• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
  2010-08-26 09:16:07  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை அன்பான நேயர்களே! நேயர் நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்கள் கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் தொகுத்து வழங்குவது, கலையரசி தமிழன்பன். இந்த பகுதியில் பத்து நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை கேளுங்கள்.

தமிழன்பன் உங்களது கருத்தை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இடம்பெறுகின்றன.

கலை முதலாவதாக, இலங்கை ஏறாவூரிலிருந்து எம் ஜூனைசா சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்களை, அவற்றின் முக்கியத்துவம், பொருள் அனைத்தையும் விளக்கும் வகையில் நமது வானொலியில் இடம்பெறும் பண்பாட்டு தகவல்கள் மிகவும் சிறப்பு. சீனா பற்றிய பல புதிய சுவையான கருத்துகளை இதன் மூலம் அறிய முடிகிறது.

தமிழன்பன் அடுத்ததாக, கோவை என்.வெங்கடாசலம் தெற்காசிய நாடுகளில் சீன தலைமை அமைச்சரின் பயணம் பற்றி அனுப்பிய கடிதம். ஜப்பான், தென் கொரியா, மியன்மார் ஆகிய நாடுகளுக்கு சென்ற சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ், புதிய உடன்படிக்கைகளில் கையப்பமிட்டுளள்தை செய்திகளில் கேட்டேன். சீன தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இரதரப்பு வளர்ச்சியை தூண்டும் வழிமுறைகளில் ஒன்றாக மாறிவருகிறது.

கலை தொடர்வது, திருச்சி அண்ணாநகர் வி.டி.இரவிசந்திரன் செய்திகள் பற்றி எழுதிய கடிதம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பார்வையாளரின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதை அறிய முடிந்தது. மேலும், இஸ்ரேல் தனது பண்பாட்டை சிறந்த முறையில் வெளிகாட்டும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை அரங்கு நாளில் நடத்தியிருக்கிறது. தனிப்பட்ட அரங்கை கட்டியமைத்து, யூத தேசத்தின் நீண்ட வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்கள், புதிய உயர் தொழில் நுட்பம், நவீன வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இஸ்ரேல் பெற்றுள்ள முன்னேற்றங்களையும் வெளிப்படுத்துவது பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும்.

தமிழன்பன் இனி, வெண்ணாந்தூர் முஜிப்பூர் ரஹூமான் அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். முதியோர் பல்கலைக்கழகம் பற்றி பல தகவல்களை இதில் அறிய முடிந்தது. இங்குள்ள ஆசியரியர்கள் பலர் ஓவியர்கள் என்றும், இப்பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் அதிக கலைகளை கற்றுக் கொள்கிறார்கள் என்றும் அறியவந்தோம். இங்கு நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் சிறப்பு ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு தலைசிறந்த பயிற்சி அளிக்கப்படுவதையும் இந்நிகழ்ச்சி அறிய தந்தது.

கலை அடுத்து, கடையாலுருட்டி எம்.பிச்சைமணி சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, வரலாற்று சிறப்பு மிக்க திபெத் பேரரசர் கல்லறைகள் குறிந்த விளக்கம் இக்கட்டுரையில் இடம்பெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், அவை எதிர்கால தலைமுறையினரால் பார்வையிடப்பட்டு, ஆராயப்படுவதற்கு மதிப்புக்குரியவையாக உள்ளன. வரலாற்றுப் பதிவுகள்படி, ஒவ்வொரு பேரரசர் கல்லறையிலும் அதிக மதிப்புள்ள தொல்பொருட்களும் நகைகளும் புதைக்கப்பட்டுள்ளதை அறிய தந்த சீன வானொலிக்கு நன்றிகள்.

தமிழன்பன் தொடர்வது, மெட்டாலா எஸ்.பாஸ்கர் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். பெருந்துறையில் நடைபெற்ற கருத்தரங்கின் முதல் பகுதியினை கேட்டேன். நேயர்கள் கேட்ட வினாக்களின் அடிப்படையில் தி.கலையரசி, செல்வம், பல்லவி பரமசிவன் மூவரும் கலந்துரையாடி செல்லிடப்பேசியிலும் இணையவசதியை பயன்படுத்துவது பற்றிய தகவலோடு மலர்ந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள்.

கலை இனி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பற்றி குடியாத்தம் டி.சுடர்கொடி எழுதிய கடிதம் .இந்திய அரங்கு சிறந்த ஒப்பனையில் ஒளிர்வதை கேட்டு மகிழ்ந்தேன். தாச்மஹால், அரைவட்ட புத்தர் கோவில், காசி போன்ற வடிவமைப்புகள் உள்பட அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை நேரில் காண மனம் ஏங்குகிறது.

தமிழன்பன் அடுத்தாக, சென்னை எஸ்.ரேணுகாதேவி தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இந்நிகழ்ச்சி சற்று கடினமாக இருந்தாலும், மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. இன்னும் சற்று நிதானமாக சொன்னால் குறித்துக் கொள்ள வசதியாக இருக்கும். மொத்தத்தில் அன்றாட சீன மொழி நிகழ்ச்சி, உலகில் அதிக மக்களால் பேசப்படும் சீன மொழியை கற்றுக் கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு

கலை தொடர்வது, இசை நிகழ்ச்சி பற்றி மதுரை திருமங்கலம் பி.கதிரேசன் எழுதிய கடிதம். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் கிராமப் பகுதிகளில் பூக்கும் மஞ்சள் நிற பூக்கள் பற்றிய பாடல் மிகவும் இனிமையாக இருந்தது. இசையை இரசிப்பதற்கு மொழி தடையல்ல என்பதை இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் உணர்த்தின. என் மனதை கொள்ளைகொண்டது சீன இசை நிகழ்ச்சி.

தமிழன்பன் இனி, இலங்கை காத்தான்குடியிலிருந்து எம்.எம்.பாத்திமா சீன வானொலியின் செய்தி சேவையை பாராட்டி எழுதிய கடிதம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகள் 20 நிமிடங்களில் சுருக்கமாக வழங்கப்படுகிறது. இதில் உலகின் முக்கிய நிகழ்வுகள் அறிவிக்கப்படுகின்றன. பல தகவல்களை உடனுக்குடன் வழங்கி அளப்பரிய சேவையை ஆற்றி வருவதால் தான் உலகளவில் சீன வானொலிக்கு நேயர்கள் அதிகரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040