• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் பகுதி  - ஜூலை 7ம் நாள்
  2010-07-08 17:20:29  cri எழுத்தின் அளவு:  A A A   








மின்னஞ்சல் பகுதி

இந்த பகுதியில் 14 பேர் மின்னஞ்சல் வாய்லாக நிகழ்ச்சிகளைக் கேட்ட பின்னர் ஏற்பட்ட கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கேட்டு ரசியுங்கள்.

வளவனூர் புதுபாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவரின் உரை என்ற கட்டுரையை செய்தி விளக்கத்தில் கேட்டேன். ஒன்றிணைந்து செயல்பட்டு எதிர்காலத்தை கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பில், சீன அரசுத் தலைவர் நிகழ்த்திய உரை, உலக நலன் மீது சீனா கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது. தற்போதைய உலகப் பொருளாதாரம் பற்றியும், 20 நாடுகள் குழு அமைப்பின் வளர்ச்சி மீதான எதிர்பார்ப்பையும் அவர் சிறப்பான முறையில் எடுத்துக் கூறினார். மேலும், இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களின் சிறப்புத் தூதர் சிவசங்கர் மேனன் அவர்கள் சீனாவில் மேற்கொண்ட பயணம் பற்றிய விரிவான தகவல்களை செய்திகளில் அறிந்தேன். இந்திய அரசியலில் நெடுங்காலம் சிறந்த முறையில் பணியாற்றிய மேனன் அவர்களின் சீனப் பயணம் மூலம் இருதரப்பு நல்லுறவு மேலும் வலுப்பெறுவதை விரும்புகின்றேன்.

முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

சீன-இந்திய சிந்தனை உச்சிமாநாடு சீனாவின் குவாங்சோ நகரில் துவங்கியது அறிந்தேன். கல்வியியல், செய்தி ஊடகம், மதம் முதலிய துறைகளைச் சேர்ந்த இரு நாடுகளின் முக்கிய‌ பிரமுகர்கள் இரு நாட்டு மக்களுக்கிடை பரிமாற்றத்தை வலுப்படுத்தி வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. சீன இந்திய உறவு பழமை வாய்ந்த வரலாற்று பக்கங்களை கொண்ட புத்தகமாகும். சீன-இந்தியத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த உச்சி மாநாட்டை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்.

விழுப்புரம், எஸ். பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் ஜப்பான் அரங்கு பற்றிய தகவல்களை கேட்டேன். அது நேற்று, இன்று, நாளை என்று மூன்று பிரிவாக அமைக்கப்பட்டிருப்பதும், இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று வகைப்படுத்தி இருப்பதை சீன வானொலி சிறப்பித்துக் கூறியது அருமை. ஜப்பானின் கடந்த காலம், கடந்து கொண்டிருக்கும் காலம், கடக்கப் போகும் காலம் எப்படி அமையும் என்பதை இன்றைய சிறப்பு நிகழ்ச்சி எடுத்துக் கூறியது.

புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

ஜூலை திங்கள் முதல் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 89 ஆண்டு நிறைவை செய்தி விளக்கத்தில் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இதர கட்சிகளுடனான பரிமாற்றங்கள், சீர்கேடுகள் எதிர்ப்பு, தொடர்கின்ற வளர்ச்சி ஆகியவற்றால் சீன கம்யுனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது என்றால் மிகையன்று.

திண்டுக்கல் கே.வேலுச்சாமி அனுப்பிய மினன்ஞ்சல்

ஷாங்காய் மாநகரில் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு இதுவரை சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிந்து சாதனை படைத்துள்ளனர். மேலும் ஒரே நாளில் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேரின் வருகையால் ஒரு நாள் பார்வையாளர்களில் புதிய சாதனை பெற்றிருப்பது ஷாங்காய் பொருட்காட்சிக்கு பெருமை சேர்க்கும் அற்புதமான நிகழ்வாகும். சோதனையே சாதனையாக மாற்றக்கூடிய வல்லமை என்றுமே சீனாவிற்கு உன்டு என்பதன் எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று.

