ஜுன் திங்கள் 2ம் நாள் ஒலிபரப்பாகிய நேயர் நேரம் நிகழ்ச்சியின் கடித பகுதியில் பல நேயர்கள் வான் அஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கிறனர். அவர்களிடமிருந்து சிலரின் கருத்துக்களைத் தேர்வு செய்து தொகுத்து உருவாக்கிய இப்பகுதியை படியுங்கள்.
கலை அன்பான நேயர்களே! கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் நீங்கள் எங்களிடம் தெரிவித்த கருத்துக்களை அனைவருக்கும் அறிவிக்கும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களோடு கலையரசி தமிழன்பன்.
கலை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அனைத்துலக மக்களின் கவனத்தை ஈர்த்து, சிறப்பாக நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக நடைபெற்று வரும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற பொது அறிவுப் போட்டி நடைபெறுவதை நீங்கள் அறிவீர்கள். இதற்கான நான்கு கட்டுரைகள் இருமுறை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் ஒலிபரப்பாகிவிட்டன. ஒவ்வொரு கட்டுரையிலும் இரு கேள்விகள் இடம்பெற்றன. அந்த கேள்விக்கான விடைகளை ஜூலை 31 ஆம் நாளுக்குள் அனுப்பிவைத்து பரிசுகளையும், சிறப்பு நேயராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகளையும் பெற்று மகிழுங்கள்.
தமிழன்பன் நேயர்கள் நண்பர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்வதோடு, உங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுங்கள். அறிமுகமி்ல்லாதவர்கள் கூட, உங்கள் மூலம் தெரியவந்து பங்கெற்கும் வாய்ப்பை பலருக்கும் வழங்குங்கள். இன்றைய நிகழ்ச்சியில், முதலாவதாக நேயர்களின் கருத்துக் கடிதங்கள் இடம்பெறுகின்றன.
கடிதப்பகுதி
கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, ஆரணி சக்தியபாமா சீன இணையதள வளர்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நிகழ்ச்சிகளில் செவிமடுத்தேன். சீன மக்கள் இக்கால சமூக வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து வருவதை இது காட்டுகிறது. மேலும் இந்திய சீன தூதாண்மை உறவின் வைரவிழா நிறைவை முன்னிட்டு இந்தியாவின் சீனத் தூதரகத்தில் நடைபெற்ற பண்பாட்டு விழா, சீன இந்திய நல்லுறவின் அடையளமாக அமைகிறது. இத்தொடர்பு ஆல்போல் தழைத்தோங்க வாழ்த்துக்கள்.
தமிழன்பன் அடுத்தாக, உத்தமபாளையம் கே.சக்திவேல் என்கிற ஜான் அகஸ்டின் எழுதிய கடிதம். சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாநகரின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக நிகழ்ச்சிகளில் செவிமடுத்தேன். உலக நகரங்களுக்கு இணையாக வளர்ந்துவரும் பெய்ஜிங்கில் அதிக மக்கள் வாழ்வது வியப்பளிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற நகரங்களில் அதிக மக்கள் குடியேறுவதால் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி, வீட்டு விலைகளும் அதிகரிப்பதால், சாதாரண மக்கள் வாழுவதற்கு இன்னல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
கலை தொடர்வது, இலங்கை மட்டகளப்பிலிருந்து மு.நி.முகம்மட் நிப்ராஸ் அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட சிறப்பு அம்சத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். ஒலிபரப்பபப்டும் நிகழ்ச்சிகளில் பொது அறிவு சார்ந்த கற்றுக்கொள்ள தேவையான தகவல்கள் அதிகம் இடம்பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. முக்கிய குறிப்புகளை எடுத்து பாதுகாத்து வருகின்றேன்.
தமிழன்பன் இனி, ஈரோடு சி.சுந்தர் ராஜா செய்தி விளக்கம் பற்றி எழுதிய கடிதம். சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவின்போது கோயில் திருவிழா, விளக்கு திருவிழா, கண்காட்சிகள், குதுகலக் கூட்டங்கள் என பல கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறுவதை அறிந்தேன். விளக்கு திருவிழா என்றதும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா போன்றாதாக இருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. எனது எண்ணம் சரியாக இருந்தால் சீன விழாக்களுக்கும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கலாமென எண்ணுகிறேன்.
கலை அடுத்ததாக, வேதாரண்யம் தி.மணிகண்டன் நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.விஸ்வநாதனின் பேட்டி கேட்டேன். இந்த பல்கலைக்கழகத்தில் சீன இளைஞர்கள் படிப்பதையும் தமிழ் இளைஞர்களுக்கு சீன மொழிக் கற்பிக்கப் படுவதையும் அறிந்தேன். இந்திய சீன கல்வி பரிமாற்றம் வெற்றியடைந்து சீன மொழி இந்தியாவில் பரவிவருவதை நினைத்து பெருமையடைகிறேன்.
தமிழன்பன் அடுத்து இடம்பெறுவது, ஈரோடு விஜயமங்கலம் ச.பிரியங்கா காந்தி சீன தேசிய அரசியல் கலந்தாய்வு கூட்டத்தொடர்கள் பற்றி எழுதிய கடிதம். சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு கூட்டத் தொடரும் நடைபெற்றபோது சீன வானொலி நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற அனைத்து செய்திகள், செய்தி விளக்கங்களை கேட்டேன். மக்கள் மைய அரசாக சீனா விளங்குவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை அறியவந்தேன். மேலும் சீனாவின் டாங்கா ஓவியங்களின் கலை அம்சங்கள் என்னை மிகவும் கவந்துள்ளன.
கலை தொடர்வது, ஈரோடு எம்.சி்.பூபதி உலக மகளிர் நாள் கொண்டாட்டம் பற்றி எழுதிய கடிதம். உலக மகளிர் நாளை மன்னிட்டு சீன மக்கள் பேரவைக் கூட்டத்தில் சீன மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை குறித்து அறிந்தோம். தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் அதிக மகளிருக்கு எனது பாராட்டுக்கள். மேலும் கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பல வெற்றிகளை குவித்த சீன விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் சீனாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழன்பன் அடுத்து, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனாவின் வாகன ஏற்றுமதியில் சந்திக்கும் பிரச்சினைகளை இந்நிகழ்ச்சி விளக்கியது. சில நாடுகள் வாகன நுகர்வை குறைத்துள்ள நிலைமையில் மக்களின் தேவை, புதிய தொழில்நுட்பங்கள், புதிய வடிவமைப்புகள் என இக்காலத்திற்கேற்ப ஏற்றுமதி அணுகுமுறைகள் முன்னெடுக்கப்பட்டால் வாகன ஏற்றுமதித் துறையின் வளாச்சி அதிகரிக்கும் என்பதை இந்நிகழ்ச்சி தெளிவாக விளக்கியது.