• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல்
  2010-07-15 15:31:20  cri எழுத்தின் அளவு:  A A A   








இலங்கை கண்டி எம்.ஐ.சக்கீல் அனுப்பிய மின்னஞ்சல்

இலங்கையில் பண்பலை 102யில் நாள்தோறும் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் சீன வானொலியை கேட்டு வருகின்றேன். வானொலி நிகழ்ச்சிகள் சிறப்பாகவும், அறிவினை பெருக்குவதோடு பொது விடயங்களை அறிந்துகொள்ள கூடியதாகவும் இருப்பதால் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. சீன வானொலி நேயராக அதன் வளர்ச்சிக்கு பங்களிக்க தயாராகவுள்ளேன்.

வளவனுர் புதுபாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் திபெத் இன பண்பாடு உருவான லோகா பிரதேசம் என்ற கட்டுரையைக் கேட்டேன். அதனை கேட்டவுடன், கடந்தாண்டு நான் மேற்கொண்ட சீனப் பயணத்தினை நோக்கி, என் எண்ணப் பறவை சிறகடித்துப் பறந்தது. இந்நிகழ்ச்சியில் திபெத் பண்பாடு தோன்றிய இடமான லோகாவில் நான் பயணம் மேற்கொண்டது தான் அதற்கு காரணமாகும். குறிப்பாக, திபெத் பிரதேசத்தின் முதலாவது பேரரசர் உருவாக்கிய முதலாவது மாளிகையை காணும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மலையின் உச்சியில் அழகுற, அதேவேளையில் வலிமையாக அமைக்கப்பட்ட அம்மாளிகையின் கம்பீரமான தோற்றத்தை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. லோகாவில் நான் பயணம் மேற்கொண்டபோது, அது தான் திபெத் பண்பாடு தோன்றிய இடம் என்பதை யாரும் என்னிடம் கூறவில்லை. ஆனால், இன்றைய நிகழ்ச்சியின் மூலம் அந்த விவரத்தை அறியத் தந்தீர்கள்.

ஆரணி‍ -அபிஅமிர்தவதி அனுப்பிய மின்னஞ்சல்

உலக போதைப் பொருள் ஒழிப்பு நாள் சீனாவில் கடைபிடிக்கப்பட்டதை அறிந்தேன். மனித இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கக் கூடிய போதை ப‌யன்பாட்டை ஒழிக்க சீன அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவது ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும். போதைப் பழக்கத்தை ஒழிக்க முயல்வோருக்கு உதவி செய்ய வேண்டும். அவர்கள் மீண்டும் சமூக இயல்பு வாழ்க்கையில் புதிய இனிமையான வாழ்க்கையை துவங்க பல உதவிகள் செய்யப்படுவதன் மூலம், போதை பொருட்களின் பயன்பாடில்லா சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் என நம்புகிறேன்.

நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

திபெத் பயணியர் விமான சேவைக்கு விமானிகளை சேர்ப்பது பற்றி சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் அறிந்தேன். சீனஅரசு திபெத் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இதன் மூலம் தெளிவாகிறது. திபெத்திலிருந்து விமானி உள்பட 24 விமான பணியாளர்களை, திபெத் விமான பயணியர் நிறுவனத்தில் சேர்த்து, 2011-ம் ஆண்டு முதல் திபெத்தில் விமான சேவையை துவக்க திட்டமிட்டுள்ளது திபெத்தின் விரைவான வளர்ச்சிக்கு அடித்தளமிடும்.

வளவனூர் முத்துசிவக்குமரன் அனுப்பிய மின்னஞ்சல்

மலர்ச்சோலை நிகழ்ச்சியில் ஆளுக்கு ஒரு செல் என்று சீனாவில் கிட்டத்தட்ட 110 கோடி பேர் தொலைபேசி பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தி வியப்பை ஏற்படுத்தியது. சீனாவில் செயலில் மட்டுமல்ல, செல்பேசி உபயோகத்திலும் புரட்சியினை செய்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்

நப்புபாலம் நிகழ்ச்சயில் சீனவில் வெளிநாட்டவருக்கு அளிக்கப்படும் விருந்தோம்பலை திரு. ஸ்டலின் குணசேகரன் அவர்கள் சிறப்பாக எடுத்து கூறினார். சீன நாட்டவர்கள் பிறரை மிகவும் அன்புடனும் பாசத்துடன் உபசரிப்பதை அறிந்தோம். மானிட வளத்திலும், பல வகை உணவுப் பொருட்களை கொண்டு பிறரை உபசரிப்பதிலும் உலகிலே சீனா முதலிடம் என்பதை இந்நிகழ்ச்சி நன்றக உணர்த்தியது.

