• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர்களின் கடிதங்கள்
  2010-07-15 15:30:13  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை சீன வானொலி நிகழ்ச்சிகளை பற்றியும் அவற்றை கேட்பதால் எழும் தங்கள் கருத்துக்கள் பற்றியும், தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டு தொடர்ந்து எமக்கு எழுதிவரும் நேயர் அன்பர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். நேயர்நேரம் நிகழ்ச்சிக்கு உங்களது தொடர்ந்த, நிலையான, நீடித்த ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கேட்கலாம்.

கலை முதலாவதாக, சிங்கப்பூர் வி.சந்திரசேகர் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை பார்த்துவிட்டு, அப்பொருட்காட்சி வாழ்த்து அட்டையிலேயே ஷாங்காயிலிருந்து எழுதிய கடிதம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை மகிழ்வுடன் பார்வையிட்டோம். மங்கள சின்னம் ஹைப்போவை பார்வையிட்டு மகிழ்ந்தோம். சீனா மற்றும் அதன் பண்பாடு பற்றி பல விபரங்கள் தெரிந்து கொண்டோம். உலகப் பொருட்காட்சி பற்றி எமக்கு சரியாக அறிய தந்த சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு வாழ்த்துக்கள்.

தமிழன்பன் அடுத்தாக, இலங்கை திரிகோணமலை முஜகிதா முகமட் அனுப்பிய கடிதம். எனது நண்பர் மூலமாக சீன வானொலி ஒலிபரப்பு எனக்கு அறிமுகமானது. நிகழ்ச்சிகள் அனைத்தும் சீனாவை பற்றி பல அரிய தகவல்களை சுமந்து வருகின்றன. பொது அறிவை வளர்த்து கொள்ளும் வகையில் இத்தகவல்கள் இருப்பது சிறப்பு. பல்லூடக சேவையில் ஒளிவீசி வரும் சீன வானொலி தமிழ்ப்பிரிவு என்றும் பூத்துக்குலுங்க வாழ்த்துக்கள்.

கலை தொடர்வது, முனுகப்பட்டு ஜி.பிச்சுமணி செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். பாலஸ்தீன இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு அரபு நாடுகள் லீக்கின் ஆதரவை அறிய வந்தோம். இவற்றின் பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் மத்திய கிழக்கு பிரதேச பதற்ற நிலைமை தணிவாகி, அமைதியை நோக்கிய பாதையாக அமையும் என்று நம்புகின்றோம். இதற்கு அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது சிறப்பு.

தமிழன்பன் இனி, மெட்டாலா எஸ்.பாஸ்கர் இசை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இன்றைய நாளில் இடம்பெற்ற சீனப்பாடல்கள் இனிமையாக இருந்தன. எளிமையான சொற்களும், இனிமையான இசையும் கலந்த மீண்டும் துவங்குவது என்றும் பாடலை மெய்மறந்து இரசித்தேன். வெற்றியும், தோல்வியும் பரவாயில்லை. வாழ்க்கையை தொடங்குங்கள் என்று கூறிய உள்ளம் இருக்கும்வரை கனவு நிலைக்கும் எனும் கருத்துக் கொண்ட பாடல் அருமை.

கலை அடுத்தாக, சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி பற்றி சென்னை மறைமலைநகர் சி.மல்லிகா தேவி எழுதிய கடிதம். இந்நிகழ்ச்சியில் யுன்னான் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடங்கள், மாணவச் செல்வங்களின் திறமைகள் ஆகியவற்றை விளக்கமாக கூறிய பின்னர் குழந்தைகள் மிகவும் மகிழ்சியுடன் பள்ளிக்கு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் இலக்குகளில் ஒன்றான இலவச கல்விதிட்டமே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்று அறிந்தபோது, கல்வியை வியாபாரம் ஆக்காமல் அரியதொரு சேவைப் பணியாக வழங்கிவரும் சீன அரசை நினைத்து பெருமிதம் கொண்டேன்.

தமிழன்பன் தொடர்வது, பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் ஷாங்காய் உலகப்பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல உலகப் பொருட்காட்சி தொடங்குவதற்கு முன்னரே அது பற்றிய உலக நாடுகளின் எதிர்பார்ப்பு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது. இது பற்றிய தகவல்கள் நாள்தோறும் சீன வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பாவது அதன் தற்போதைய நிலைமைகளை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு.

கலை இனி, மதுரை 20 என்.இராமசாமி செய்தி விளக்கம் பற்றி எழுதிய கடிதம். சீனக் கடல் பொருளாதராத்தின் வளர்ச்சி என்ற செய்தி விளக்கம் கேட்டேன். கடல் மூலம் கிடைக்கின்ற பொருளாதார வளர்ச்சியை சீனா நிதானமாக நனவாக்கி வருகிறது. 2008 ஆம் ஆண்டைவிட 88 விழுக்காடு மொத்த கடல் உற்பத்தி அதிகரித்திருப்பது இதனை நமக்கு விளக்குகிறது. கடலால் கிடைக்கக்கூடிய பொருளாதார பயன்களை உயர்த்துவதற்கு பாடுபடுகின்ற சீன அரசுப் பணியகத்தை பாராட்ட வேண்டும்.

தமிழன்பன் அடுத்தாக, ஆந்திரா அஸ்வபுரத்திலிருந்து எழுதும் மும்பை சுமார் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி அனுப்பிய கடிதம். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்கள் விரிவாக இடம்பெற்றன. இதற்கு பயன்படுத்தப்படும் சாதி குறிப்பிடாத தகவல் படிவம் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இதனையெட்டிய விவாதங்கள் அதிகரிப்பது, நடைமுறையில் சாதியின் தாக்கம் அதிகமாக உள்ளதை தான் காட்டுகிறது.

கலை தொடர்வது, வேலூர் குமார.ராமமூர்த்தி அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன-ஜெர்மனி தொழில்முறை கல்வியில் மேற்கொள்ளும் ஒத்துழைப்பு பற்றி இந்நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, பணியாளர்கள் பரிமாற்றம் போன்றவைகள் இரு நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுப்பவையாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040