• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர்களின் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள்
  2010-07-22 17:07:07  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை அன்பான நேயர்களே! இப்போது நேயர்நேரம் நிகழ்ச்சி. உங்கள் கருத்துகளை தாங்கி வந்த கடிதங்களையும், மின்னஞ்சல்களையும் தொகுத்து வழங்குவது, கலையரசி

தமிழன்பன் தமிழன்பன். முதலாவதாக, கடிதங்கள் மூலம் உமக்கு அனுப்பப்பட்ட கருத்துக்களை வழங்குகின்றோம்.

கலை ஆர்க்காடு ஜி.மீரா செய்திகள் பற்றி எழுதிய கடிதம். சீனாவின் கிராமபுறங்களில் உள்ள இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை பத்துக் கோடியை தாண்டியதை வாசிக்க கேட்டேன். கனிணி உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப, கிராமபுறங்களில் வாழும் மக்களும் சீனாவில் வளர்ந்து வருவதை இதன் மூலம் உணர முடிந்தது. இணையத் தொடர்பால் விளையும் பயன்களை கிராமங்களும் பெற்று விரைவாக வளர்ச்சியடைவதற்கு இது துணைபுரியும்.

தமிழன்பன் அடுத்து, இலங்கை கல்முனையிலிருந்து எம்.எப்.எப்.ஃபயிஷா அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மூலம் சீனாவைப் பற்றிய தகவல்களை குறிப்பாக உணவு வகைகள், விளையாட்டுகள், பண்பாடு போன்ற பலவற்றை அறிய முடிகிறது. இலங்கையை பற்றிய சில தகவல்களை சீன வானொலி ஒலிபரப்பு மூலமே அறிய வருகிறேன். என்னை பொறுத்தவரை எனது பொது அறிவை வளர்க்கும் சிறந்த பொழுதுபோக்காக சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்டு வருகின்றேன்.

கலை தொடர்வது, அறிவியல் கல்வி மற்றம் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி திருச்சி எம்.தேவராஜா எழுதிய கடிதம். லேசர் ஒளி அச்சு கோர்ப்பு தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய அறிஞர் வாங்சுவென் பற்றி கேட்டேன். அச்சுக் கலையை உலகிற்கு வழங்கிய சீனா இன்று முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய லேசர் ஒளி அச்சு கோர்ப்பு தொழில் நுட்பத்தையும் வழங்கியுள்ளது. அரும்பாடுபட்டு இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அறிஞருக்கு வூசியில் நினைவகம் கட்டப்பட்டுள்ளது மனதை நெகிழச் செய்தது.

தமிழன்பன் அடுத்தாக, நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி ஈரோடு எம்.சி்பூபதி அனுப்பிய கடிதம். எனக்கு பிடித்தமான பாடலான ஊமைவிழிகள் திரைப்படத்திலிருந்து நிலைமாறும் உலகில் நிலைக்கும் இந்த கனவில் என்ற பாடலும் இன்னும் சில பாடல்களும் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இதமான பாடல்கள் அனைத்தும் மனங்களை கொள்ளை கொண்டன.

கலை இனி, சேலம் பா.இராசேந்திரன் சீன தமிழொலி இதழ் பற்றி எழுதிய கடிதம். பொது அறிவுப் போட்டியில் சிறந்த நேயராக வெற்றியடைந்து சீனாவின் திபெத்தில் இலவச பணயம் மேற்கொண்ட திரு.செல்வம் அவர்களின் பயணக்கட்டுரை இதழை படித்து மகிழ்ந்தேன். சீன வானொலி நேயர்களுக்கு இவ்வாறு வாய்ப்புகள் வழங்குவதை பாராட்டுகின்றேன். இந்த இதழில் திபெத்தின் முக்கிய இடங்கள், அவற்றின் வரலாற்று முக்கியத்துவங்களை இவ்விதழ் மூலம் அறிந்து கொண்டேன்.

