• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நண்பர்களே கடிதப்  பகுதியில் 9 பேர் தெரிவித்த கருத்துக்கள்
  2010-08-13 16:44:07  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை அன்பான நேயர்களே! உங்கள் கடிதங்கள் தாங்கி வந்த கருத்துக்களை அனைவருக்கும் அறிவிக்கும் நேயர்நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது, கலையரசி.

தமிழன்பன் தமிழன்பன். இவ்வார நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

கலை இந்நிகழ்ச்சிக்கு நேயர் அன்பர்கள் வழங்கிவரும் மேலான ஆதரவுக்கு நன்றி செலுத்துகின்றோம். சீன வானொலியின் வளாச்சிக்கு பல்வேறு விதங்களில் ஆதரவளிக்கும் நேயர் நண்பர்கள் வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றி கருத்துக்கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை தொடர்ந்து அனுப்பி இந்நிகழ்ச்சிக்கான ஆதரவை தொடர்ந்து வழங்க கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கேட்கலாம்.

கலை இலங்கை காத்தான்குடியிலிருந்து எம்.எச்.எப்.ஷிபா எழுதிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. காதுக்கும் அறிவுக்கும் இனிமை சேர்ப்பவை. உலகெங்கும் பரந்து வாழும் மக்கள் அனைவரையும், ஒன்றிணைக்கும் பாலமாய் விளங்கும் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு நன்றிகள். சீன வானொலியின் பல்லூடக செய்தி சேவை வானளாவ வளர்ந்து வரலாறு படைக்க வாழ்த்துக்கள்.

தமிழன்பன் அடுத்தாக, ஈரோடு எம்.சி.பூபதி தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இன்றைய நிகழ்ச்சியில் முந்தைய பாடத்தினை நினைவூட்டிய பிறகு புதிய பாடம் தொடங்கியது. நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் சீன சொற்களின் உச்சரிப்பு பாராட்டப்பட வேண்டும். கேட்போர் அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக தெளிவாக சொல்லி தருவது சிறப்பு. சீன தமிழொலி இதழ் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டு, படிக்க பார்க்க சிறப்பாய் உள்ளது. சீன தமிழ் ஒலிபரப்பு கேட்க துவங்கியதிலிருந்து சினிமா பார்ப்பது கிடையாது. ஓய்வு நேரத்தில் வானொலி நிகழ்ச்சிகள் பற்றி கருத்து கடிதங்கள் எழுதுவதே பொழுதுபோக்காய் உள்ளது.

கலை தொடர்வது, முனுகப்பட்டு பி.கண்ணன் சேகர் அணு ஆயுத கட்டுப்பாடு பற்றி எழுதிய கடிதம். அணு ஆயதங்களை கட்டுபடுத்தும் செயல்பாட்டில் உலக நாடுகளுடன் ஒத்துழைக்க சீனா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. உலகின் அமைதியான சகவாழ்வுக்கு சீனா வழிகாட்டுவதை இது வெளிப்படுத்துகிறது. சில நாடுகள் ஊருக்கு உபதேசம் கூறிவிட்டு, அணு ஆயுத குறைப்பை செயல்படுத்தாமல் இருப்பது உலக அமைதிக்கு அச்சுறுத்தலையே கொண்டுவரும்.

தமிழன்பன் இனி, சேலம் எ.வேலு மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். இதில் இடம்பெற்ற பண்டைய மூங்கில் சுவடுகள், பூ என்ற எழுத்தில் முடியும் சீனப் பெயர்கள், ஆதார ஏடு, துரித இணை தேடல் போன்ற தகவல்கள் வியப்பளித்தன. பல்வகை சுவையான செய்திகளை தொகுத்து வழங்கியதற்கு பாராட்டுக்கள்.

கலை அடுத்து, சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். ஜெர்மனி அரங்கிலுள்ள அதிசயங்களை இதில் விளக்க கேட்டேன். ஜெர்மனியில் முதியோருக்காக உருவாக்கப்பட்ட இயந்திர மனிதன் படைப்புகளை இந்நிகழ்ச்சி அறிமுகபடுத்தியது. முதியோரின் வாழ்க்கையை வசதியாக்கும் இயந்திர மனிதனின் ஆற்றலை என்னவென்பது.

தமிழன்பன் தொடர்வது, திருப்பூர் தாராபுரம் ஏழுமலை நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் சிறப்பு பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களது பேட்டிக் கேட்டேன். இரு நாடுகளிடையே உள்ள நட்புறவை வளர்க்க இதுபோன்ற சுற்றுப்பயணங்கள் உதவுமென நம்புகிறேன்.

கலை இனி, விளையாட்டுச் செய்திகள் பற்றி திருச்சி எம் தேவராஜா எழுதிய கடிதம். சீனாவில் பொது மக்கள் விளையாட்டு பணியின் வளர்ச்சி என்ற கட்டுரை கேட்டேன். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சீன மக்களின் உடல் நலம் கருதி பொது விளையாட்டுகளை குறிப்பாக உடற்பயிற்சி செய்வதை அன்றாட கடைமையாக்குவதில் சீன அரசு பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சீன மக்கள் பேரவை கூட்டத் தொடரிலும் இதற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டு, இவ்வாண்டில் முழுமையான வாளர்ச்சி காண திட்டமிட்டிருப்பது நிச்சயம் வெற்றியளிக்கும்.

தமிழன்பன் அடுத்தாக, தேனி உத்திரபாளையம் கே.சக்திவேல் எழுதிய கடிதம். புன்னகை முகங்கள் என்ற ஜப்பான் உலகப் பொருட்காட்சி அரங்கு பற்றிய விளக்கம் மெய்சிலிர்க்க வைத்தது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பாய் திட்டமிடப்பட்டு நடத்தபடுவது சீனா உலக ஒற்றுமைக்கு சான்றாக விளங்குவதை காட்டுகிறது. இனியாவது சீனா பற்றிய பொய் பரப்புரைகளை பிற நாடுகள் நிறுத்த வேண்டும்.

கலை தொடர்வது, இலங்கை ஓட்டமாவடி எம்.என்.நம்ஸானா அனுப்பிய கடிதம். எமது வாழ்விலுள்ள ஒரு பொழுதுபோக்காய் சீன வானொலி நிலையம் கலந்துவிட்டது. என்னை போன்ற மாணவர்களுக்கு சீன வானொலி நிகழ்ச்சிகள் அறிவு களஞ்சியமாகவே உள்ளன. கவிதை வரிகளாக "பொன்னான நேரமதில் பொழுதுபோக்காய் வந்துவிட்டாய்,எண்ண முடியாச் செய்திகளை நீ எமக்கு என்னேரமும் அளித்திடுவாய்" என்று எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040