு மாநாட்டின் தலைப்பு என்ன?

கலை......21வது நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தின் முன்னணியில் இருக்கின்ற மகளிர் என்பது இம்மாநாட்டின் தலைப்பாகும்.

தமிழன்பன்.......இந்த தலைப்பைச் மையமாக கொண்டு சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணை தலைவரும் அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் தலைவருமான chen zhi li அம்மையார் இம்மாநாட்டில் எது பற்றி உரை நிகழ்த்தினார்?

கலை......நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது chen zhi li அம்மையாரின் குரலாகும். அவர் உரை நிகழ்த்துகையில் பெண்கள் மகத்தான மனிதவள ஆற்றல் வாய்ந்த மூலவளமாகும். சமூக பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் மனித நாகரிக முன்னேற்றத்தையும் தூண்டுவதில் முக்கிய சக்திகளில் ஒன்றாகும். சகாப்தம் வளர்வதுடன் பெண் தொழில் முனைவோர் பலர் பல தொழிகளில் இடைவிடாமல் உழைத்து அவர்களது சிறந்த திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அவர்களது நாட்டின் பொருளாதார கட்டுமானத்தில் அளவிட முடியாத பங்கை அவர்கள் கொண்டுள்ளனர்.

தமிழன்பன்....... chen zhi li அம்மையார் தெரிவித்த கருத்து நூற்றுக்கு நூறு சரியானது. உலக மகளிர் உச்சிமாநாடு அமைப்பு நிறுவப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளின் பெண் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களின் உயர் நிர்வாக தலைமைபீடத்திலுள்ள பெண்கள் நிர்வகிப்பதில் கொண்டுள்ள அனுபவங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்ட அமைப்பு உலக மகளிர் உச்சி மாநாடாகும்.

கலை......ஆமாம். நடப்பு உலக மகளிர் உச்சி மாநாடு பெண்களின் விவேகம் மற்றும் ஆற்றல் திரட்டப்படும் மாநாடாக அமைவதில் ஐயமேயில்லை.

தமிழன்பன்.......இந்த அரசு சாரா மாநாட்டில் தலைவர்கள் யாராவர் கலந்து கொண்டனரா?

கலை......ஆமாம். அவர்களில் ஸ்வீடன் துணை தலைமை அமைச்சர் Maud Olofsson வியட்நாம் துணை அரசுத் தலைவர் Nguyen Thi Doan, தான்சானிய அரசுத் தலைவரின் துணைவியார் Salma Kikwete ஆகியோரும் 40 அமைச்சர் நிலை அதிகாரிகள், வணிக மற்றும் பல்வேறு துறைகளின் சுமார் ஆயிரம் தலைசிறந்த பெண் பணியாளர்கள் என பல முக்கிய பெண்மணிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தமிழன்பன்.......கலந்து கொள்வோரின் கல்வியறிவைப் பார்த்தால் இந்த மாநாடு கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற மிக பிரமாண்டமான மாநாடாக அமைந்துள்ளதாக தெரிகின்றே.

கலை......இதில் ஐயமேயில்லை. மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் song xiu yan அம்மையார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040