• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடிதங்கள் - ஜூலை 7ம் நாள்
  2010-07-08 17:20:16  cri எழுத்தின் அளவு:  A A A   








நேயர் நேரம் நிகவ்ச்சியின் கடிதப் பகுதியில் மொத்தம் 9 நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களை பாருங்கள்.

கலை அன்பான நேயர்களே! இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களது கருத்துக் கடிதங்களை தொகுத்து வழங்குவதில் கலையரசியாகிய நானும், தமிழன்பனும் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழன்பன் அன்பர்களே! உலகப் பொருட்காட்சிக்கு வாழ்த்துக்கள் என்ற சீன மொழி பரவல் நடவடிக்கை ஜூன் 25 ஆம் நாளும், சிச்சுவான் எதிர்பார்ப்புக்குரிய இடம் என்ற பொது அறிவுப் போட்டி ஜூலை முதல் நாளும் நிறைவு பெற்றுவிட்டன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற பொது அறிவுப்போட்டி ஜூலை 31 ஆம் நாள் வரை நடைபெறும் என்பதை நினைவூட்டிக் கொள்கின்றோம்.

கலை நடந்து முடிந்த போட்டிகளில் அதிகமானோரை பங்கெடுக்க செய்ய இன்னல்களை பாராது உழைத்த நேயர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். முடிவதற்கு 24 நாட்களே உள்ள ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற பொது அறிவுப் போட்டியில் இன்னும் பலரை பங்கெடுக்க தூண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக கடிதப் பகுதி.

கலை சென்னை பி.குமரேசன் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற பொது அறிவுப் போட்டியின் நான்காவது கட்டுரைப் பற்றி அனுப்பிய கடிதம். இக்கட்டுரையில் இந்திய அரங்கு பற்றிய தகவல்களை கேட்டேன். அதன் முகப்பு தோற்றம் தாஜ்மகாலை போன்று வடிவமைக்கப் பட்டிருப்பதை அறிந்தேன். நகரமும் இணக்கமும் என்ற மையக் கருத்தில் இந்தியாவின் பண்பாடு உள்பட அனைத்து தகவல்களையும் உலகிற்கு அறிவிக்கும் சிறப்பான அரங்காக இது உருவாகியுளள்தை அறிந்து மிகழ்ச்சி கொண்டேன்.

தமிழன்பன் அடுத்தாக, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய திண்டுக்கல் வேலுச்சாமியின் கேள்விக்கு பதிலாக இந்நிகழ்ச்சி அமைந்தது. 1956 ஆம் ஆண்டில் சீனா விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நிறுவியது முதல் இன்று வரையான விண்வெளி நுட்பங்களில் ஆய்வுகள் மற்றும் பயணங்கள் என அனைத்து தகவல்களும் இதில் இடம்பெற்றன. வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வரும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையை அறிந்து மகிழ்ந்தோம்.

கலை தொடர்வது, ஆரணி பாலகவி.வீரா.வினாயகம் சீன வானொலியை பற்றி எழுதி அனுப்பிய கவிதை ஒன்று. அவர் எழுதிய காற்றில் மிதந்த கவிதைகள் என்ற சிறு கவிதை புத்தகத்தை எமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் சீன வானொலி அதன் நிகழ்ச்சிகள் பற்றி பல கவிதைகள் இடம்பெறுகின்றன. அதில் ஒன்றை இங்கு வாசிக்கின்றோம்.

சீன வானொலி – தமிழ் சிந்தும் வானொலி!

வான ஊர்தியாய் – தமிழ் வழங்கும் வானொலி!

தேனாம் செய்திகள் – தமிழ் சொட்டும் வானொலி!

ஊனாம் உணர்வுகள் – தமிழ் ஒலிக்கும் வானொலி

என்று எழுதியுள்ளார்.

தமிழன்பன் இனி, இலங்கை மட்டகளப்பு கல்லடியிலிருந்து கனகராஜா ஷேஸ்மிரன் எழுதிய கடிதம். எனது அண்ணா சீன வானொலி நேயராக நிகழ்ச்சிகளை கேட்க தொடங்கினார். அவரை பின்பற்றி சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை நானும் கேட்க தொடங்கினேன். தற்போது அதனால் ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளேன். பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் உலகத் தமிழர்களை சென்றடையும் சீன வானொலியின் தமிழ்ப்பிரிவின் சேவைக்கு எனது பாராட்டுக்கள்.

கலை அடுத்தாக, திருச்சி தேவராஜா சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். பிரிட்டனில் சீன மொழி கற்பிக்கும் ஆசிரியை லீ வென் சின் அம்மையார் பற்றியதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. பிரிட்டன் சீன நகரங்களுக்கிடை புரிந்துணர்வு உடன்பாட்டின் படி, அவர் பிரிட்டனுக்கு சென்று சீன மொழியை கற்பிப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியளித்தது. மாணவர்களை கவரும் வகையில் நடனம், தாள் கத்தரிப்பு, கையெழுத்து பயிற்சி, விழா அறிமுகம் என பல வடிவங்களில் அவர் இப்பணியை மேற்கொள்வதை பாராட்ட வேண்டும்.

தமிழன்பன் தொடர்வது, திபெத்திய மருந்து பயன்பாடுகள் பற்றி ஈரோடு எம். சி். பூபதி எழுதிய கடிதம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் வருகின்ற 95 விழுக்காடு மக்களின் நோய்களை திபெத்திய மருத்துகளை பயன்படுத்தி அளிக்கப்படும் சிக்கிச்சைகளால் குணமாக்கிவிடலாம் என்பதை அறிய தந்தீர்கள். பண்டைய காலம் முதலே திபெத்திய மருந்துகள் மக்களின் நலவாழ்வில் ஆற்றிவரும் பங்கு மகத்தானது என்பதை அறிந்தோம்.

கலை இனி, வந்தவாசி பி.அழகம்மாள் அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் புகைப்பிடிப்பதால், அப்பழக்கம் உடையோருக்கு மட்டுமல்ல, அவருடன் நெருங்கி வாழ்வோருக்கும், அடுத்தவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி அனைவருக்கும் பாதிப்புகளை வழங்கும் புகைபிடிப்பதை முற்றிலும் ஒழிப்பது மனித குலத்திற்கு மிகவும் நல்லது. ஆக்கபூர்வ செயல்பாடுகளை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும்.

தமிழன்பன் அடுத்தாக, இலங்கை வடக்கு காத்தான்குடியிலிருந்து எ.எம்.எ.முனா அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை பல ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். இதில் இடம்பெறும் சமையல் குறிப்புகள் மற்றும் விளையாட்டுச் செய்திகள் என்னை மிகவும் கவர்கின்றன. குறிப்பாக சீன சமையல் குறிப்புகளில் பலவற்றை சமைத்து சுவைத்து மகிழ்ந்துள்ளேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040