தமிழன்பன் தொடர்வது, நீலகிரி கீழுகுந்தா கே.கே.போஜன் சீன தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகளின் தேர்தல் சீர்திருத்தம் பற்றி அனுப்பிய கடிதம். நகர மற்றும் கிராம மக்களின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை சமமாக இருக்க செய்வது, அனைத்து சிறுபான்மை தேசிய இன மக்களின் பிரதிநிதித்துவம் போன்ற அம்சங்கள் இதில் கவனம் செலுத்தப்படுகிறது. எல்லா மக்களின் பங்களிப்பும், கருத்துக்களும் சீனாவின் வளர்ச்சியில் இடம்பெற செய்ய வேண்டும், நாட்டை ஆளுவதில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்ற உயரிய எண்ணங்களை இந்த சீர்திருத்தம் காட்டுகிறது.

கலை அடுத்து,சோமனூர் எம்.சோமசுந்தரம் அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். திக்குவாயை குணப்படுத்த மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனை வெற்றியடைந்ததை இந்த நிகழ்ச்சி விளக்கியது. மூன்று மரபணுக்களை மாற்றம் செய்வதன் மூலம் திக்குவாய் ஏற்படாமல் தடுத்துவிடலாம் என்று ஆராய்ச்சியில் தெரிவந்துள்ளதை அறிய தந்த சீன வானொலிக்கு நன்றிகள்.

தமிழன்பன் இனி, மதுரை 20 என். இராமசாமி அணு ஆயுத குறைப்பு மாநாடு பற்றி அனுப்பிய கடிதம். அணு ஆணுதங்களை பன்முகங்களிலும் தடை செய்வது, அவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கு முந்தைய காலடியாகும் என்பதை தெளிவாக எடுத்தககூறி, உலக நாடுகள் அணு ஆயுதங்களை குறைப்பதை சீனா வலியுறுத்தியுள்ளது. ஆயுதங்களை பெருக்குவதால், உலக நாடுகளிடையில் ஏற்படும் அச்சம் நீங்கி அமைதி வாழ்வு வளர சீனா கொண்டுள்ள அக்கறையை இது காட்டுகிறது.

கலை தொடர்வது, இலங்கை காத்தான்குடியிலிருந்து ச.பா.சஸ்ரிபா சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை இந்நிகழ்ச்சி பொதுவாக அறிமுகப்படுத்தி வருகிறது. பல்வேறு இடங்களின் முக்கியத்துவத்தை, வரலாற்று பாரம்பரியத்தை எங்கள் மனதில் பதிவு செய்யும் நிகழ்ச்சியாக, சுற்றுலாத்துறையை வளாக்கும் சிறந்த பரப்புரையாக இது விளங்குகிறது.

மின்னஞ்சல் பகுதி

புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

தைவான் நீரினையின் இருகரைகளின் ஆறாவது பொருளாதார வர்த்தகம் மற்றும் பண்பாட்டுக் கருத்தரங்கு குவாங்சோ மாநகரில் நடைபெற்றதையும் அது பற்றி முழுமையான தகவல்களையும் செய்திவிளக்கத்தில் அறிய தந்தீர்கள். இரு சொந்த சகோதரர்கள் ஒரு வீட்டில் அன்பாக இருப்பது போன்று சீனாவும் தைவானும் தொழிற்துறை, அறிவியல் தொழில் நுட்பங்களில் ஒத்துழைப்பு, எரியாற்றல், சுற்றுச்சுழல் என பல துறைகளின் வளர்ச்சியை முன்னேற்றி, புதிய கொள்கைகள், வழிவகைகளை ஏற்படுத்த பொதுவான ஆலோசனைகளை முன்வைத்தது பாராட்டுக்குரிய அம்சமாகும். சீன கம்யுனிஸ்ட் கட்சியும் சீன கோ மின் தாங் கட்சியும் இணைந்து பல ஆலோசனைகளை கூட்டாக முன்வைத்தால் உலக அரங்கில் பெரும் முக்கியத்துவத்தை பெறுவதில் ஐயமில்லை.

