• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் பகுதியில் 12 இணையப்பயன்பாட்டாளர்களின் கருத்துக்கள்
  2010-06-10 14:13:18  cri எழுத்தின் அளவு:  A A A   








ஜுன் 9ம் நாள் இடம் பெறும் நேயர் நேரம் நிகழ்ச்சியின் மின்னஞ்சல் பகுதியில் 12 இணையப்பயன்பாட்டாளர்களின் கருத்துக்களை படியுங்கள்.
சிறுநாயக்கன் பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி என்ற செய்தி விளக்கத்தை கேட்டேன். சீன அரசு எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான நலமான சுற்றுச்சூழலை வழங்க, மாசுப் பொருட்களின் தோற்றுவாய்களை பெருமளவில் குறைக்கும் முயற்சிகளை மேற்க்கொண்டு வருவதை அறிந்தேன். சீனாவின் மாசு கட்டுப்பாட்டு திட்டம் நல்லமுன்னேற்றமடைய எனது வாழ்த்துக்கள்.

நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
உலகப் பொருட்காட்சியை கரி குறைந்த ஒன்றாக நடத்த சீனா மேற்கொண்ட முயற்சிகளை சீன வானொலி செய்திகளில் அறிந்தேன். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கடந்த ஒரு மாதத்தில் 12 இலட்சம் கிலோவாட் சூரிய மின்னாற்றலை பயன்படுத்தி 12-ஆயிரத்து 700 - டன் கரியமிலவாயு வெளியேற்றம் குறைந்துள்ளது. பிற நாடுகளில் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகளில் அதிக கரி வெளியேற்றம் தான் இருப்பதை காண முடியும். ஆனால் சீனா விதிவிலக்காக சாதித்துள்ளது என்னலாம்.
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீனத் தலைமை அமைச்சரின் நான்கு ஆசிய நாடுகளிலான பயணம் என்ற கட்டுரையைக் கேட்டேன். தென் கொரியா, ஜப்பான், மங்கோலியா, மியன்மார் ஆகிய நாடுகளில் சீனத் தலைமை அமைச்சர் மேற்கொண்ட பயணம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு எனது பாராட்டுக்கள். முப்பதுக்கும் அதிகமான உடன்படிக்கைகள் இப்பயணத்தின்போது உருவாக்கப்பட்டன என்பதிலிருந்து, அதன் சாதனையை புரிந்து கொள்ளலாம். அரசியல் நம்பிக்கையை வளர்ப்பதே இப்பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், அண்டை நாடுகளுடன் இருந்த நட்புறவை இப்பயணம் மேலும் அதிகமாக்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் சீனத் தலைமை அமைச்சர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம், மாபெறும் சாதனைகளை உருவாக்கிவிட்டது.

மீனாட்சிபாளையம் கா. அருண் அனுப்பிய மின்னஞ்சல்
இந்திய குடியரசுதலைவரின் சீனப்பயணம் இருநாடுகளிடை நெருக்கத்தை அதிகபடுத்தும் எனக் கருதுகிறேன். நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இருநாடுகளும் தெரிவித்துள்ளன. இது போன்ற உயர்நிலை பரிமாற்றங்களை அடிக்கடி நிகழ்வதை எதிர்பார்க்கின்றேன். இந்திய வங்கமொழிக்கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் சிலை ஷாங்காய் நகரில் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது.
உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
சீனத் தேசிய இனக் குடும்பம் பகுதியில் தகவல் மயமாகி வரும் காலத்தில் திபெத் மொழியின் புதிய தோற்றம் பற்றி தொகுப்பு இடம்பெற்றது. உன் நண்பனை சொல், நான் உன்னைப் பற்றி கூறுகின்றேன் என்பதை போல ஒரு நாட்டில் மொழி வளர்ச்சி சிறந்திருந்தால், அந்நாட்டின் பல்துறை வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதைபோல வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், செல்லிடபேசியில் குறுந்தகவல் மற்றும் இணைய தளம் பல்வேறு வகையில் வளர்ந்துள்ள திபெத் மொழி, சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சியை காட்டுகின்றது.