மீனாட்சிபாளையம் கா.அருண் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவில் தொல்பொருள் பாதுகாப்பு பற்றிய விபரங்களை இணையதளத்தில் படித்தேன். சீனாவில் 2,352 இடங்கள் தொல்பொருள் பாதுகாப்பு பட்டியலில் இருப்பதையும், 27 இடங்கள் உலக பண்பாட்டு மரபுச் செல்வங்களில் சேர்கப்பட்டுள்ளதையும் அறிந்தேன். மேலும் தொல்பொருள் பாதுகாப்பை வலுப்படுத்த சீனா எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை விரிவாக அறிய முடிந்தது

சேந்தமங்கலம் K.சுந்தரம் அனுப்பிய மின்னஞ்சல்

சூரிய ஒளியை பயன்படுத்தி விண்ணில் பறக்கும் விமானம் பற்றி மலர்சோலையில் அறிந்தேன். சூரிய ஒளி இல்லாத இரவு முழுவதும் அது விண்ணில் பறந்ததையும் தெரிந்து வியந்தேன். மனிதனின் மூளையால் விளையும் அறிவியல் கண்டுபிப்புகள் தொடர்ந்து முன்னேறி வருவது ஆச்சரியம் அளித்தது.

விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

ஐ.நா.அமைதி காப்பு நடவடிக்கையில் சீனாவின் பங்கு பற்றிய செய்திவிளக்கம் கேட்டேன். 1990 ஆம் ஆண்டு அமைதி காப்புப் பணிக்கு 5 பார்வையாளர்களை அனுப்பிய சீனா இன்று பல ஆயிரம் படை வீரர்களை அனுப்பி ஐ.நா.வில் தனது பங்கை அதிகப்படுத்தி வருவதை காண முடிகிறது. மேலும், சிறப்பு நிகழ்ச்சியில், உலகப் பொருட்காட்சி பாட்டி பற்றி கேட்டேன். அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்துள்ளது. அவர் பாட்டி அல்ல, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் கதாநாயகி.

உத்திரக்குடி சு.கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்

அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் தக்காளி பழங்கள் கெட்டுப் போகாமல் இருக்க புதிய அறிவியல் ஆய்வை கண்டுபிடித்துள்ளதை செய்திகளில் கேட்டேன். தக்காளி பழம் ஏழைகளின் ஆப்பிள் என்ற பெருமை பெற்றதாகும் ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே கெட்டுப் போகும் பழ வகைகளில் ஒன்றாக இதுவுள்ளது. இது கெட்டுப் போகாமல் பல நாட்கள் பயன்படுத்தி கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ள அறிவியலாளர்களுக்கு பாராட்டுக்கள்.

இரசிபுரம் M.குருசாமி அனுப்பிய மின்னஞ்சல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிக் குழு உறுப்பினராக பயணம் மேற்கொண்ட திரு. ஸ்டாலின் குணசேகரனின் பேட்டியை நட்புப்பாலம் நிகழ்ச்சியில் கேட்டு வருகிறேன். சீன மக்களை பற்றியும், சீனாவை பற்றியும் பற்றியும் பல அரிய தகவல்களை பதிவு செய்தார். இந்திய-சீன நட்புறவுக்கு சிறந்த நிகழ்ச்சியாக இது வலம் வந்தது.

சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்

கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் தமிழ்பிரிவு தலைவர் திருமதி.தி.கலையரசி திரு.செல்வம் மற்றும் திரு.பல்லவி பரமசிவம் அவர்களின் கலந்துரையாடலை கேட்டேன். சிறந்த வழிகாட்டுதலின்படி வரும் காலங்களில் தமிழ்பிரிவு மேலும் எண்ணற்ற புதிய நேயர்களை பெற்று பலம் பெறும் என்று நம்புகின்றேன். இந்த கலந்துரையாடல் இணையதள பயன்பாட்டை மேன்மேலும் அதிகரித்து தமிழ்பிரிவின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் என்று நம்புகின்றேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040