பெருந்துறை பல்லவி.கே.பரமசிவன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் பெய்த கடும் மழையாலட நிலச்சரிவு நிகழ்ந்து, உயிரிழப்பும், உடமைகள் இழப்பும் ஏற்பட்டிருப்பதை அறிந்தேன். இன்னலில் தவிக்கின்ற மக்களுக்கு சீன அரசு தேவையான ஏற்பாடுகள் செய்துவருவது மனநிறைவு தருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கேயம் பி.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் தென்பகுதி மட்டும் 14 முறை புயல் மழையால் பாதிக்கப்பட்டதை நமது வானொலி மூலம் அறிந்தேன். மோசமான வானிலையே இதற்கு காரணமாகிவிட்டது. இதனால் கடுமையான உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் கான்சூ மாநிலத்தில் ச்சிசூயு பிரதேசத்தில் ஏற்பட்டது. தாம் வாழும் இடத்தில் நிகழக்கூடிய இயற்கை சீற்றங்கள் பற்றிய விழ்பபுணர்வை மக்கள் பெற்று அதற்கு தகுந்தவாறு ஆயத்தப் பணிகளில் ஈடுபட வேண்டுமென நிபுணர்கள் கூறியுள்ளது எதிர்கால இடர்களை தவிர்க்க சிறந்த அறிவுரை.
முனுகபட்டு பி,கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
சிச்சுவான் மாநிலத்தில் கடும்மழை பொழிந்து ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் மழைத் தொடரும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது கவலையடைய செய்கிறது. மீண்டும் மழை பெய்தால், ஏற்கெனவே பாதிக்கப் பட்டுள்ளோர் நிலைமை மோசமாகும். புதிய இடர்களும் அதிகரிக்கும். ஆயினும் அரசின் முன்னேற்பாடுகளால் இதனை சமாளிக்க முடியும் என்றே கருதுகிறேன். மேலும், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் கேட்ட சுவை மிகுந்த சிச்சுவான் கோழிக்கறி நூடுல்ஸ் பற்றிய செய்முறை விளக்கம், எனது சி்ச்சுவான் பயணத்தின்போது காரமான கோழிக்கறி உணவை ருசித்து சாப்பிட்டதை நெஞ்சில் மலர வைத்தது.
வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
உங்கள் குரல் நிகழ்ச்சியில், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம் வழங்கிய பெருந்துறை கருத்தரங்கின் 5வது பகுதியை கேட்டேன். பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய உரை இடம்பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அவரது உரை மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும், சீன இசை நிகழ்ச்சியில் தைவான் பாடகர்கள் பாடிய சில இனிமையான பாடல்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக, தைவான் பாடகி ஒருவர் பாடிய ஆங்கிலப் பாடல் என்னைப் பெரிதும் கவர்ந்தது.
ஏரிக்காடு பூசாரிப்பாளையம் பூபதி அனுப்பிய மின்னஞ்சல்
சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் பரங்கிக்காய், ரப்பர் அரிசி, காளான், பட்டானி, சொயாசாஸ், சர்க்கரை அல்லது உப்பு ஆகியவற்றை சேர்த்து சுவையான உணவு தயாரிக்கலாம் என்பதை கற்று தந்தார்கள். இவ்வுணவு உப்புமா போல இருக்கும் என நினைக்கிறேன். இரப்பர் அரிசிக்கும், சாதாரணை அரிசிக்கும் உள்ள வேறுபாட்டை அறிய தந்நதால் சிற்பபாக இருக்கும்.
மீனாட்சிபாளையம் கா.அருண் அனுப்பிய மின்னஞ்சல்
நோய் மற்றும் பிற காரணிகளால் உடல் ஆற்றலை இழந்தோருக்கு ஆற்றலை அளிக்கும் கருவி பற்றி அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் கேட்டேன். உடல் உறுப்புகள் செயலிழந்தோருக்கு மறுபிறவி அளிப்பதாய் இக்கருவி விளங்கும். அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள இக்கருவியின் பயன்பாடு விரைவில் அனைத்து நாடுகளுக்கும் பரவவேண்டும் என விரும்புகிறேன்.
சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில், பெல்ஜியம் காட்சியகம் பற்றி விளக்கப்பட்டது. கண்ணாடிக்கு பெயர் போன பெல்ஜியம் சாக்லேட்டுக்கும் புகழ் பெற்றிருப்பதை சீன வானொலி நிகழ்ச்சி மூலம் அறிந்தோம். சக்லேட்டுகளால் செய்யப்பட்ட விதவிதமான உருவங்கள் பார்வையாளர்களை கவர்வது உறுதி. ஒவ்வொரு நாளும் ஒரு நாட்டு அரங்கத்தைப் பற்றி சீன வானொலி மூலமாக அறிந்து கொள்வது, பொருட்காட்சியை பற்றிய முழு தகவல்களையம் அறிந்து கொள்ளும் மனநிறைவை ஏற்படுத்துகிறது.
ஈரோடு மலர் ரமேஷ் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலியை இணையத்தளப் பக்கங்களில் உலா வந்தேன். சிற்றலை வானொலியில் கேட்பதை விட இணையத்தில் தெளிவாக பார்க்க, கேட்க நன்றாக உள்ளது. வானொலியில் இடத்தின் பெயரை மட்டும் தானே கேட்க முடிகிறது. ஆனால் இணையத்தில் அந்த இடத்தையே நிழற்படங்கள் மூலம் பார்த்து இரசிக்க முடிகிறது.
உத்திரக்குடி சு. கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் கூனான் அரங்கு பற்றி ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் கேட்டேன். நகர உன்னத உலகத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தைய மற்றும் இனறைய நிலையை விளக்கியது கூனானின் முழு அழகையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மதிப்பீடுகளை சுட்டிக்காட்டும் தாள் மற்றும் மூங்கிலால் உருவாக்கப்பட்ட அரங்கு உண்மையில் இயற்கையின் வரப்பிரசாதமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சேந்தமங்கலம் கு.சுந்தரம் அனுப்பிய மின்னஞ்சல்
சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சீனாவில் சங், சிங் வம்சகாலங்களில் தௌ மதம் மிக சிறப்பாக வளர்ந்ததையும், பழங்கால சூழ்நிலைக்கேற்ப வழிபாடுகளும் விழாக்களும், கூடவே மூடபழக்க வழக்கங்களும் இருந்ததை அறிந்து கொண்டேன். இந்து மதத்திலுள்ள பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்ததற்கு ஒத்தான, ஒரு திரவத்தை உண்டால் நீண்டநாள் வாழலாம் நம்பிக்கை தௌ மதத்திலும் இருந்துள்ளது. இரு மதங்களுக்கு இடையே சில ஒற்றுமையை இதன் மூலம் அறிய முடிந்தது.
புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
ஷங்காய் உலக வர்த்தக் பொருட்காட்சி உலகெங்கும் பிரமாதமாக பேசப்பட்டு வரும் வேளையில் அவற்றில் இடம்பெறும் அரங்குகள் பற்றி விவரமாக சிறப்பு நிகழ்ச்சியில் கேட்டு இரசித்தேன். நேரில் வந்து கண்டுகளிக்க முடியாத ஏக்கம் இன்று உங்களால் நனவாகியது. 5000 ஆண்டுக்கால வரலாற்றையும், 30 ஆண்டுகால வளர்ச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற சீன அரங்கை இந்நிகழ்ச்சி மனதில் நிழலாட செய்தது. பண்டைக்கால பேர்ரசர்களின் கால நாகரிகம் பண்பாடு மற்றும் சீனாவின் மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்களின் அரங்குகளில் காணப்படுகின்ற அறிவியல் விந்தைகள் பார்வையாளரின் மனதை குளிர வைப்பதோடு, அதிகப் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதில் ஐயமில்லை.