பரசலூர் பி.எஸ். சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கங்களிலுள்ள பாதுகாப்பு முறைமைகளை, தொழில்நுட்ப மேம்பாடுகளை செயல்படுத்தவுள்ள சீன நிலக்கரி சுரங்க வாரியத்தின் முயற்சியை செய்திகளில் அறியவந்தேன். சான்சி மாநிலத்தில் சாங்ச்சி நகரின் சாங் கிராமத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்துகளால் ஏற்படும் உயிழப்புகளை குறைப்பதில் இது சிறந்த பங்காற்றும்.
விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
சீன இசை நிகழ்ச்சியில் யுன்னான் மாநிலத்தில் வசிக்கும் சிறுபான்மை தேசிய இன மக்களின் பாடல்கள் ஒலித்தன. பாடலின் முன்னிசையும் பாடல் வரிகளில் இடம்பெற்ற இசையும் புல்லாங்குழல் இசை போன்றே இருந்தது. பாடலுடன் இணைத்து ஒலித்த இந்த இசை மிகவும் இனிமை. மொழி தெரியாதபோதும் இசை இனித்தது. மேலும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அரங்குகளை அந்தந்த நாட்டின் பண்பாட்டை அறிமுகப்படுத்துவதை சிறப்பம்சங்களோடு வருவது பயனுள்ள முயற்சி.


திருச்சி - 8 க.செந்தில் குமார் அனுப்பிய மின்னஞ்சல்
பிரிட்டன் தலைமையமைச்சரின் ஐரோப்பிய நாடுகளில் பயணம் பற்றிய செய்திவிளக்கத்தை செவிமடுத்தேன். பதவியேறற் பின், முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டுள்ளார். இது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கோடு மட்டுமல்லாமல் பல்துறை வளர்ச்சிக்கும் பயன்தரும் பயணமாக அமையும் என்று நினைக்கிறேன்.

திருச்சி துப்பாக்கிதொழிற்சாலை எம்.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
ஆசிய ஊடகங்களின் உச்சி மாநாடு பற்றிய செய்திவிளக்கம் செவிமடுத்தேன். சீன ஊடகவியலாளர்கள் அனைத்துலக ஊடகவியலாளருடன் கொண்டிருக்கும் உறவுகள் மேம்பட வழிவகுப்பதோடு, உலகளவில் பல மாநாடுகளை நடத்தி சிறப்பிக்கும் வலிமையை சீனா பெற்றிருப்பதையும் இது காட்டுகிறது.
பேளுக்குறிச்சி க.செந்தில் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலி தமிழ் இணையத்தளப் பக்கங்களில் உலா வந்தேன். அதில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய நிழற்படங்கள் பல என்னை கவர்ந்தன. வண்ணமிகு ஷாங்காய் உலகப்பொருட்காட்யின் பொலிவுமிக்க தோற்றத்தை ஒவ்வொரு படங்களும் எமக்கு காட்டுகின்றன. அப்பகுதியில் "முதியவரும் யானையும்" என்ற தலைப்பில் யானையின் தந்தத்தில் அமர்ந்திருக்கும் முதயவரின் நிழற்படம் என்னை மிகவும் கவர்ந்தது.
மதுரை அண்ணாநகர் இராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்
இராட்சத பாண்டாவின் இயற்கையான வாழ்க்கை முறை ஆய்வகம் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் தொடங்கியுள்ளதை அறிந்தேன். பாண்டாக்களை இயற்கையான வாழ்க்கைக்கு திரும்பச் செய்வது பற்றிய ஆராய்ச்சி தொடரவுள்ளது. தற்போது மனித கண்காணிப்பில் வளர்க்கப்படும் நாற்பது அல்லது ஜம்பது பாண்டாக்களையும் படிப்படியாக இயற்கையாக வாழ ஆய்வை தொடர்வது உயிரின பாதுகாப்பில் சீன அரசின் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040