திருநெல்வேலி எஸ்.மகாலிங்கம் அனுப்பிய மின்னஞ்சல்

கடந்த சில வாரங்களாக, திங்கட்கிழமைகளில் ஒலிபாப்பாகும் நட்புப்பாலம் நிகழ்ச்சியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் பேட்டியை தொடர்ந்து கேட்டு வருகிறேன். சீனாவில் மேற்கொண்ட சுற்றுப் பயணம் பற்றியும், கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை கொள்கைகள் பற்றியும் எல்லா கேள்விகளுக்கும் சிறந்த முறையில் அவர் பதிலளித்தார். அவருடைய பேச்சு தெளிந்த நீரோடைபோல அமைந்து, கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சீனப் பயணம் மேற்கொண்ட அவரை உரிய நேரத்தில் அணுகி, பேட்டி கண்டதற்கு பாராட்டுக்கள்.

நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

எதிர்பாராத சம்பவங்களை சமாளிப்பதில் சீன அரசின் முயற்சியை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் கேட்டேன். மனித குலம் எதிர்பாராமல் திடீரென சந்திக்கும் இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்துலக அளவில் கூட்டாக செயல்பட சீனா முன்வைக்கும் கருத்துக்கள் சிறப்பானவை. இதற்காக உலக நாடுகளுடன் புரிந்துணர்வு கொள்கையை சீனா எப்போதும் விரிவுபடுத்துவது ஆக்கபூர்வமானது.

மதுரை 20 ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்

பெய்ஜிங்கில் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு அனைத்துலக முன்னெச்சரிக்கை நிர்வாக கலந்துரையாடல் கூட்டத்தை பற்றிய தகவல்களை கேட்டேன். இத்துறையில் அனைத்துலக ஒத்துழைப்பையும், தொடர்பையும் மேலும் மேம்படுத்தி பலவகை எதிர்பாராத சம்பவங்களை கூட்டாக சமாளிப்பதன் முக்கியத்துவத்தை இக்கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

பழனி பகத்சிங் அனுப்பிய மின்னஞ்சல்

சீனக்கதை நிகழ்ச்சி கேட்டேன். எனது குடும்பத்தார் அனைவருக்கும் குறிப்பாக எனது குழந்தைக்குக் கூட மிகவும் பிடித்த நிகழ்ச்சி இதுதான். என் குழந்தையைக்கூட கவரும் வகையில் கதைகளை அருமையாக வழங்கி வருகிறீர்கள். பயனுள்ள நிகழ்ச்சியை வழங்கிய சீன வானொலிக்கு நன்றிகள் பல.

கோவை மோப்பேரிப்பாளையம் பி.தங்கராஜ் அனுப்பிய மின்னஞ்சல்

செய்திவிளக்கம் செவிமடுத்தேன். கிர்கிஸ்தான் நிலமையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் கவனம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. கிர்கிஸ்தானின் தற்போதைய நிலமை கவலையளிப்பதாகவே தொடர்கிறது. அமெரிக்கா மற்றும் ரஷியாவின் தலையீடு காரணமாக நிலமை சுமூகமடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

திருச்சி துப்பாக்கிதொழிற்சாலை எம்.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலையரசி அவர்கள் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டதையும், மாநாடு குறித்த அவரது செய்தியும் கேட்டதும் சீனவானொலி தமிழ்ப் பிரிவின் வளர்ச்சி கண்டு வியக்கின்றேன். இம்மாநாட்டில் கலையரசி அவர்களின் உரையாடலால் நமது வானொலியின் புகழ் மேலும் வளரும்.

சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவில் விலங்குகளின் பெயரால் குறிப்பிடப்படும் ஒவ்வோர் ஆண்டின் பலன்களை சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் கேட்டு வருகின்றோம். இன்றைய நிகழ்ச்சியில் ஆடு ஆண்டில் பிறந்தோர் எத்தகைய குணநலன்களை பெற்றிருப்பர் என்பது பற்றி விளக்கப்பட்டது. ஆடு ஆண்டில் பிறந்தவர்களுக்கு மிகவும் பல அரிய குணங்கள் உள்ளது விளக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040