• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடித பகுதியில் 10 நேயர் நண்பர்களின் கருத்துக்கள்
  2010-06-10 14:10:58  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுன் 9ம் நாள் ஒலிபரப்புக்கு வந்த நேயர் நேரம் நிகழ்ச்சியில் கடித பகுதியில் 10 நேயர் நண்பர்கள் பங்கு கொண்டுள்ளனர். அவர்களின் கருத்துக்களைக் கேளுங்கள்.

தமிழன்பன் நேயர் நண்பர்களின் பங்கேற்பை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியில் உங்களோடு
கலை கலையரசி
தமிழன்பன் தமிழன்பன்
கலை சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு பொன்னான நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகளை பற்றிய கருத்துக் கடிதங்களை எழுதிவரும் அனைத்து நேயர்களையும் பாராட்டுவதோடு, நன்றியும் தெரிவிக்கின்றோம்.
தமிழன்பன் நேயர்களின் தொடர் ஒத்துழைப்பால் கடிதங்களும், மின்னஞ்சல்களும் அதிகரித்து வருகின்றன. சீன வானொலியை எல்லாருக்கும் தெரிய செய்வதில் இன்னும் அதிகமாக திட்டமிட்டு செயல்பட கேட்டுக் கொள்கின்றோம்.

கலை இன்றைய கடிதப்பகுதியில் முதலாவதாக, இலங்கை காத்தான்குடியிலிருந்து எ.எப்.தாரிக் பஸீல் எழுதிய கடிதம். சீன வானொலி தமிழ் இணையதளத்தின் மூலம் நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறேன். சீன உணவுக் குறிப்புகளை பயன்படுத்தி சிலவேளை சமைத்தும் சுவைத்திருகின்றேன். சீன வானொலியில் தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்டு 47 வது ஆண்டு நிறைவையும் 48வது ஆண்டின் தொடக்கத்தையும் ஆகஸ்ட் முதல் நாள் கொண்டாட இருக்கிறீர்கள். பொன்விழா ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் சீனா வானொலி தமிழ்ப் பிரிவின் சேவைக்கு பாராட்டுக்கள்.
தமிழன்பன் அடுத்தாக, சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி திருச்சி எம்.தேவராஜா அனுப்பிய கடிதம். ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சீன அரங்கம் பற்றி கேட்டேன். 50 மீட்டர் உயர கோபுரம், 56 தேசிய இனங்களை நினைவூட்டும் உத்திரங்கள், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்ட முன்னேற்றங்கள், சீனாவில் நகரங்கள் உருவாகி வருவதன் முன்னேற்றப் போக்கு, குறைவான கரி வெளியேற்ற தொழில்நுட்பங்கள், மக்களின் இயல்பு வாழ்வு, சுத்தமான நீரின் அவசியம் ஆகிய அம்சங்களை வெளிப்படுத்துகின்ற சீன அரங்கின் செந்நிற தோற்றம் அனைவரையும் ஈர்க்கும் ஆற்றலுடையது.

கலை தொடர்வது, சீனப் மொழிப்பாடல் பற்றி எஸ்.கே.பாப்பான்பாளையம் பி.டி.சுரேஷ்குமார் எழுதிய கடிதம். தமிழில், "நீ வந்த நாள் பனிப்பொழிவு" என்று பொருள்படும் சீன மொழியில் துங் என்று தொடங்கும் பாடல் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றது. பனிப்பொழிவு என்றாலே மகிழ்ச்சியை குறிப்பதுபோல நீ எனது வாழ்வில் வந்த நாளும் பனிப்பொழிவு அடையாளப்படுத்தும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கியது. பொருள் பொதிந்த இப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
தமிழன்பன் இனி, முனுகபட்டு பி.கண்ணன்சேகர் சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். நான்சிங் இராணுவத்தில் பணியாற்றும் துப்பாக்கி சுடுவதில் வல்லவரான இராணுவ வீரரை இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. வானம், தரை மற்றம் நீரிலுள்ள எந்த இலக்கையும் குறிதவறாது சுடும் வல்லமை கொண்ட இவர் அத்திறமையை கொண்டு பல சான்றிதழ்கள் பெற்றிருப்பதில் வியப்பில்லை. இராணுவத்தில் சேருவதற்கு மன்னால் துப்பாக்கியயை கண்ணில் கண்டிராத இவ்வீரர், தனது அதாடர் பயிற்சியால் இந்நிலையை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. மனமொருமித்த பயிற்சியே வெற்றிக் கனியை எட்டும் ஒரே வழி.