வளவனூர் புதுபாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

பிரம்மாண்டமாக நடைபெற்ற இலங்கை அரங்கு நாள் என்ற கட்டுரையை கலைமகள் அவர்கள் வழங்கினார். ஷாங்காயில் பயணம் மேற்கொண்டு அங்கிருந்து தகவல்களை திரட்டி வழங்கிய கலையரசி மற்றும் கலைமகள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இணையத்திலும், இக்கட்டுரை மற்றும் தொடர்புடைய நிழற்படங்களையும் கண்டு மகிழ்ந்தேன். இலங்கை அரங்கு நாளில், இலங்கை தலைமை அமைச்சர் நேரில் கலந்து கொண்டிருப்பதை வரவேற்கின்றேன். சிங்கப்பூரில் முதல் இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கவுள்ளதை மலர்ச்சோலை அறிந்தேன். அதனை வரவேற்கிறேன். 1976 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 28 ஆம் நாள் தான்ஷாங் நகரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை வாய்ப்பு இருந்தால் இணையம் மூலம் கண்டு மகிழ்வேன்.

திருச்சி அண்ணாநகர் வி.டி. இரவிசந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

நம்பிக்கையை மீட்க, இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர இந்திய மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதை செய்திவிளக்கத்தில் கேட்டேன். இப்பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமானது. முக்கியமானது என்று இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலைக்கு எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து இருதரப்பும் ஆக்கபூர்வமாக செயல்படுவது இருதரப்புக்கும் நலன் பயக்கும். ண்மையில், பெய்த கடும் மழை காரணமாக, யாங்ட்சி ஆற்றுப்பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுடிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது.. யாங்ட்சி ஆற்றின் நடுப்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் வெள்ளப்பெருக்கு பகுதிகளை விரைவில் சரிசெய்திட வேண்டும்.

திமிரி. புலவர் ராமதாஸ் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் கோடைகால தானிய விளைச்சல் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இதனால் சீனாவின் பொருளாதாரம் மேலும் வளரும் போக்கை எட்டியுள்ளது. கோதுமை விளைச்சல், 10 ஆயிரத்து 880 கோடி கிலோகிராம் என்பது கடந்த ஆண்டின் விளைச்சலை விட, சுமார் 100 கோடி கிலோகிராம் அதிகரித்திருப்பது வரவேற்கதக்கது. தொடர்ந்து 7வது ஆண்டாக இந்த அதிகரிப்பு தொடர்வது, சீன வேளாண் துறையின் சாதனைகளில் ஒன்று.

மதுரை-20 ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்

உலகில் அதிகமான நிலப்பரப்பை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகவும், 130 கோடி மக்கள்தொகை கொண்ட பெரிய நாடாகவும் சீனா இப்போது திகழ்க்கினறது. 2011முதல் 2015 ஆம் ஆண்டுக்குள் அதன் மக்கள் தொகை 133 கோடியை எட்டக்கூடும். நகரங்களின் மக்கள்தொகை கிரமங்களை விட அதிகமாகும் என்றும் தெரிய வருகின்றது. 2015 ஆம் ஆண்டு சீனாவிலுள்ள முதியோரின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டக்கூடும். இத்தகவலை சீனாவின் குடும்ப நல திட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல பயனுள்ள நடவடிக்கைகளை சீன நடுவண் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது.

முனுகப்பட்டு கண்ணன்சேகர் அனுப்பிய மினன்ஞ்சல்

சீனாவின் நிங்சியா சர்வதேச பண்பாடு, கலை மற்றும் சுற்றுலா கண்காட்சி, நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான இன்சுவான் நகரில் துவங்கியதை அறிந்தேன். அழகும் கலை வளமும் நிறைந்த சீனாவில் இதுபோன்ற பன்பாட்டு விழாக்கள் நடைபெறுவதை பார்க்கும்போது சீனாவின் தனிச் சிறப்பான கலைகளையும் சுற்றுலாத்துறையையும் அதிகம் அறிய முடிகிறது. கலைநிகழ்ச்சி அரங்கேற்றம், வணிகப் பொருட்காட்சி, கருத்தரங்கு ஆகியவை கண்காட்சியில் இடம்பெறுகின்றன. நாட்டின் 14 கலைக்குழுக்கள் சீன சிறுபான்மை தேசிய இனங்களின் நாடக அரங்கேற்றங்களை நடத்தி தங்கள் தனித்திறமையை வெளிக்காட்டுவது சிறப்பாக அமையும்.

