தமிழன்பன்.......பேட்டியில் அவர் என்ன பேசினார்?
கலை...... பல நாடுகளின் பெண் அதிகாரிகள், பெண் அமைச்சர்கள், தலைசிறந்த பெண் தொழில் முனைவோர் என பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். தத்தமது நாட்டின் மகளிர் துறையின் வளர்ச்சி அனுபவங்களை அவர்கள் மாநாட்டில் அறிமுகப்படுத்தினர். ஆகவே அவர்களின் அனுபவங்கள் சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பங்கு ஆற்றுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று song xiu yan அம்மையார் கூறினார்.
தமிழன்பன்.......இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் இம்மாநாடு பற்றி எவ்வாறு மதிப்பிடுகின்றனர்?
கலை......அவர்களில் சிலரின் கருத்துக்களை கேளுங்கள்.
தமிழன்பன்.......சௌதி அரேபிய துணை கல்வி அமைச்சராக பணிபுரிகின்ற நூரா பஃயேஸ் அம்மையார் உலக மகளிர் மாநாடு பற்றி மதிப்பிடுக்கையில் இந்த மாநாடு மிகவும் முக்கியமாக கற்றுக் கொள்ளும் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பாக திகழ்கின்றது. இத்தகைய மாநாட்டில் நான் கலந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு சிலியில் நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது எனக்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது. இவ்வாண்டு சக பணியாளர்களுடன் இணைந்து நான் பெய்ஜிங் வந்தடைந்துள்ளேன். மற்ற நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வந்தவருடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு அனுபவங்களை பகிர்ந்து பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகின்றேன். இதன் மூலம் எதிர்காலத் திட்டத்தை வகுப்பது மிகவும் முக்கியமென கருதுகின்றேன்.
கலை......லுரா பஃயேஸ் அம்மையார் போல காரோலீனா அம்மையார் சிலி மகளிர் பணியத்துக்குப் பொறுப்பான அமைச்சராவார்.
மற்ற நாடுகளின் சக பணியாளர்களிடமிருந்து அதிகமாக கற்றுக் கொள்ள வல்ல அம்சங்கள் எங்களை பொறுத்தவரை மிக அதிகம். சீனாவில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் எங்கள் நாட்டில் இருப்பதை விட உயர்வானது. பெண்களின் உரிமையைப் பாதுகாப்பதில் நாங்கள் அனுபவங்களை ஒன்றுக்கொன்று பரிமாற்றி, கற்றுக் கொள்ள வேண்டும். சிலியில் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் பணிபுரியும் உரிமை உண்டு. குடும்பப் பொறுப்பை கூட்டாக ஏற்றுக்கொண்டு குழந்தைகளை வளர்ப்பதும் மிகவும் முக்கியம். இந்த உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கரோலீனா கூறினார்.
தமிழன்பன்.......ஆகவே அவர்களின் கருத்துக்களைக் கேட்ட பின் உலக மகளிர் உச்சி மாநாட்டுக்கு ஒத்துழைப்பைத் திரட்டும் வாய்ப்பாகவும் இது திகழ்கின்றது. மனித தொடர்பை வளர்த்து பன்னாட்டு அரசியல் துறை, வணிகத் துறை, தொழில் முனைவோர் ஆகியோருடன் பழகி பெண்கள் எதிர்காலத்தில் சமூக பொருளாதார வளர்ச்சியில் மேலும் செவ்வனே பங்கு ஆற்றுவதற்கு இந்த உச்சி மாநாடு மிக சிறந்த வாய்ப்பாகும்.
கலை......ஆகவே 21வது நூற்றாண்டில் பொருளாதாரத்துக்குத் தலைமை தாங்குபவர் யார்?பெண்கள் அவர்களே சமூகப் பொருளாதார வளர்ச்சியில் வாய்ப்பை மேலும் அதிகமாக வழங்குவதில் 20 ஆண்டுகளாக கவனம் செலுத்தி அக்கறை காட்டி வருகின்றனர்.
தமிழன்பன்.......சரி நண்பர்களே சமூக வாழ்க்கையில் பெண்கள் வெளிக்கொணர வேண்டிய பங்கில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.
கலை......நேயர் நண்பர்களே. இதுவரை உலக மகளிர் உச்சி மாநாடு பற்றிய சிறப்பு நிகழ்ச்சியைக் கேட்டீர்கள்.
தமிழன்பன்.......இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
கலை......அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
தமிழன்பன்.......வணக்கம் நேயர்களே.