• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர்களின் மின்னஞ்சல்கள்
  2010-06-03 11:02:22  cri எழுத்தின் அளவு:  A A A   








ஜுன் 2ம் நாள் வானொலியில் ஒலிபரப்பபட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் மின்னஞ்சல் பகுதியில் பல நேயர்கள் இந்திய அரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அம்மையாரின் சீன பயணத்துப் பாராட்டுக்களையும் மதிப்பையும் அளித்துள்ளனர். அவர்களின் கருத்துக்களைப் படித்து செவிமடுங்கள்.

மதுரை அண்ணாநகர் ஆர். அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்

சீன இந்திய துதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆண்டு நிறைவையெட்டி சீன துணை அரசுத் தலைவர் மற்றும் இந்திய அரசுத் தலைவர் பிரிதீபா பாட்டில் அம்மையாரும் பெய்ஜிய்கில் சந்தித்து உரையாடியதை அறிந்தேன். இரு நாடுகளும் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தி ஒத்துழைப்புகளை ஆழப்படுத்துவதை முன்னேற்ற இசைந்துள்ளனர். இந்திய சீன உறவுக்கு இவர்களின் சந்திப்பு முக்கிய அடிப்படையிடும்.

பெருந்துறை பல்லவி பரமசிவன் அனுப்பிய மின்னஞ்சல்

இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அம்மையாரின் சீனப் பயணத்தை சீன இந்திய நட்புறவுக்கு அடையாளமாக கருதுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய குடியரசுத் தலைவர் சீனப் பயணம் மேற்கொண்டிருப்பது இருநாட்டு நட்புறவின் வளர்ச்சிக்கு வலுசேர்ப்பது உறுதி. இப்பயணம் முழு வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

சென்னை சாரல் கண்ணா அனுப்பிய மின்னஞ்சல்

இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அம்மையாரின் சீனப் பயணத்தின்போது சீனத் தலைவர்கள் தெரிவித்தக் கருத்துக்களை வரவேற்கிறேன். சீன இந்திய உறவு மனித குலத்திற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது சரியானதே. ஆசிய நாடுகளைப் பொறுத்த மட்டில் இருபெரும் வல்லரசாக திகழும் இந்த இரு நாடுகளும் இருபத்தியோராம் நூற்றாண்டு குறித்த கண்ணோட்டத்தில் கவனம் செலுத்துவது ஆக்கபூர்வமானது.

முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

மே மாதத்தை சீனா இந்தியா நட்புறவு மாதம் என்றே குறிப்பிடலாம். இந்தியாவில் தோன்றி சீனாவில் சிறப்பாய் போற்றப்படும் பௌத்தமதத்தை உருவாக்கிய புத்தமகான் பிறந்தது சீன சந்திர நாள்காட்டி படி பொதுவாக மே மாதமே வருகிறது. அதோடு இந்திய சீன நாடுகளுக்கிடையே பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய தலைவர்களுள் ஒருவரான பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவுநாள் மே 27. இவ்வாண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அம்மையாரின் சீனப்பயணம் மே-26 ஆம் நாள் தொடங்கியது. சீன இந்திய உறவு நெருக்கமாவதற்கு வலிமை சேர்ந்துள்ள நிகழ்வுகளால், மே மாதத்தை சீன இந்திய நட்புறவு மாதம் என்பது பொருந்துகிறது. சிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டு, சீனாவில் இலவசப் பயணம் மேற்கொண்ட நான் சீன மண்ணில் கால்பதித்த மே31 ஆம் நாளை இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன்.

ஆரணி அபி அமிர்தவதி அனுப்பிய மின்னஞ்சல்

இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அம்மையாரின் சீனப் பயணத்திற்கு சீன வானொலியின் ஒலிபரப்பிலும் இணையதளத்திலும் முக்கிய இடம் அளித்தமைக்கு நன்றிகள். பசுமை நிறைந்த சீனப் பெருஞ்சுவரில் பிரதீபா பாட்டில் அம்மையார் இருக்கும் நிழற்படம் இருநாட்டு உறவின் அடையாளம் என்றே நான் கருதுகிறேன். வர்த்தகத் துறையில் நெருங்கிவரும் சீன இந்திய நாடுகளின் கூட்டாளி உறவு, உலக அளவில் தனிப்பெரும் சிறப்பில்பை நிலைநாட்ட இந்திய குடியரசுத் தலைவரின் சீனப்பயணம் உதவியாய் அமையும் என்று கருதுகிறேன்

சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்

இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபாபாட்டில் அம்மையாரின் சீனப்பப்பணம் இந்திய சீன நட்புறவு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சிறப்புமிக்கது. மனிதவளம் அதிகம் கொண்ட நாடுகளில் சீனாவும் இந்தியாவும் உலகிலேயே முன்னிலை பெறுகின்றன. சீனத் தலைவர்களும் இந்திய குடியரசுத் தலைவரும் நடத்திய சந்திப்புகள், இருநாட்டின் உறவு நெருக்கமாவதற்கு நம்பிக்கையையும், ஒளிமயமான புத்தொளியையும் ஊட்டியுள்ளது. இந்திய சீன தூதான்மை உறவு நிறுவப்பட்டதின் 60-வது ஆண்டு நிறைவு விழாவின் போது இந்திய குடியரசுத் தலைவரின் இப்பயணம் இந்திய சீன நட்புறவு மகுடத்தில் வைரம் பதித்த சிறப்பு போன்றதாகும்.

வளவனூர் புதுப்பாளைம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

12 விலங்குகளின் பெயரிலுள்ள சீன ஆண்டுகளில் பிறந்தவர்களின் குணநலன்கள் பற்றி சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சில வாரங்களாக தொடர்ந்து விளக்கப்படுகிறது. புலி, எலி, மாடு மற்றும் முயல் ஆண்டுகளில் பிறந்தவர்களின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும் என்ற தகவல்கள் கடந்த நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. இந்த 12 விலங்குகளில் 11 விலங்குகள் சமகாலத்தில் வாழுகின்றவை. யாரும் பார்த்திராக டிராகன் ஆண்டில் பிறந்தவர்களைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்திருந்தேன். இன்றைய நிகழ்ச்சி டிராகன் ஆண்டில் பிறந்தவர்களை பற்றி விளக்கியது. மேலும், உலகளவில் பெண் நண்பர்களிடம் பகிர்ந்து, கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திய பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாடு பற்றிய பல்வேறு சுவையான தகவல்களை ஒன்றுதிரட்டி வழங்கிய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.

திமிரி புலவர் ராமதாஸ் அனுப்பிய மின்னஞ்சல்

திபேத்தில் 255 குழந்தைக் காப்பகங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இதைபோல ஆதரவற்றவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் காப்பகங்கள் மற்றும் நலவாழ்விடங்கள் இருப்பதை அறிந்தேன். அழகும் அமைதியும் புனிதமும் பூத்துக்குலுங்கும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் அறப்பணிகளும் நிறைவாக நடைபெற்று வருவது புத்தமதம் வாழும் மண்ணில் தேவையான நலப்பணியாக கருதுகிறேன். 5000க்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகள் இருக்கும் திபேத் மண்ணில் சீன நடுவன் அரசின் உதவியோடு பல நலப்பணிகள் நிறைவேறி வருவது அவர்களது சமூக தகுநிலையை உயர்த்தும்.

நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவில் புகையிலை கட்டுப்பாடு சட்டம் உலக மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும். சட்ட துறை நிபுணர்களை சீன அரசு நியமித்து புகையிலையை கட்டுபடுத்த முயற்சிகளை தொடர இருப்பது பாராட்டத்தக்கது. மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி குழு ஜிம்பாவே,எகிப்து, சைபிரஸ்,கென்யா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை அறிந்தேன். நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் மட்டும் பாடுபடாமல் உலக மக்களின் ஒற்றுமைக்கும்,வளர்ச்சிக்கும் பாடுபடும் பண்பை இது காட்டுகிறது.

திருச்சி அண்ணாநகர் வீ.டி.இரவிசந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

உலக புகையிலை ஒழிப்பு நாளை முன்னிட்டு 2010 ஆம் ஆண்டு சீனாவின் புகைப்பிடிப்பு கட்டுப்பாட்டு அறிக்கை பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டதை செவிமடுத்தேன். புகைப்பிடித்தலை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான பணி. ஆனால் சீன சுகாதார வாரியங்கள் இப்பணியை முன்னெடுக்க, பொது இடங்களில் பன்முக புகைபிடிப்பு தடைவிதிகளை சட்டமாக்கி நனவாக்க முயற்சி மேற்கொள்வது சீனாவிற்கு சவாலான பணி. உலக நாடுகளுக்கும் இது சவாலாகவே தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040