இரசிபுரம் R.M.மோகன் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவில் பிறக்கின்ற ஆண்டின் பெயருடைய விலங்குகளை நட்சத்திரமாகக் கொள்வதோடு, பிறந்த ஆண்டுபடி பண்புகளை கணிப்பது சீன பண்பாட்டு நிகழ்ச்சியில் பல வாரங்களாக விளக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் தகவல்கள் சிறப்பானதாகவும், பாராட்டக் கூடியயதாகவும் உள்ளன.

செந்தலை என்.எஸ்.பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் கிராமப்புறங்களில் வீட்டுப் பயன்பாட்டு மின்சாதனங்கள் விற்பனை பற்றி செய்திகளில் அறிந்தேன். 2007 ஆம் ஆண்டு முதல் சில மாநிலங்களின் கிராமப்புறங்களில் வண்ணத் தொலைக்காட்சி வசதி மற்றும் செல்லிடபேசி வசதி முதலிய வீட்டுப் பயன்பாட்டு மின் சாதனங்களை வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்து 18 ஆயிரமாக எட்டியுள்ளதும் கடந்த காலத்தைவிட இது 2.4 மற்றும் 3.2 மடங்கு அதிகரித்திருப்பதும் வியப்பை அளித்ததோடு சீனாவின் முன்னேற்றத்தையும் காட்டியது.

மெட்டாலா எஸ்.பாஸ்கர் அனுப்பிய மின்னஞ்சல்

மனம் ஒரு குரங்கு. மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் முன்னோடியாக குரங்குகளை உதாரனம் கூறுகின்றனர். சீனாவில் 12 ராசிகளில் 9தாவது இடத்தில் குரங்கும், இடம் பெற்றுள்ளது. குரங்கு ஆண்டில் பிறந்தவர்கள் மதிநுட்பமும் சுறுசுறுப்பும் நிறைந்தவர்களாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் திகழ்வர் என்று அறியதந்தது சிறப்பு. சீன முறைப்படி நாங்கள் பிறந்த ஆண்டுகளையும் அரியதரும் சீனப்பண்பாட்டு நிகழ்ச்சிக்கு பாரட்டுக்கள்.

மீனாட்சிபாளையம் கா.அருண் அனுப்பிய மினன்ஞ்சல்

செய்தியறிக்கையில் சீனாவில் பெருகிவரும் போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்த முதல்கட்டமாக ஷாங்காய் நகரில் வாகனங்களுக்கு பதிவுஎண் வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து மிதிவண்டி பயன்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள தகவலைக்கேட்டேன். இது வரவேற்கதக்கது., இதன் மூலம் சாலைகளில் நெரிசல் குறைவது மட்டுமல்லாமல், வாகனப் புகைகளால் ஏற்படும் காற்றுமாசு குறையும், பெட்ரோலியப் பொருட்களை சிக்கனப்படுத்துவதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து அந்நியச்செலாவணியை சேமிக்கலாம். இந்த ஒரு செயலால் கிடைக்கும் பலன்களோ எண்ணற்றது. இதை அனைத்து நாடுகளும் பின்பற்றலாமே!

சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன் அனுப்பிய மினன்ஞ்சல்

சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில் சீன நடுவண் அரசு திபெத்திலுள்ள போத்தலா மாளிகை பராமரிப்பதையும், பழுதுபார்ப்பது பற்றியும் விளக்கப்பட்டது. இந்த மாளிகை ஏழாம் நூற்றாண்டில் கட்டத் துவங்கி 15 ஆம் நுற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. சீன நடுவண் அரசு இதை பராமரிக்கவு,பழுது பார்க்க 35,000 கோடி யுவான் செலவு செய்துள்ளதை தெரிந்து கொண்டேன். கண்ணை இமை காப்பது போல் பழங்கால செல்வங்களை சீன நடுவண் அரசு காத்து வருவதை அறிய முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040