• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
8 பேர் மேல் மூலம் தெரிவித்த கருத்துக்கள்
  2010-08-19 09:42:08  cri எழுத்தின் அளவு:  A A A   








முதலாவதாக, சீனாவின் கான்சூ மாநிலத்தின் சோச்சியூ மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு தொடர்பாக அனுப்ப்பட்ட மின்னஞ்சல்கள் இடம்பெறுகின்றன.

புதுக்கோட்டை ஜி வரதராஜன்

அண்மையில் சீனாவின் கன் சூ மாநிலத்தின் சோச்சியு மாவட்டத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு நிகழ்ந்த்தை செய்திகளில் அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். சீன சமூகத்தின் பலதரப்பு துறைகளும் மீட்புதவிப்பணியில் கவனம் செலுத்தி துரித நடவடிக்கைகளை மேற்க்கொண்டது ஒரளவு ஆறுதலை தந்தது. தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவின் செயல்பாடுகளும் வழிகாட்டலும், அவர் தலைசிறந்த மக்கள் தலைவர் என்பதனை உலகிற்கு உணர்த்தி விட்டன. எல்லாவித மீட்புதவி பணிகளும் மனிதாபிமானம் சீன மக்களின் உணர்வோடும் வாழ்க்கையோடும் ஒன்றிவிட்டதை உலகறிய செய்துவிட்டன.

வளவனூர் புதுபாளையம் எஸ்.செல்வம்

சீனாவின் கான்சு மாநிலத்தின் சோச்சியூ மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களின் உறவினருகும் நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், ஆகஸ்டு திங்கள் 15 ஆம் நாளை துக்க நாளாக கடைபிடித்து, முழு சீனாவிலும் அஞ்சலி செலுத்தப்படும் தகவலை 14 ஆம் நாள் நிகழ்ச்சிகளில் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு உயிரும் ஈடுடிணையற்றது என்பதை உணர்ந்து இரங்கல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்ததற்கு எனது நன்றிகள். அன்றியும், எதிர்பாரா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், அவர்தம் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சீன அரசின் அறிவிப்பை தொடர்ந்து, கொண்டாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்த சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு என் நன்றிகள்.

செந்தலை என்.எஸ்.பாலமுரளி

கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கான்சு மாநிலத்தின் சோச்சியூ மாவட்டத்தை பார்வையிட்ட சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் கூட்டம் நடத்தி, அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து, உயிர் பிழைத்தோரை மீட்க வேண்டிய முதன்மை கடமையை வலியுறுத்தினார். விரைவாக இயல்பு நிலை அடையும் வகையில், அடிப்படை வசதிகளை திட்டமிட்டு படிப்படியாக அமைத்து பேரிடர் நீக்கப் பணியில் சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அதிகப் பாதிப்புகளை குறைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்

சீனாவின் கான்சூ மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், 1239பேர் உயிரிழந்துள்ளது வருத்தத்தை தருகிறது. ஐநா பாரட்டும் அளவிற்கு சீன அரசின் மீட்புதவி பணிகள் விரைவாக இருந்துள்ளதை குறிப்பிட்டு பாராட்டியாக வேண்டும். பாதிப்புகளை உடனடியாக சமாளிக்கும் சீனாவின் ஆற்றலை கண்டு வியக்கிறேன். மேலும், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் அதிக மழை பொழிவால் பல இடங்கள் குறிப்பாக சிச்சுவான், லெசான் நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை செய்திகளில் கேட்டேன். இயற்கை அழகு நிரம்பிய இந்நகரங்களை எனது சீனப்பயணத்தின்போது நேரில் கண்டு இரசித்திருக்கிறேன். மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதிகளை மனக்கண்ணால் பார்த்து வேதனையடைகிறேன். பாதிப்புக்குள்ளான இந்கரங்களின் மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கேயம் பி. நந்தகுமார்

கான்சூ மாநிலத்தில் சோச்சியூ மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலச்சரிவால் ஏற்பட்ட உயரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன். உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இதற்கு தங்கள் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவாக திரும்புவதை எதிர்பார்க்கின்றேன். அதற்கான செயல்பாடுகளை விரைவாக எடுத்துவரும் சீன அரசுக்கும் பல்வேறு வாரியங்களுக்கும் பாராட்டுக்கள்.

திருச்சி அண்ணாநகர் வி.டி.இரவிச்சந்திரன்

கான் சூ மாநிலத்தின் சோச்சியூ மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலச்சரிவில் 1239 பேர் பலியாயிருப்பது மிகுந்த துயரமான சம்பவம். உயிரிழந்தோருக்கு ஆழந்த அஞ்சலி செலுத்தும் வகையில் சீனாவில் 15ம் நாள் நாடு அளவில் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கை நடைபெற்றிருப்பது உறவினர்களை இழந்து தவிப்போருக்கு மனஆறுதலை தரும். நமது நேயர்கள் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தார்வழி பி.முத்து

சீனாவின் கான்சூ மாநிலத்தின் சோச்சியூ மாவட்டத்தில் நிகழ்ந்த கடும் நிலச்சரிவில் அதிகம் பேர் உயிர் இழந்ததை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்த சீன சாகோதரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். மேலும் ஆகஸ்ட் 15ம் நாளை துக்க நாளாக கடைபிடித்து இந்நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதையும் கேட்டேன். சீனத் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பை முதலிடத்தில் வைத்து, நிலச்சரிவு நிகழ்ந்தவுடன் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, பேரிடர் நீக்க மீட்புதவிப்பணிகளை விரைவுபடுத்தி வருவது பாராட்டுக்குரியது.

தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்

வெளிநாட்டு உதவிப்பணியில் சீனாவின் சாதனை என்ற செய்தி விளக்கம் கேட்டேன். சீனா தனது வளர்ச்சியை நனவாக்கும் அதே வேளையில் பொருளாதார அடிப்படையில் வறுமையாகவுள்ள வளரும் நாடுகளுக்கு தன்னால் இயன்ற நிதி உதவிகளை வழங்கி அந்த நாடுகளின் வளர்ச்சியில் பங்கு கொண்டு நட்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் அந்நாடுகளின் மக்கள் மனங்கிலும் நன்மதிப்பை பெற்று வருவது பாராட்டுக்குரிய செயல்பாடாகும். இதுவரை சுமார் 120 வளரும் நாடுகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ள சீனாவின் சாதணை தொடர வாழ்த்துக்கள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040