கலை அடுத்து, மதுரை அண்ணாநகர் ஆர்,அமுதா ராணி சின்சியாங்கின் வளர்ச்சி கட்டுமானம் பற்றி எழுதிய கடிதம். இவ்வாண்டு நீர்சேமிப்பு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு எரியாற்றல், உயிரின வாழ்க்கை மேம்மபாடு உள்ளிட்ட 200 முக்கிய திட்டப்பணிகளை செய்ய ஒரு கோடியே 20 இலட்சம் யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடந்து வருவதை அறிந்தோம். இன்னும் அங்குள்ள கட்டுமான திட்டப் பணிகளை அதிகரிக்க போவது அப்பகுதியை விரைவான வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும்.
தமிழன்பன் அடுத்தாக இடம்பெறுவது, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி கருணிக்குளத்துப்பட்டி சொ.முருகன் அனுப்பிய கடிதம். சீனாவின் அனைத்துலக நண்பர்கள் தேர்வு பற்றிய தகவல்கள் இதில் இடம்பெற்றன. சீனாவுக்கு பல நாட்டினர் செய்த தன்னலமற்ற சேவைகளை இந்நிகழ்ச்சி அறிய தந்தது. அவர்களது சேவைகளை மறக்காத சீன மக்கள் பல ஆண்டகளுக்கு பின்னரும் அவர்களை சீனாவின் நண்பர்களாக தேர்ந்தெடுத்து மதிப்பளித்திருப்பது சிறப்பு.
கலை தொடர்ந்து, சென்னை தியாகராயநகர் என். இராஜேந்திரன் மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூங்கில் சுவடுகள், சுற்றுலா வளர்ச்சியால் அதிகரிக்கும் வருமானம், பூவை குறிக்கும் சீனச் சொல்லை பெயராக கொண்டவர்கள் என பல தகவல்கள் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றன. விறுவிறுப்பு ஊட்டி, பிறரை கவரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மலர்ச் சோலை.

தமிழன்பன் இனி, சீன மகளீர் நிகழ்ச்சி பற்றி மணச்சநல்லூர் ந.சண்முகம் அனுப்பிய கடிதம். அன்றாட வாழ்க்கையில் பாதி நேரத்தை இணையதளத்தில் செலவிட்டு, நவ நாகரீக உலகை அறிந்து கொள்ளும் லிசிங் பெண்மணி பற்றியதாக இந்நிகழ்ச்சி இருந்தது. இணையதளம் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு மகிழ்சியடையும் அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொண்டோம். இன்றைய உலகில் பிறரோடு தொடர்பு கொள்வதற்கு இணையதளம் ஆற்றும் பங்கையும் அறிந்து கொண்டோம்.
கலை அடுத்தாக, அறிவியல், கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி விழுப்புரம் எஸ்.சேகர் எழுதிய கடிதம். சீனாவின், வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் பலநாடுகளில் இருந்து பல்வேறு மொழிபேசுவோர் பயில்வதையும், அவர்கள் தலைசிறந்த வல்லுனுர்களாக வருவதையும் அறிந்தோம். எனவெ அப்பல்கலைக்கழகம் சிறந்ததாய் வளர்வது உறுதி. அறிவியல் உலகம் நிகழ்ச்சியில், பக்கவாதத்தால் ஏற்பட்ட செயலிழப்புகளை ஆல்பா புரோதம் மூலம் மீட்டெடுக்கும் வாய்ப்புள்ளது விளக்கப்பட்டது.
தமிழன்பன் தொடர்வது, வேலூர் இராமபாளையம் ஆர்.கேசவன் மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 2010 ஆம் ஆண்டு பணி ஆவணம் பற்றி விளக்கப்பட்டது. ஏழை மக்களின் நலனை மேம்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றிருப்பது அம்மக்களின் வாழ்வில் வசந்தம் வீச செய்யும். சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் பழைமையான கான்காஷ் நகர், அங்குள்ள முசுக்கொட்டை மரம் பற்றி தகவல்கள் அருமை.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040