• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
10 நண்பர்கள் பங்கெடுத்து கருத்துக்கள்
  2010-09-24 14:35:30  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை அன்பான நேயர்களே! செப்டம்பர் 15ம் நாள் இடம் பெறும் நேயர்நேரம் நிகழ்ச்சியின் கடிதப் பகுதியில் மொத்தம் 10 நண்பர்கள் பங்கெடுத்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். படியுங்கள்.

தமிழன்பன். நான் தமிழன்பன். நேயர்களின் கருத்துக் கடிதங்களை தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

கலை கடிதங்கள் எழுதியும் மின்னஞ்சல்கள் அனுப்பியும் சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகளை தெரிவித்து வரும் அனைத்து நேயர் நண்பர்களுக்கும் எங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம். தற்பொது எமக்கு கருத்து கடிதங்கள் எழுதிவரும் அன்பர்கள் நிகழ்ச்சிகளை கேட்டுவிட்டு கடிதங்கள் எழுதாமல் இருப்போரை கடிதங்கள் எழுத தூண்ட வேண்டுமென்று கேடடுக் கொள்கின்றோம்.

தமிழன்பன் தொடர் ஆதரவை தரும் நேயர் அன்பர்கள் ஆளுக்கொருவரை தேர்ந்தெடுத்து கடிதங்கள் எழுத தூண்டலாமே!

கலை இன்றைய கடிதப்பகுதியில் முதலாவதாக, இலங்கை காத்தான்குடியிலிருந்து எம்.ஐ.எம்.பிரசாத் எழுதிய கடிதம். பல்சுவை நிகழ்ச்சிகளால் காதுகளை குளிர செய்கிறாய். இதழ்களால் கண்களுக்கு விருந்தளிக்கிறாய். மக்கள் சீனம் என்று மக்களோடு இணைகிறாய். நடபுப்பாலம் என்று நண்பனாய் மாறுகிறாய். வரலாற்று சுவடு என்று வரலாற்றை சொல்லுகிறாய். உணவு அரங்கம் என்று விருந்து அளிக்கிறாய். கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நான் உனக்கு தரும் ஆதரவை அளக்க முடியாது.

தமிழன்பன் அடுத்தாக, சென்னை எஸ்.ரேணுகாதேவி ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். ஒவ்வொரு நாளும் ஒரு நாட்டின் அரங்கு, அதன் சிறப்பியல்புகள் என பல தகவல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறன. உலகப் பொருட்காட்சியில் இடம்பெறும் அரங்குகளை சென்று பார்க்க முடியாத பலருக்கும் இந்நிகழ்ச்சி வழங்கும் தகவல்கள் மூலம் அங்குள்ள நிலைமையை அறிந்து கொள்ள முடிகிறது.

கலை தொடர்வது, செய்திவிளக்கம் பற்றி ஆர்.கோபிநாதம்பட்டி சீ.பாரதி எழுதிய கடிதம். தற்போதுள்ள உண்மையான திபெத் பற்றியதாக இவ்விளக்கம் அமைந்தது தலாய்லாமா, தவறான வழிளையும், தனது மக்களுக்கு எந்தவித பயனளிக்காத செயல்பாடுகளையும், பிரிவினைக் கருத்துகளையும் கூறிவருகிறார். ஆனால் சீன அரசு மக்களுக்கு செயல்படுத்திவரும் நலம்தரும் திட்டங்கள், திபெத் தன்னாட்சி பிரதேசம் எதிர்கால வளர்ச்சி காணும் திட்டம், இன்றைய நிலையில் முன்னேற்றம், புதிய நலத்திட்டங்கள் பற்றி இவ்விளக்கத்தில் அறிந்து கொண்டேன்.

தமிழன்பன் இனி, வெண்ணாந்தூர் முஜிப்பூர் ரகுமான் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். நட்புறவு தொடர்பான சில சொற்றோடர்களின் மீளாய்வாகவும், பெய்ஜிங்கிலுள்ள ஹூதொங் தொடர்பான சொற்றொடர்களை கற்றுத்தருவதாகவும் இன்றைய நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. இவ்வகுப்பில் கற்பிக்கப்பட்ட சில சொற்களை கற்றுக்கொண்டு பயிற்சி செய்தோம்.

