• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் பகுதியில் பத்து பேர் தெரிவித்த கருத்துக்கள்
  2010-09-10 16:57:37  cri எழுத்தின் அளவு:  A A A   








மதுரை 20 என். இராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் கான்சூ மாநிலத்தின் சோச் சு மாட்டம் கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவுடன், வெளிநாடு வாழ் சீன மக்கள் மிகவும் கவனம் செலுத்தி உடனடியாக நன்கொடை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வோர் அமைப்புகளும் சில பத்தாயிரம் முதல் சில இலட்சம் அமெரிக்க டாலர் வரை நன்கொடை அளித்துள்ளன. இது வெளிநாடு வாழ் சீன மக்களின் தாய்நாட்டு பற்றை பிரதிபலிக்கிறது.

திருச்சி அண்ணாநகர் வி.டி. இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

கான் சூ மாநிலத்தின் சோச் சூ பிரதேசத்தில் கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் நன்கொடை திரட்டுவதில் ஈடுபட்டதும், உதவித்தொகை மற்றும் பொருட்களை வழங்கியிருப்பதும்; சீன மக்களுக்கிடையிலான சகோதரத்துவ மனப்பான்மையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், சீனாவின் ஹாங்காங் சுற்றுலாப் பயணிகள், பிலிப்பைன்ஸில் கடத்தப்பட்ட சம்பவத்தையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கேள்விப்பட்டு மிகவும் துயருற்றேன். தனது சுயநலத்திற்காக ஒன்றும் அறியாத வெளிநாட்டவரை பிணையாக பிடிப்பது மிகவும் கேவலமான செயல். பிலிப்பைன்ஸ் அரசு இன்னும் லாவகமாக கையாண்டிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என நினைக்கின்றேன். சீன வானொலி நிலையமும், பாகிஸ்தான் தேசிய வானொலி நிலையமும் ஏற்படுத்தியுள்ள இரு தரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை, சீன வானொலி நிலையத்தின் உலகளாவிய வளர்ச்சியை காட்டுகிறது.

பாண்டிச்சேரி ஜி.இராஜகோபாலன் அனுப்பிய மின்னஞ்சல்

சீன கான் சூ மாநிலத்தின் சோச் சூ பிரதேச மக்களுக்கு நன்கொடை திரட்டி வழங்கிய வெளிநாடு வாழ் சீன மக்களின் செயல்பாடு பாராட்டுதற்குரியது. அவர்கள் தாய்நாட்டின் மீது பற்று கொண்ட மனிதர்கள் மட்டுல்ல.. மனித தெய்வங்கள். இயற்கை சீற்றங்களால் மிகவும் பாதிக்கப்படுவது உயிர்கள் அல்லவா? அனைத்து நாடுகளும் இணைந்து இயற்கை சீற்றங்கள் உலகில் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்திட நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது ஆவல். சோச் சூ பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

செய்தி விளக்கத்தின் மையமாக ஒலித்தது வெளிநாட்டு வாழ் சீனர்களின் மனிதாபிமானம் மிக்க உதவி. தாயக உறவினரை காக்கும் மனவுறுதியுடன் செயல்பட்டு, வெளிநாட்டு வாழ் சீனர்கள் சோச்சு பகுதிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். சீன தேசிய இன மக்களின் அன்பை வெளிப்படுத்திடும் வண்ணம் அவர்கள் குழுக்களாக இணைந்து நிவாரண உதவிகளை மனமுவந்து அளித்துள்ளதை உலகமே கண்டுள்ளது. உதவிக்கரம் நீட்டிய பாரெங்குமுள்ள இதயங்களா பயன்பெற்ற சோச் சூ மக்கள் என்நாளும் நன்றியோடு நினைப்பர்.

வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

ஷாங்காயில் பயணம் மேற்கொண்டு, இந்திய அரங்கு பற்றி அறிந்து கொண்ட கிளிட்டஸ் அவர்கள் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் வழங்கிய தகவல்கள் மிகவும் சிறப்பானவை. எந்த செய்தி ஊடகம் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியாதவை கூட. மேலும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அரங்கு பற்றிய கட்டுரை இடம்பெற்றது. இவ்வரங்கின் துணைத் தலைமைப் பிரதிநிதி அப்துல் வாகித் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் 120 முறை சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளதை அறியும்போது பெரும் வியப்பாக இருந்தது. பாகிஸ்தான் அரங்கிலும் சீனாவுடனான உறவிற்கு பெரும் முக்கியத்துவம் வழங்கியுள்ளதற்கு எனது அன்பான பாராட்டுக்கள்.

விழுப்புரம் எஸ். பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

கான்சு மாநிலத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல் துவக்கப்பள்ளி செயல்பட தொடங்கியதை அறிந்தேன். சீன அரசின் விரைவான நடவடிக்கையால் இது சாத்தியமாகி இருக்கிறது. சீனத் தலைமை அமைச்சரின் நேரடி பார்வையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்கு நிலைமை சீர்பட்டு வருவதை இன்றைய செய்திவிளக்கம் தெளிவாக்கியது. மேலும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் சீன அரங்கில் இடம்பெறும் சீன தொல்பொருட்களின் கண்காட்சி பற்றி அறிந்தேன். ஆயிரமாண்டு தொல்பொருட்களை பார்வைக்கு வைத்து, சீன வரலாற்றை உலகறியச் செய்திருப்பது, பார்வையாளர்களை வியக்க வைக்கும்.

சென்னை சாரல்கண்ணா அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் சந்திர நாள்காட்டிபடி, ஏழாம் திங்களின் ஏழாம் நாள் கொண்டாடப்படும் சீனாவின் பாரம்பரிய ச்சிஷி விழாவை பற்றி அறிந்தேன். இக்காலத்தில் சீன இளைஞர்களால் காதலர் விழாவாக கொண்டாடப்படுவதை கேட்டு வியப்படைந்தேன். பண்டைய சீனாவின் வராலாற்று சிறப்புகளை நிலைநிறுத்தும் ச்சிஷி திருவிழா தனிச்சிறப்பாய் இருப்பதால், இவ்விழா கொண்டாட்டங்களை நேரில் காண்டுகளிக்க வேண்டிய ஒன்றாக கருதுகிறேன்.

பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்

நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஈரோடு எம்.சி பூபதி அவர்கள் சீன வானொலி பற்றி பல தகவல்களுடன், அவரது குடுப்பம், தொழில் மற்று வானொலியின் பயன்கள் என பலவற்றை எடுத்துக்கூறினார் அவரது பெயரை மட்டுமே வானொலியில் கேட்டு வந்த எனக்கு தற்போது அவரை பற்றிய முழு தகவல்களையும் அறிய செய்தது இந்நிகழ்ச்சி.

செந்தலை என்.எஸ்.பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்

ஆகஸ்ட் 28 நாள் இரண்டாவது உலக மனிதநேய நாள் கொண்டாடப்பட்டதை செய்திகளிள் செவிமடுத்தேன். அதனை முன்னிட்டு ஐ.நா. தலைமையகத்தில் நினைவு நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பது மிகவும் சிறப்பான ஏற்பாடு. அதே நாளில் பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பது அந்நாளை மேலும் பொருளுள்ள ஒன்றாக்கிவிட்டது.

மதுரை 20 ஆர். அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்

அடுத்த பத்தாண்டுகளில் சீனவில் நீர் மின்னாற்றல் உற்பத்திச் சாதனங்களின் மொத்த ஆற்றல் 38 கோடி கிலோ வாட்டை எட்டும் என்பதை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மூலம் அறிந்து கொண்டேன். தற்போது சீனாவிலுள்ள நீர் மின்னாற்றல் உற்பத்திச் சாதனங்களின் மொத்த ஆற்றல் 20கோடி வாட்டை தாண்டியுள்ளது. இதனால் சீனா உலகில் மிக பெரிய நீர்மின் ஆற்றல் உற்பத்தி நாடாக மாறியும் உள்ளது. இது, சீனாவின் படிப்படியான விரைவான முன்னேற்றப் பாதையை நமக்கு உணர்த்துகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040