கலை அடுத்து, விழுப்புரம் எஸ்.சேகர் சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சேவல் பற்றிய தகவலோடு சீனாவின் சந்திர நாள்காட்டியின் படி சேவல் ஆண்டில் பிறந்தவர்கள் கொண்டிருக்கும் பொதுவான பண்புகள் இன்றைய நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. அவ்வாண்டில் பிறந்த பல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தகவல் அளித்தது, இந்நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

தமிழன்பன் தொடர்வது, மதுரை 20 அமுதாராணி செய்திவிளக்கம் பற்றி அனுப்பிய கடிதம். சர்வதேச அணுஆயுத குறைப்பு மாநாட்டில் சீனா தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. அணு ஆயுதங்களை பன்முகங்களிலும் குறைத்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதிலும், எந்த நிலையிலும் எப்போதும் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதிலும் ஊன்றி நிற்பதாக தெரிவித்துள்ளது. இந்த சிறந்த நிலைப்பாடு பன்னாட்டு அரங்கில் சீனாவின் மதிப்பை உயர்த்தும்.

கலை இனி, சீன வானொலியின் தமிழ்ப்பிரிவின் கடிதத் தொடர்பு பற்றி நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் எழுதிய கடிதம். எங்களுடைய கடிதங்களை பெற்றவுடன் பதில் கடிதம் உடனடியாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு உடனடி பதில் அனுப்புவது, நேயர்களை ஊக்கப்படுத்தி பாராட்டுகிறது. எனவே கடிதத்தொடர்பு பொறுப்பில் சிறப்பாய் சேவையாற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழன்பன் அடுத்தாக, இலங்கை மட்டகளப்பிலிருந்து என்.எப்.மிஸ்னா சீன தமிழொலி பற்றி அனுப்பிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகள் காதுக்கும், பொது அறிவுக்கும் விருந்தளிக்கின்றன. சீன தமிழொலி இதழோ கண்களுக்கு விருந்து படைக்கிறது. சீனாவின் பல முக்கிய இடங்களை பல நிழற்படங்களோடு பார்த்து, வாசித்து அறிந்து கொள்ள இது உதவுகிறது. சீனாவின் இடங்களை பற்றி அதிகமாக அறியும்போது அவ்விடங்களில் பயணம் செய்யும் ஆர்வம் மேலிடுகிறது.

கலை தொடர்வது, முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் கரி வெளியேற்ற குறைப்பில் சீனாவின் முயற்சி பற்றி எழுதிய கடிதம். புவி வெப்பமேறலை குறைக்கும் வகையில் சீனா கரி குறைந்த பொருளாதாரத்தை கொண்டுவர பாடுபடுவது வரவேற்புக்குரியது. அரசின் கோரிக்கைக்கு சீன மக்கள் ஒத்துழைப்பு வழங்கி கரி வெளியேற்ற குறைப்பில் பங்காற்றி வருகின்றனர். அதிக கரி வெளியேற்றம் செய்யும் தொழிற்சாலைகளை புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி கரி வெளியேற்றத்தை குறைப்பதும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால் வேறு நிலைக்கு மாற்றுவதும், வாகனப் பயன்பாட்டை குறைப்பதும் கரி வெளியேற்ற அளவை கட்டுபடுத்த உதவும்.

தமிழன்பன் இனி, தேனி கே.சக்திவேல் மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சூரியற்றலை கொண்டு இயங்கும் விமானம் முதல் முறையாக 26 மணிநேரம் பறந்துள்ள செய்தியை அறிவித்தீர்கள். சூரிய வெப்பத்தை மின்னற்றலாக்கி பகலில் மட்டுமல்ல இரவிலும் இயக்கக்கூடிய வகையில் இந்த விமானம் பறந்துள்ளது நவீன உலகின் சிறந்த சாதனை.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040